மேலும் அறிய

மும்பை: நாயை நாய்ன்னு சொன்னது ஒரு குத்தமா? - முதியவரை தாக்கிய நாயின் உரிமையாளர்!

குற்றம் சாட்டப்பட்டவர் தனது செல்ல நாயை "குட்டா (நாய்)" என்று குறிப்பிட வேண்டாம், அதன் பெயரை - லூசி என்று குறிப்பிடுமாறு கூறியுள்ளார்.

மும்பையில் தான் செல்லமாக வளர்க்கும் நாயை "குட்டா (நாய்)" என்று அழைத்ததைக் கண்டு ஆத்திரமடைந்த 25 வயது நபர் ஒருவர், 60 வயது ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநரை தாக்கி, முகத்தில் காயம் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

செல்லபிராணியை நாய் என்று அழைத்ததால் அடி

குற்றம் சாட்டப்பட்ட ராகுல் போஸ்லே என்னும் நபர், தனது செல்லப்பிராணியின் பெயரை லூசி என்று அழைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். போலீஸ் அதிகாரிகளின் கூற்றுப்படி, போஸ்லேவுக்கு எதிராக ஐந்து முதல் ஆறு குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன, மேலும் அவர் மே 2021 முதல் மே 2022 வரை மும்பை நகரத்திலிருந்து தலைமறைவாக இருந்துள்ளார். "எப்.ஐ.ஆர்.க்குப் பிறகு, போஸ்லே கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார்" என்று பாண்டுப் காவல் நிலையத்தின் காவல் துணை ஆய்வாளர் அபிஜித் தெகாவாடே கூறினார். 

மும்பை: நாயை நாய்ன்னு சொன்னது ஒரு குத்தமா? - முதியவரை தாக்கிய நாயின் உரிமையாளர்!

நாயை தேடிய போஸ்லே

செவ்வாய்க்கிழமை இரவு 10.30 மணியளவில் 60 வயது சிவசாகர் பாட்டீல், வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அவர் பாண்டுப்பில் உள்ள MHADA காலனியை அடைந்தபோது, அங்கு தனது நாயை தேடிக்கொண்டிருந்த ராகுல் போஸ்லே அவரை அழைத்து சாலையில் ஏதாவது நாய் செல்வதை பார்த்தீர்களா என்று கேட்டுள்ளார். பாட்டீல் "குட்டாவை (நாயை)" பார்க்கவில்லை என்று பதிலளித்தார். இது போஸ்லேவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. 

தொடர்புடைய செய்திகள்: மருமகளால் வந்த வில்லங்கம்..! ரோஜர் பின்னியின் பி.சி.சி.ஐ. தலைவர் பதவி பறிபோகிறதா..? நடந்தது என்ன..?

நாய் இல்லை… லூசி

குற்றம் சாட்டப்பட்டவர் தனது செல்ல நாயை "குட்டா (நாய்)" என்று குறிப்பிட வேண்டாம், அதன் பெயரை - லூசி என்று குறிப்பிடுமாறு கூறியுள்ளார். பாட்டீலின் கூற்றுப்படி, ஆத்திரம் அடைந்த போஸ்லே தனது ஆட்டோவை உதைக்கத் தொடங்கியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. அவரை தகாத வார்த்தைகளில் திட்டிய போஸ்லே அவரது காலரைப் பிடித்து கொலை மிரட்டல் விடுத்ததாக பாதிக்கப்பட்டவர் குற்றம் சாட்டினார்.

மும்பை: நாயை நாய்ன்னு சொன்னது ஒரு குத்தமா? - முதியவரை தாக்கிய நாயின் உரிமையாளர்!

வழக்குப்பதிவு செய்து கைது

இந்த சண்டையின் போது, ​​போஸ்லே 60 வயது முதியவரின் முகத்தில் குத்தியதாகவும், அவரது உடலில் பலத்த அடிகளை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. "எனக்கு காயங்கள் ஏற்பட்டன மற்றும் என் முகத்தில் இருந்து இரத்தம் வர ஆரம்பித்தது," என்று முதியவர் காவல்துறைக்கு அளித்த வாக்குமூலத்தில் கூறினார். பிறகு சுற்றி இருந்தவர்கள் தலையிட்டு தடுத்துள்ளனர். மேலும் பாட்டீல் முலுண்ட் பொது மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுள்ளார். நள்ளிரவில், பாதிக்கப்பட்டவர் பாண்டுப் காவல்துறையை அணுகி தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்தார். அவரது அறிக்கை மற்றும் மருத்துவ அறிக்கையின் அடிப்படையில், இந்திய தண்டனை சட்டப் பிரிவுகள் 324 (அபாயகரமான ஆயுதங்கள் அல்லது வழிமுறைகளால் தானாக முன்வந்து காயப்படுத்துதல்), 506(2) (கொலைமிரட்டல்) 504 (அமைதியைக் கெடுக்கும் நோக்கில் அவமதிப்பு) ஆகியவற்றின் கீழ் போலீஸார் எஃப்ஐஆர் பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து போஸ்லே கைது செய்யப்பட்டதாக பாண்டுப் காவல் நிலைய மூத்த ஆய்வாளர் நிதின் உன்ஹானே தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

