India China Border: இந்திய எல்லையில் சீனா உருவாக்கும் கிராமம் - அமைதி காக்கும் பாஜக அரசு - காங்கிரஸ் தாக்கு!
எல்லையில் சீனாவின் செயல்பாடு கவலை அளிப்பதாய் உள்ளது என பென்டகன் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.இத்தனை நடந்த பின்னும் நமது பிரதமர் சீனாவின் பெயரை உச்சரிக்க கூட பயந்து மௌனம் காக்கிறார்.
இந்திய எல்லைக்குள் சீனப் படைகள் நுழைந்துள்ளதை பிரதமர் மோடி மறைத்துள்ளதாகவும், நாட்டு மக்களிடம் உண்மை நிலையை தெரிவிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
சில தினங்களுக்கு முன்னதாக, சர்வதேச உறவில் சீனாவின் ஆதிக்கநிலை பற்றிய அறிக்கையை அமெரிக்கா பாதுகாப்புத் துறை (பென்டகன்) அந்நாட்டு காங்கிரஸிடம் தாக்கல் செய்தது. அதில், அருணாச்சல பிரதேசத்தில் ராணுவ தளமாக செயல்படக்கூடிய 100 வீடுகளுக்கு மேல் உள்ள கிராமத்தை சீனா கட்டி உள்ளதாக தெரிவித்தது.
நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கெரா கூறியதாவது, " அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் ராணுவ தளமாகவும், மக்கள் வாழும் பகுதியாகவும் இருக்கக் கூடிய கிராமத்தை சீனா உருவாக்கியுள்ளது. இதனை, ஆதாரப்பூர்வமாக பென்டகன் அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், எல்லையில் சீனாவின் செயல்பாடு கவலை அளிப்பதாய் உள்ளது என பென்டகன் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.இத்தனை நடந்த பின்னும் நமது பிரதமர் சீனாவின் பெயரை உச்சரிக்க கூட பயந்து மௌனம் காக்கிறார்" என்று தெரிவித்தார்.
அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இந்தியா-சீனா கிழக்கு எல்லைப் பகுதியில் சுமார் 90,000 ச.கி.மீ பகுதியும் தன்னுடையது என சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. மேலும், லடாக் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 38,000 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பை சீனா சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது. மேலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், 5,180 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பை “சீனா-பாகிஸ்தான் எல்லை ஒப்பந்தம் 1963-ன்” படி பாகிஸ்தான் சீனாவுக்கு சட்ட விரோதமாக கொடுத்துள்ளது.
முன்னதாக, கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து இந்தி-சீன எல்லைப் பகுதியில் தற்போதைய நிலையை மாற்ற ஒருதலைபட்சமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மே மாத தொடக்கத்தில், கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவப் படைகள் வழக்கமான ரோந்து மேற்கொள்ள சீனப்படையினர் இடையூறு செய்ததால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மேற்கு பகுதியில் கொங்கா லா, கோக்ரா, பான்காங் ஏரியின் வடகரை ஆகிய இடங்களில், சீனத்தரப்பு இந்திய எல்லைக்குள் ஊடுவ பல முறை முயற்சிகள் மேற்கொண்டன.
இந்நிலையில், அருணாச்சலப் பிரதேச உண்மையான எல்லைக் கோட்டுப் பகுதி அருகே சீனப் படைகள் நுழைந்துள்ளதை எச்சரித்து கடந்தாண்டு அருணாச்சலப் பிரதேச பாஜக மக்களவை உறுப்பினர் தபிர் கோ பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். பின்னர், இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்," இந்திய எல்லைக்குள் சீனப் படைகள் நுழையவும் இல்லை, நமது எல்லைச் சாவடிகள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்பதை பிரதமரும், உள்துறை அமைச்சரும் உறுதியாக தெளிவுபடுத்தியுள்ளனர்" என்று தெரிவித்தார்.
அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இந்தியா-சீனா கிழக்கு எல்லைப் பகுதியில் சுமார் 90,000 ச.கி.மீ பகுதியும் தன்னுடையது என சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. மேலும், லடாக் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 38,000 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பை சீனா சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது. மேலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், 5,180 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பை “சீனா-பாகிஸ்தான் எல்லை ஒப்பந்தம் 1963-ன்” படி பாகிஸ்தான் சீனாவுக்கு சட்ட விரோதமாக கொடுத்துள்ளது.
முன்னதாக, கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து இந்தி-சீன எல்லைப் பகுதியில் தற்போதைய நிலையை மாற்ற ஒருதலைபட்சமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மே மாத தொடக்கத்தில், கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவப் படைகள் வழக்கமான ரோந்து மேற்கொள்ள சீனப்படையினர் இடையூறு செய்ததால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மேற்கு பகுதியில் கொங்கா லா, கோக்ரா, பான்காங் ஏரியின் வடகரை ஆகிய இடங்களில், சீனத்தரப்பு இந்திய எல்லைக்குள் ஊடுவ பல முறை முயற்சிகள் மேற்கொண்டன.
The BJP, based on its habit, rejected the concerns of its own MP from Arunachal Pradesh.
— Congress (@INCIndia) November 6, 2021
It has been 17 months since PM Modi gave a clean chit to China.
All of this has been done to save the fake image of the PM.
- Shri @pawankhera #DefeatBJPSaveIndia pic.twitter.com/hnoRkxoe2d
இந்நிலையில், அருணாச்சலப் பிரதேச உண்மையான எல்லைக் கோட்டுப் பகுதி அருகே சீனப் படைகள் நுழைந்துள்ளதை எச்சரித்து கடந்தாண்டு அருணாச்சலப் பிரதேச பாஜக மக்களவை உறுப்பினர் தபிர் கோ பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.பின்னர்,செய்தியாளர்களிடம் பேசிய அவர்," இந்திய எல்லைக்குள் சீனப் படைகள் நுழையவும் இல்லை, நமது எல்லைச் சாவடிகள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்பதை பிரதமரும், உள்துறை அமைச்சரும் உறுதியாக தெளிவுபடுத்தியுள்ளனர்" என்று தெரிவித்தார்.
முன்னதாக, அருணாச்சல பிரதேசம் மாநிலம் தவாங் எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகில் உள்ள ராணுவ நிலைக்கு அருகில் சீனப் படைகள் வந்தன. இருந்தாலும், பெரும் தள்ளுமுள்ளு மோதல் போக்கு தவிர்க்கப்பட்டது. அதேபோன்று, 2021 செப்டம்பர் மாத இறுதியில், சீனப் படையைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் உத்தராகாண்ட் மாநிலத்தின் பாராஹோட்டி பகுதியில் இந்திய எல்லையைக் கடந்து நுழைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியன. சீன ராணுவத்தினர் இந்தியாவின் பாலம் உள்பட பல பொதுச் சொத்துகளைச் சேதம் செய்துவிட்டு வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.
Galwan Valley Clash: கல்வான் பள்ளத்தாக்கு மோதல் யார் காரணம்? சீனாவின் கருத்துக்கு இந்தியா பதில்
பிரதமரின் இந்த பொறுப்பற்ற போக்கு கவலை அளிப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. நம் நாட்டின் ஒரு அங்குல நிலத்திற்குக் கூட யாரும் சொந்தம் கொண்டாட முடியாத அளவிற்கு, நாடு வலிமையுடன் இருக்க வேண்டும். 2020, ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு, எல்லைப் பகுதியில் மாற்றங்கள் மேற்கொண்ட சீனாவின் அத்துமீறல்கள் குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்தியா-சீனா இராணுவத்திற்கு இடையிலான பேச்சுவார்த்தை: எல்லையில் சீனா ராணுவம் குவிப்பு!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்