மேலும் அறிய

PM Modi: ஜப்பான், பப்புவா நியூ கினியா, ஆஸ்திரேலியாவிற்கு புறப்படுவதற்கு முன்பு பிரதமர் அளித்த அறிக்கை

PM Modi’s 3-nation tour: பிரதமர் நரேந்திர மோடி இன்று முதல் 24-ம் தேதி வரை 6 நாள் சுற்றுப்பயணமாக ஜப்பான், ஆஸ்திரேலியா பப்புவா நியூ கினியா,  ஆகிய 3 நாடுகளுக்கு செல்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று முதல்  (மே 19ம் தேதி) 24-ம் தேதி வரை 6 நாள் சுற்றுப்பயணமாக ஜப்பான், ஆஸ்திரேலியா பப்புவா நியூ கினியா,  ஆகிய 3 நாடுகளுக்கு செல்கிறார். இந்த சுற்றுப்பயணத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் பங்கேற்கிறார்.

பிரதமர் வெளிநாடு பயண விவரம்:

பிரதமர் மோடி ஆறு நாள் சுற்றுப்பயணமாக மூன்று நாடுகளுக்கு செல்கிறார். இந்தப் பயணத்தில் 40 -க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். 12-டிற்கும் மேற்பட்ட உலக தலைவர்களை சந்திக்கிறார்.  ஜி.-7 உச்சி மாநாடு, க்வாட் உச்ச மாநாடு, ஆஸ்திரேலிய பிரதமருடனான சந்திப்பு, பப்புவா நியூ கினியாவில் நடைபெறும் Forum for India- Pacific Islands Cooperation (FIPIC)  மாநாடு, ஹிரோஷிமாவில் மகாத்மா காந்தியின் மார்பளவு உருவச்சிலை திறப்பு உள்ளிட்டவை பிரதமரின் பயண நிகழ்ச்சியில் இடம்பெற்றுள்ளன.  

பிரதமர் ஜப்பான் பயணம்:

ஜப்பான் நாட்டிற்கு இன்று (மே,19,2023) சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் ஹிரோசிமா நகரில் நடைபெறும் ஜி-7 மாநாட்டில் பங்கேற்கிறார். ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடோவின் அழைப்பில் பேரில் மாநாட்டில் பங்கேற்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார். ஜப்பான் பிரதமரை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சியளிப்பதாக மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், ”அண்மையில் இந்தியாவில் நடைபெற்ற இந்திய- ஜப்பான் உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக இங்கு வந்திருந்த பிரதமர்  கிஷிடாவை மீண்டும் ஒரு முறை சந்திக்கவிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த ஆண்டு ஜி20 அமைப்பிற்கு இந்தியா தலைமைத்துவம் ஏற்றுள்ள வேளையில், ஜி7 உச்சிமாநாட்டில் எனது பங்கேற்பு முக்கியத்துவம் வாய்ந்துள்ளது. உலகம் சந்தித்து வரும் சவால்களை இணைந்து எதிர்கொள்வதன் அவசியம் குறித்து ஜி-7 நாடுகள் மற்றும் இதர அழைப்பு நாடுகளுடன் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதில் ஆவலாக இருக்கிறேன். ஹிரோஷிமா ஜி-7 உச்சிமாநாட்டில் பங்கேற்கும்  சில தலைவர்களுடன் பேச இருக்கிறேன்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜி-7 உச்சி மாநாடு

 பொருளாதார ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் வளர்ந்த 7 நாடுகளைக் கொண்ட ஜி-7 கூட்டமைப்பில் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 7 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த நாடுகளின் தலைவர்கள் ஜப்பான் சென்றுள்ளனர்.  மேலும், இந்தியா, ஆஸ்திரேலியா, பிரேசில், இந்தோனேஷியா, தென் கொரியா, வியட்நாம், கமரோஸ், குக் தீவுகள் ஆகிய நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி இன்று ஜப்பான் செல்கிறார்.

இன்று (19.05.2023) தொடங்கி வரும் 21- ஆம் தேதி வரை நடக்கும் உச்சி மாநாட்டின் முதல் நாள் நிகழ்வாக, ஹிரோஷிமா நகரிலுள்ள  நினைவரங்க பூங்காவில் மாநாட்டிற்கு வருகை தந்த உலக நாடுகளின் தலைவர்களை ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா வரவேற்றார். 
 ஹிரோஷிமா தாக்குதலின் நினைவரங்கில் உலக நாடுகளின் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

ஜி 7 உச்சி மாநாட்டில்,  வரும் ஞாயிற்றுக்கிழமை (21.05.2023) உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேரடியாக கலந்து கொள்கிறார். இதனை உக்ரைன் அரசு உறுதிப்படுத்தியுள்ளது.

