PM Modi: கோடிக்கணக்கான மக்களின் அன்பும், நம்பிக்கையும் ஒவ்வொரு நொடியும் சேவை செய்ய தூண்டுகிறது - பிரதமர் மோடி
மக்களின் நம்பிக்கையும், அன்பும்தான் ஒவ்வொரு நொடியும் நாட்டுக்கு சேவை செய்யத் தூண்டுகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணமாக ஜப்பான், பப்புவா நியூ கினியா மற்றும் ஆஸ்திரேலியா சென்றிருந்தார். மூன்று நாடுகளிலும் அவருக்கு அந்நாட்டு தலைவர்களும், அங்கு வாழும் இந்தியர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த நிலையில், மூன்று நாடுகள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று இந்தியா திரும்பினார். நாடு திரும்பிய அவருக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, விமான நிலைய வாசலில் பிரதமர் மோடியின் ஆதரவாளரான நஜப்கரைச் சேர்ந்த நர்ஷித் அலி என்பவர் அதிகாலை 3 மணியில் இருந்தே மோடியை வரவேற்பதற்காக காத்திருந்தார்.
தனது கைகளால் வரைந்த பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் காத்திருந்த அவர், கடந்த 9 ஆண்டுகளாக பிரதமர் மோடியின் பக்தர் தான் என்றும், மோடி மீது தான் அன்பு வைத்துள்ளதாகவும், அவர் உலகளவில் நம் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார் என்றும் கூறினார். மேலும், எனது மதத்தை விட எனது நாடு முன்னணியில் உள்ளது என்றும் அவர் கூறினார்.
ये करोड़ों देशवासियों का प्रेम और विश्वास ही है, जो मुझे नई ऊर्जा से भर देता है और हर पल देश सेवा के लिए प्रेरित करता है। https://t.co/twvuQ2yhh0
— Narendra Modi (@narendramodi) May 25, 2023
நமது ஏபிபி லைவ்வில் ஒளிபரப்பான இந்த செய்தியை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, கோடிக்கணக்கான நாட்டு மக்களின் அன்பும், நம்பிக்கையும்தான் என்னுள் புதிய ஆற்றலை நிரப்பி ஒவ்வொரு கணமும் நாட்டுக்கு சேவை செய்யத் தூண்டுகிறது என்று பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடியின் இந்த பதிவிற்கு கீழே பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். பிரதமர் மோடி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் சென்றிருந்தபோது அந்தநாட்டு பிரதமர், பிரதமர் மோடியை நீங்கள் மிகவும் பிரபலம் என்றும், நீங்கள்தான் பாஸ் என்றும் கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், பப்புவா நியூ கினியா நாட்டிற்கு சென்றிருந்தபோது அந்தநாட்டு பிரதமர் மோடியின் கால்களை தொட்டு வணங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடத்தை நாளை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இதற்காக டெல்லியில் பல்வேறு கட்சித் தலைவர்களும் குவிந்து வருகின்றனர். இதற்காக, டெல்லியில் பல கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Kumaraswamy: புதிய நாடாளுமன்றம் திறப்பு விழா... நாங்கள் காங்கிரஸின் அடிமை இல்லை.. குமாரசாமி ஆவேசம்
மேலும் படிக்க: அணையில் விழுந்த ஒரு லட்ச ரூபாய் செல்போன்... வீணடிக்கப்பட்ட 21 லட்சம் லிட்டர் தண்ணீர்: அரசு அதிகாரி சஸ்பெண்ட்!