தலிபான்களுக்கு வெட்கமே இல்லாம ஆதரவு.. அம்பலப்படுத்தவேண்டும் - யோகி ஆதித்யநாத்
ஆப்கனிஸ்தானை கைப்பற்றிய தலிபான்களுக்கு ஆதரவாக பேசும் அரசியல்வாதிகளை கண்டிக்கும் விதமாக மழைக்கால கூட்டத்தொடரில் மூன்றாவது நாளில் யோகி பேசினார்
ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியதிலிருந்து தலிபான்களை ஆதரித்து வந்த அனைவரையும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தாக்கி பேசினார்.
உபி சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடரின் மூன்றாவது நாளில் பேசிய ஆதித்யநாத், தலிபான் தீவிரவாதிகளை "வெட்கமின்றி ஆதரிப்பவர்கள்" அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசினார்.
ஆப்கனிஸ்தானில் தாலிபான்களின் ஆதிக்கம் மேலோங்கி, பிரதமர் உட்பட பலரும் நாட்டை விட்டு வெளியேற, விமானங்களில் தொங்கி சென்றவர்கள் விழித்து பலியான செய்திகளும் வந்து அனைவரையும் பரபரப்பில் ஆழ்த்தியது. நாட்டுமக்கள் பரபரப்பில் நாட்டை விட்டு செல்லும் செய்திகளும் புகைப்படங்களும் மொத்த உலகையும் உளுக்கிக்கொண்டிருக்கும்போது, தாலிபான் மக்களுக்கு நல்லது செய்வார்கள் என்று ஆதரவு கரம் நீட்டுபவர்களையும் பார்க்கமுடிந்தது. அவர்கள் மீதான நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. இந்தியாவில் சில கட்சியினரே தாலிபானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தது குறித்து யோகி ஆதித்யநாத் எதிர்க்கருத்து தெரிவித்திருக்கிறார்.
"இந்தியாவில் சிலர் தாலிபான்களை ஆதரிக்கிறார்கள். அங்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பல கொடுமைகள் நடக்கின்றதுக்கு. ஆனால் சிலர் வெட்கமின்றி தலிபான்களை ஆதரிக்கின்றனர். இந்த முகங்கள் அனைத்தும் அம்பலப்படுத்தப்பட வேண்டும்" என்று முதல்வர் கூறினார். சில அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரிய உறுப்பினர்கள் மற்றும் எஸ்பி தலைவர்கள் தலிபான்களுக்கு வெளிப்படையாக ஆதரவளித்து அமைப்புக்கு பாராட்டுக்களை குவித்ததை தொடர்ந்து யோகியின் இந்த கருத்துக்கள் வந்துள்ளன.
புதன்கிழமை, சமாஜ்வாதி கட்சி (எஸ்பி) எம்பி ஷபிகுர் ரஹ்மான் பார்க் மற்றும் இரண்டு பேர் மீது தலிபான்கள் கையகப்படுத்தப்பட்டது குறித்து "சுதந்திர போராட்டம்" என்ற கருத்துக்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பார்க் ஆப்கானிஸ்தானில் ஆட்சி மாற்றத்தை ஆதரித்து, தலிபான்கள் தங்கள் நாட்டின் சுதந்திரத்திற்காக போராடுகிறார்கள் என்றும் ஆப்கான் மக்கள் அதன் தலைமையின் கீழ் சுதந்திரத்தை விரும்புகிறார்கள் என்றும் கூறினார்.
AIMPLB செயலாளர் மௌலானா உம்ரைன் மஹ்ஃபுஸ் ரஹ்மானி சமூக ஊடகங்களில் தலிபானின் கையகப்படுத்தல் ஒரு அசாதாரண வெற்றி, ஒரு மிகப்பெரிய முடிவு மற்றும் கடவுளின் உதவியுடன் போர்கள் வென்றதற்கான அடையாளம் என்று கூறியிருந்தார். இருப்பினும், ஐம்பல்ப வாரியம் கருத்துக்கும் தங்களுக்கும் சம்மந்தமில்லை என்று விடுத்துக்கொண்டது. மற்றும் அதன் சில உறுப்பினர்களின் கருத்தை ஏற்கவில்லை என்றும் கூறியிருந்தது. ஒரு நாடே அடக்குமுறையையும், போரையும் எதிர்கொண்டிருக்கும்போது, அங்குள்ள உண்மை நிலை அறியாமல் கருத்துக்கள் தெரிவிக்க வேண்டாம் என்றும் பலர் சோசியல் மீடியாக்களில் கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர். பல மாநிலங்களில் அந்தந்த அரசாங்கம் குறிப்பிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருவது மட்டுமின்றி, சமூக வலைதளங்களிலும் பகிரப்படும் கருத்துகளை உற்றுநோக்கியுள்ளார்கள்.