ISRO: ஒரே ஆண்டில் 120 இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் ராஜினாமா - நட்டாற்றில் திட்டங்கள், காரணம்? புதிய கட்டுப்பாடுகள்
ஒரே ஆண்டில் 120 இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் ராஜினாமா - நட்டாற்றில் திட்டங்கள், காரணம்? புதிய கட்டுப்பாடுகள்
ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் 10 நிமிடத்தில் கேஸ் சிலிண்டர் டெலிவரி! இனி கவலை இல்லை!
ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் 10 நிமிடத்தில் கேஸ் சிலிண்டர் டெலிவரி! இனி கவலை இல்லை!
10 கிலோ எல்பிஜி சிலிண்டர்: இனி சுமை இல்லை! வணிகர்கள், வீடுகளுக்கு புதிய வசதி.
10 கிலோ எல்பிஜி சிலிண்டர்: இனி சுமை இல்லை! வணிகர்கள், வீடுகளுக்கு புதிய வசதி.
Chennai-Bengaluru Bullet Train: மணிக்கு 320 கி.மீ வேகம்! தமிழ்நாட்டின் முதல் புல்லட் ரயில் பாதை... வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
மணிக்கு 320 கி.மீ வேகம்! தமிழ்நாட்டின் முதல் புல்லட் ரயில்! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

வீடியோ

G Pay மூலம் லஞ்சம் வாங்கிய தவெக ஊராட்சி தலைவர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!
விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய் போட்ட ரகசிய திட்டம்.. பிளான் போட்டு சுக்கு நூறாக உடைத்த இபிஎஸ்.? ஆர்.பி.உதயகுமார் சொன்ன ஷாக் தகவல்
விஜய் போட்ட ரகசிய திட்டம்.. பிளான் போட்டு சுக்கு நூறாக உடைத்த இபிஎஸ்.? ஆர்.பி.உதயகுமார் சொன்ன ஷாக் தகவல்
Medical Admissions Reservation : மாணவர்களுக்கு குஷி.! மருத்துவ உள் இட ஒதுக்கீடு 10 % அதிகரிக்கப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
மாணவர்களுக்கு குஷி.! மருத்துவ உள் இட ஒதுக்கீடு 10 % அதிகரிக்கப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
CM Vijay: லிஸ்ட் போட்ட யூட்யூபர்..! தூக்கி அடிக்கப்பட்ட IAS அதிகாரிகள் - திமுக அதிகாரிகளா? ஊழல் பேர்வழிகளா?
லிஸ்ட் போட்ட யூட்யூபர்..! தூக்கி அடிக்கப்பட்ட IAS அதிகாரிகள் - திமுக அதிகாரிகளா? ஊழல் பேர்வழிகளா?
சம்பவ இடத்திற்கு சென்ற கனிமொழி - ”சட்டசபையில பொய் சொல்லல, யாரையும் காப்பாற்ற துடிக்கல” TVK பதிலடி
சம்பவ இடத்திற்கு சென்ற கனிமொழி - ”சட்டசபையில பொய் சொல்லல, யாரையும் காப்பாற்ற துடிக்கல” TVK பதிலடி
CM Vijay: சொன்னதை செய்த விஜய்.. லஞ்சம் வாங்கிய தவெக நிர்வாகி அதிரடி கைது.. கட்சியில் இருந்து நீக்கம்!
CM Vijay: சொன்னதை செய்த விஜய்.. லஞ்சம் வாங்கிய தவெக நிர்வாகி அதிரடி கைது.. கட்சியில் இருந்து நீக்கம்!
TN Weather Update: 19 மாவட்டங்களுக்கு வெப்ப அலை வார்னிங் - சென்னையில் மழை? தமிழக வானிலை அறிக்கை
19 மாவட்டங்களுக்கு வெப்ப அலை வார்னிங் - சென்னையில் மழை? தமிழக வானிலை அறிக்கை
Gold and silver rate today : ஏறிய வேகத்தில் குறைந்தது தங்கம் விலை.! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ...
ஏறிய வேகத்தில் குறைந்தது தங்கம் விலை.! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ...
Maruti Brezza: நெக்ஸான், வென்யு ரெடியா..! மாருதியின் புதிய SUV-க்கான முன்பதிவு தொடக்கம் - அப்க்ரேட்கள் எப்படி?
நெக்ஸான், வென்யு ரெடியா..! மாருதியின் புதிய SUV-க்கான முன்பதிவு தொடக்கம் - அப்க்ரேட்கள் எப்படி?
Embed widget