தேர்தல் வந்தாச்சு! டெல்லிக்கு இனி பணமழைதான்.. வாரி வழங்கப்போகும் மோடி!
டெல்லியில் அடுத்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆட்சியை பிடிக்கும் நோக்கில் பல்வேறு வளர்ச்சி பணி திட்டங்களை தொடங்கி வைக்க இருக்கிறார் பிரதமர் மோடி.
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், டெல்லியில் பல்வேறு வளர்ச்சி பணி திட்டங்களை தொடங்கி வைக்க இருக்கிறார் பிரதமர் மோடி.
டெல்லியில் அடுத்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆட்சியை தக்க வைக்க ஆம் ஆத்மி கட்சி பல்வேறு நடவடிக்கைகளை வருகிறது. தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் உள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தல் நேரத்தில் ஜாக்பாட்:
இந்த நிலையில், டெல்லியில் 27 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடிக்க பாஜக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பல்வேறு வளர்ச்சி பணி திட்டங்களை தொடங்க வைக்க உள்ளார் பிரதமர் மோடி.
நாளை மதியம் 12:10 மணியளவில் டெல்லி அசோக் விஹாரில் உள்ள ஸ்வாபிமான் அடுக்குமாடி குடியிருப்பில் குடிசைப்பகுதி மறுவாழ்வு திட்டத்தின் கீழ் ஜுகி ஜோப்ரி (ஜே.ஜே) வீடுகளில் வசிப்பவர்களுக்காக புதிதாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். பின்னர், பயனாளிகளுக்கு சாவிகளை வழங்குகிறார்.
நௌரோஜி நகரில் உலக வர்த்தக மையம் மற்றும் சரோஜினி நகரில் பொதுத் தொகுப்பு (ஜிபிஆர்ஏ) வகை-2 குடியிருப்புகள் ஆகிய இரண்டு நகர்ப்புற மறுமேம்பாட்டுத் திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
வாரி வழங்கும் மோடி:
நௌரோஜி நகரில் உள்ள உலக வர்த்தக மையம் 600 க்கும் மேற்பட்ட பாழடைந்த குடியிருப்புகளை அதிநவீன வணிக அடுக்கு மாடி குடியிருப்புகளாக மாற்றுவதன் மூலம் இப்பகுதியை புதுப்பித்துள்ளது. இது மேம்பட்ட வசதிகளுடன் சுமார் 34 லட்சம் சதுர அடி பிரீமியம் வணிக இடத்தை வழங்குகிறது.
துவாரகாவில் ரூ.300 கோடியில் கட்டப்பட்டுள்ள சிபிஎஸ்இ-யின் ஒருங்கிணைந்த அலுவலக வளாகத்தையும் பிரதமர் திறந்து வைக்கிறார். இதில், அலுவலகங்கள், ஆடிட்டோரியம், மேம்பட்ட தரவு மையம், விரிவான நீர் மேலாண்மை அமைப்பு ஆகியவை அடங்கும். சுற்றுச்சூழலுக்கு உகந்த இக்கட்டடம் உயர் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் இந்திய பசுமை கட்டிட கவுன்சிலின் பவள மதிப்பீட்டு தரத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது.
இறுதியாக, டெல்லி பல்கலைக்கழகத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான மூன்று புதிய திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். இதில் கிழக்கு டெல்லியில் உள்ள சூரஜ்மல் விஹாரின் கிழக்கு வளாகத்தில் ஒரு கல்வி வளாகமும் துவாரகாவில் உள்ள மேற்கு வளாகத்தில் ஒரு கல்வி வளாகமும் அடங்கும். நஜாஃப்கரின் ரோஷன்புராவில் கல்விக்கான அதிநவீன வசதிகளைக் கொண்ட வீர சாவர்க்கர் கல்லூரி கட்டுவதும் இத்திட்டங்களில் அடங்கும்.