PM Modi Assets : அசையும் சொத்துகள்.. வாகனங்கள்.. மோதிரங்கள்.. பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு இவ்வளவா?
பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு 2.23 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு 2.23 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.
பெரும்பாலானவை வங்கியில் வைப்பு தொகையாக உள்ளது. காந்தி நகரில் உள்ள சொந்த நிலத்தை நன்கொடை செய்ததால் அவரின் பெயரில் அசையா சொத்து எதுவும் இல்லை. மோடி வெளியிட்ட சமீபத்திய சொத்து கணக்கின் மூலம் இது தெரிய வந்துள்ளது.
பத்திரம், பங்கு, பரஸ்பர நிதி என எதிலும் மோடி முதலீடு செய்யவில்லை என்பதும் அவருக்கு சொந்தமாக வாகனங்கள் எதுவும் இல்லை என்றும் தெரிய வந்துள்ளது. அவரிடம் சொந்தமாக நான்கு தங்க மோதிரங்கள் இருக்கிறது என்பதும் தெரியவந்துள்ளது.
கடந்தாண்டை ஒப்பிடுகையில், பிரதமர் மோடியின் அசையும் சொத்துகளின் மதிப்பு 26.13 லட்சம் ரூபாய் உயர்ந்துள்ளது. ஆனால், அவரிடம் அசையா சொத்துகள் எதுவும் இல்லை. முன்னதாக, 2021ஆம் ஆண்டு, மார்ச் 31-ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில், அவருக்கு சொந்தமாக 1.1 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துகள் இருந்துள்ளன.
பிரதமர் அலுவலகம் புதுப்பித்த விவரத்தின்படி, மொத்தமாக மோடிக்கு 2 கோடியே 23 லட்சத்து 82 ஆயிரத்து 504 ரூபாய் மதிப்பிலான சொத்துகள் உள்ளன. அக்டோபர் 2002 இல், குஜராத் முதலமைச்சராக மோடி பொறுப்பு வகித்தபோது மூன்று பேருடன் இணைந்து அவர் ஒரு வீட்டு மனையை வாங்கியுள்ளார்.
சமீபத்திய சொத்து விவரத்தின்படி, "மூன்று உரிமையாளர்களுடன் கூட்டாக வைத்திருந்த அசையா சொத்தான வீட்டு மனையை மோடி நன்கொடையாக வழங்கியுள்ளார். அதில் அவருக்கு 25 சதவிகிதம் பங்கு இருந்தது. அவரிடம் ரொக்கமாக 35,250 ரூபாய் பணமும் தபால் நிலையத்தில் தேசிய சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தின் படி 9 லட்சத்து 5 ஆயிரத்து 105 ரூபாய் வைத்து தொகையாக சேமிக்கப்பட்டுள்ளது. மோடியின் பெயரில் 1 லட்சத்து 89 ஆயிரத்து 305 ரூபாய் மதிப்பில் ஆயுள் காப்பீட்டு திட்டம் உள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
2022 மார்ச் 31 ஆம் தேதி நிலவரப்படி, பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் சொத்து மதிப்பு ₹2.54 கோடியாக உள்ளது. 2.97 கோடி மதிப்பில் அவருக்கு அசையா சொத்துகள் உள்ளன.
29 மத்திய அமைச்சர்களில், கடந்த நிதியாண்டில் தங்களுடைய சொந்த மற்றும் தங்களைச் சார்ந்தவர்களின் சொத்துக்களை அறிவித்தவர்களில் தர்மேந்திர பிரதான், ஜோதிராதித்ய சிந்தியா, ஆர்.கே. சிங், ஹர்தீப் சிங் பூரி, பர்ஷோத்தம் ரூபாலா மற்றும் ஜி கிஷன் ரெட்டி ஆகியோரும் அடங்குவர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்