மேலும் அறிய

Cooking Oil: சமையல் எண்ணெய்க்கு கட்டுப்பாடு..! இனிமே இப்படி தான் விற்பனை செய்யனும் - மத்திய அரசு உத்தரவு

Cooking Oil: சமையல் எண்ணெயை இனி குறிப்பிட்ட 9 கொள்ளளவில் மட்டுமே பேக் செய்து விற்பனை செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Cooking Oil: சமையல் எண்ணெயை இனி 200 மில்லி தொடங்கி 20 லிட்டர் வரையிலான, 9 நிலையான பேக்குகளில் மட்டுமே விற்பனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

எண்ணெய் விற்பனைக்கு கட்டுப்பாடுகள்:

மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, சமையல் எண்ணெய் பேக்கேஜிங் விதிமுறைகளில் மிகப்பெரிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது, இனி நாட்டில் விற்பனை செய்யப்படும் சமையல் எண்ணெய்கள் ஒன்பது நிலையான கொள்ளளவில் மட்டுமே பேக் செய்யபட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பயனர்கள்  வெவ்வேறு ப்ராண்டுகள் மற்றும் தயாரிப்புகளின் விலைகளை ஒப்பிட்டுப் பார்ப்பதை எளிதாக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகாரங்கள் துறை, சட்ட அளவியல் கட்டமைப்பின் கீழ் உள்ள நிலையான செயல்பாட்டு நடைமுறையைத் திருத்தியுள்ளது. இந்தப் புதிய விதிமுறைகள், உள்நாட்டில் தயாரிக்கப்படும் மற்றும் இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய் ஆகிய இரண்டிற்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

9 நிலையான பேக்கேஜ் அளவுகள்:

திருத்தப்பட்ட விதிகளின்படி, சமையல் எண்ணெய்கள் பின்வரும் பேக்கேஜ் அளவுகளில் மட்டுமே இனி விற்பனை செய்யப்படும். அதாவது 200 மிலி, 500 மிலி, 1 லிட்டர், 2 லிட்டர், 3 லிட்டர், 4 லிட்டர், 5 லிட்டர், 15 லிட்டர் மற்றும் 20 லிட்டர். இந்த விதிமுறைகள், பாமாயில், சோயாபீன் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், கடுகு எண்ணெய், நிலக்கடலை எண்ணெய், எள் எண்ணெய், அரிசித் தவிடு எண்ணெய், பருத்தி விதை எண்ணெய் மற்றும் மக்காச்சோள எண்ணெய் உள்ளிட்ட பலவகையான சமையல் எண்ணெய்களுக்கும் பொருந்தும். மேலும், உற்பத்தியாளர்கள் எண்ணெயின் கனஅளவுடன் அதன் எடையையும் பேக்கேஜிங்கில் குறிப்பிட வேண்டும். உதாரணமாக, லிட்டரில் விற்கப்படும் பொருட்கள், அவற்றின் சமமான எடையை கிலோகிராமிலும் குறிப்பிட வேண்டும்.

சிறிய பேக்கட்களுக்கு விலக்கு

200 மில்லிக்கும் குறைவான சமையல் எண்ணெய் பொட்டலங்களுக்கும், சில சிறிய வகை சமையல் எண்ணெய்களுக்கும் புதிய பேக்கேஜ் விதிமுறைகளிலிருந்து அரசு விலக்கு அளித்துள்ளது. சந்தையில் மலிவு விலையில் சிறிய பொட்டலங்கள் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்வதே இந்த விலக்கின் நோக்கம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மூன்று மாதங்கள் அவகாசம்

திருத்தப்பட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப நடவடிக்கைகளை மேற்கொள்ள உற்பத்தியாளர்கள், பேக்கேஜ் செய்பவர்கள் மற்றும் இறக்குமதியாளர்களுக்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், புதிய தரநிலைகளை முன்கூட்டியே பின்பற்ற விரும்பும் நிறுவனங்கள் உடனடியாக அதனை பின்பற்றலாம். இந்தியாவின் சமையல் எண்ணெய் துறையில் கிட்டத்தட்ட 90 சதவிகிதத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழில் சங்கங்களுடன் கலந்தாலோசித்த பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்:TN Weather Update: இடி, மின்னல் மிரட்ட..! 14 மாவட்டங்களில் இன்று கனமழை, சென்னை? தமிழக வானிலை வார்னிங்

குழப்பங்களுக்கான முற்றுப்புள்ளி

உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடான இந்தியாவில், வழக்கத்திற்கு மாறான மற்றும் நிலையற்ற அளவுகளில் விற்கப்படும் எண்ணெய்களால், சமையலறைக்கு அத்தியாவசியமான ஒரு பொருளுக்கு எந்த பிராண்ட் சிறந்த மதிப்பை வழங்குகிறது என்பதை கண்டறிய முடியாத நிலை உள்ளது. இதுகுறித்து பேசும் இந்திய காய்கறி எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (IVPA) தலைவர் சுதாகர் தேசாய், "தொழில்துறைக்கு சுதந்திரம் அளிப்பதற்காக தரப்படுத்தல் இல்லாத நிலை கொண்டுவரப்பட்டாலும், மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக, இந்த நடைமுறை சந்தையைச் சிதைத்து, பல்வேறு அளவிலான பேக்கேஜ்கள் பெருக வழிவகுத்து, சந்தையில் பரவலான குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதை தவிர்க்கும் வகையான நடவடிக்கை வரவேற்கத்தக்கது” என குறிப்பிட்டுள்ளார்.

 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆன்லைன் பரிவர்த்தனை: வருமான வரி நோட்டீஸ் வராமல் தடுக்க இதைச் சரிபார்க்கவும்!
ஆன்லைன் பரிவர்த்தனை: வருமான வரி நோட்டீஸ் வராமல் தடுக்க இதைச் சரிபார்க்கவும்!
வரிசைக்கு குட்பை! சத்தீஸ்கரில் ரேஷன் ஏடிஎம்: தமிழகத்திலும் வருமா?
வரிசைக்கு குட்பை! சத்தீஸ்கரில் ரேஷன் ஏடிஎம்: தமிழகத்திலும் வருமா?
மஹிந்திரா கார்களுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் வரை சலுகை! முந்துங்கள்!..
மஹிந்திரா கார்களுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் வரை சலுகை! முந்துங்கள்!..
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Anbumani: பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
Kite Festival : காத்தாடி திருவிழா! 2 நாள் விடுமுறையில் குடும்பத்துடன் சென்று ரசிக்கலாம் – அனுமதி இலவசம்; எங்கே தெரியுமா?
காத்தாடி திருவிழா! 2 நாள் விடுமுறையில் குடும்பத்துடன் சென்று ரசிக்கலாம் – அனுமதி இலவசம்; எங்கே தெரியுமா?
Gold and silver rate today : தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய விலை நிலவரம் இதோ..
தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய நிலவரம் இதோ..
CM Vijay DVAC: லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
திமுக ஆட்சியில் ரூ.37 ஆயிரம் EB பில்.. இப்போ ரூ.13 ஆயிரம்.. எனக்கு அதிகமாக வரல.. வசமாக சிக்கிய வைஷாலி!
திமுக ஆட்சியில் ரூ.37 ஆயிரம் EB பில்.. இப்போ ரூ.13 ஆயிரம்.. எனக்கு அதிகமாக வரல.. வசமாக சிக்கிய வைஷாலி!
Embed widget