ஹிரோஷிமாவில் மகாத்மா காந்தியின் உருவச்சிலை திறப்பு:

ஜப்பான் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக ஹிரோஷிமா நகரில் மகாத்மா காந்தியின் மார்பளவு உருவச்சிலையை திறந்து வைக்கிறார்.

க்வாட் உச்சி மாநாடு

மே 22-ம் தேதி ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற இருந்த க்வாட் உச்சி மாநாடு, ஜப்பானில் ஹிரோஷிமா நகரில் உலக தலைவர்களின் ஆலோசனை கூட்டமாக  நடைபெறுகிறது. அமெரிக்காவில் நிலவி வரும் கடன் உச்சவரம்பு நெருக்கடி காரணமாக அதிபர் ஜோ பைடன் தனது ஆஸ்திரேலிய பயணத்தை ஒத்திவைப்பதாக அறிவித்தார். இதனை தொடர்ந்து சிட்னியில் நடைபெற இருந்த க்வாட் உச்சி மாநாடு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் ஆண்டனி அல்பானிஸ் அறிவித்தார். ஜி-7 உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பங்கேற்பதை வெள்ளை மாளிகை உறுதி செய்துள்ளது.

 பப்புவா நியூ கினியா பயணம்:

ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்டு அங்கிருந்து பப்புவா நியூகினியா செல்கிறார் பிரதமர் மோடி. அங்கு நடைபெறும் இந்திய பசிபிக் நாடுகள் கூட்டமைப்பு மாநாட்டில் (Forum for India- Pacific Islands Cooperation (FIPIC)) பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

பப்புவா நியூ ஜீனியா பிரதமர்  ஜேம்ஸ் மாராபேவுடன் இணைந்து இந்திய-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு மன்றத்தின் மூன்றாவது உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி தலைமை வகிக்கிறார்.  பருவநிலை மாற்றம் மற்றும் நிலையான வளர்ச்சி, திறன் கட்டமைப்பு மற்றும் பயிற்சி, சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம், உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார மேம்பாடு போன்ற  முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் குறித்து பசிபிக் தீவு நாடுகளின் தலைவர்கள் கலந்தாலோசிக்க உள்ளனர்.

இந்திய-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு மன்றத்தின் கூட்டத்திற்கு பிறகு, பப்புவா நியூ கினியா நாட்டின் கவர்னர் ஜெனரல்  பாப் டாடே, பிரதமர்  ஜேம்ஸ் மாராபே மற்றும் உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளும் பசிபிக் தீவு நாடுகளின் தலைவர்களுடனும் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார்.

ஆஸ்திரேலியா பயணம்:

அதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா பிரதமர்  ஆண்டனி அல்பானிஸ் அழைப்பை ஏற்று அந்நாட்டின் சிட்னி நகருக்குச் செல்கிறார் பிரதமர் மோடி. “இந்த ஆண்டு மார்ச் மாதம் டெ ல்லியில் நடைபெற்ற  இந்திய- ஆஸ்திரேலிய முதல் வருடாந்திர உச்சி மாநாட்டின் முக்கிய முடிவுகளை முன்னெடுத்துச் செல்வதற்கும்,  நமது இருதரப்பு உறவுகளை ஆய்வு செய்வதற்கும் இந்தப் பயணம் வாய்ப்பாக இருக்கும்;  இருதரப்பு பேச்சுவார்த்தையை மிகவும் எதிர்பார்க்கிறேன்.” என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய நாட்டின் தொழில்துறை தலைவர்களுடனும், சிட்னியில் உள்ள இந்திய சமூகத்தினருடனும் பிரதமர் மோடி கலந்துரையாட உள்ளார். மூன்று நாடுகளில் பயணத்தை முடித்து கொண்டு  மே- 24 ம் தேதி பிரதமர் மோடி இந்தியா திரும்புகிறார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Girl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan : Bus Accident : போதை தலைக்கேறிய அரசு ஓட்டுநர் காவல் நிலையத்தில் புகுந்த பஸ் சென்னை அடையாறில் பரபரப்புAdani News : அச்சச்சோ..கைதாகும் அதானி?2,100 கோடி லஞ்சம் கொடுத்தாரா?அமெரிக்க நீதிமன்றம் அதிரடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் -  அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
Vijay vs Thirumavalavan: விஜய்க்கு வில்லனா? தளபதியா? திருமா முடிவுக்காக தி.மு.க. வெயிட்டிங்!
Vijay vs Thirumavalavan: விஜய்க்கு வில்லனா? தளபதியா? திருமா முடிவுக்காக தி.மு.க. வெயிட்டிங்!
Embed widget