PM Modi in Tears | ’இது ஒரு நீண்ட யுத்தம்’ - கொரோனா மரணங்கள் பற்றி பேசி கண்கலங்கிய பிரதமர் மோடி
’நீங்கள் இதுவரை இந்த வைரஸை வெற்றிகரமாகக் கட்டுக்குள் வைத்திருக்கிறீர்கள்.ஆனால் அலட்சியமாக விட்டுவிட வேண்டாம். ஏனென்றால் இது ஒரு நீண்ட நெடிய யுத்தமாக இருக்கப்போகிறது’ எனக் கூறினார்.
’கொரோனா இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்த எத்தனையோ வேலைகள் செய்தோம் இருந்தும் பல உயிர்களைப் பறிகொடுத்துள்ளோம்’ எனக் கண்கலங்கியபடி பேசியுள்ளார் பிரதமர் மோடி. தனது தொகுதியான வாரணாசியின் மருத்துவப் பணியாளர்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, இவ்வாறு பேசியுள்ளார். காணொளி வழியாகத் தனது தொகுதியின் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களின் சேவையைப் பாராட்டிப் பேசிய நரேந்திர மோடி ‘ஜஹான் பிமார், வஹான் உபசார் (எங்கே நோயோ அங்கே சேவை) என்கிற புதிய கோஷத்தை முன்வைத்தார். கிராமங்களில் வீடுவீடாகச் சென்று கொரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சைகளை மேற்கொள்வது குறித்துப் பேசுகையில் அவர் இந்த கோஷத்தை முன்வைத்தார். மேலும் மருத்துவப் பணியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, ’நீங்கள் இதுவரை இந்த வைரஸை வெற்றிகரமாகக் கட்டுக்குள் வைத்திருக்கிறீர்கள். ஆனால் அலட்சியமாகிவிட வேண்டாம். ஏனென்றால் இது ஒரு நீண்ட நெடிய யுத்தமாக இருக்கப்போகிறது’ எனக் கூறினார்.
Also Read: உயிரை பறித்த கருப்பு பூஞ்சை தொற்று : கொரோனாவை தொடர்ந்து இன்னொரு அச்சுறுத்தலா?