PM Modi-Xi Jinping: ”பீஸ் வந்தா மாஸ் காட்டலாம்” சீன அதிபரிடம் எடுத்துச் சொன்ன பிரதமர் மோடி - நட்பு முக்கியம்
PM Modi-Xi Jinping: சீன அதிபர் ஜி ஜிங் பிங்கை சந்தித்த இந்திய பிரதமர் மோடி, இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

PM Modi-Xi Jinping: சீன அதிபர் ஜி ஜிங் பிங் உடனனான பேச்சுவார்த்தையின் போது எல்லையில் அமைதியை நிலைநாட்டுவது, நேரடி விமான சேவை போன்ற பல விஷயங்களை பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
சீன அதிபருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை:
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக தியான்ஜின் சென்ற பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜிங் பிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். கடந்த சில வருடங்களாக ஆசியாவின் மிகப்பெரிய நாடுகளான இந்தியா மற்றும் சீனா இடையே நிலவி வரும் பதற்றத்திற்கு மத்தியில் அரங்கேறியுள்ள சந்திப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கஜானில் நடந்த சந்திப்பிற்குப் பிறகு இருநாட்டு தலைவர்களும் சந்தித்துக் கொண்டனர். அப்போது வளர்ச்சியில் இருவரும் வளர்ச்சியில் கூட்டாளிகளே தவிர போட்டியாளர்கள் அல்ல என்பதை மீண்டும் உறுதி செய்தனர். தங்களுக்கு இடையேயான வித்தியாசங்கள் பிரச்னைகளாகக் கூடாது எனவும் இரு நாட்டு தலைவர்களும் வலியுறுத்தியுள்ளனர்.
நேரடி விமான சேவை
இருநாடுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்தும் விதமாக, இந்தியா மற்றும் சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவை தொடங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார். ஆனால், அதற்கான உறுதியான தேதி குறித்து எந்த தகவலும் இல்லை. கொரோனா காலத்தில் நேரடி விமான சேவை தடை செய்யப்பட்டு, சிங்கப்பூர் அல்லது ஹாங் காங் வழியே பயணம் செய்ய அறிவுறுத்தப்பட்டனர். கைலாஷ் மன்ச்ரோவர் யாத்ரா மற்றும் சுற்றுலா விசாக்களை வழங்குவதை குறித்தும் இருநாட்டு தலைவர்களும் வலியுறுத்தியுள்ளனர். இந்த சேவைகளுக்கு பகுதி அளவும் அண்மையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதனை விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுவும் 2020ம் ஆண்டில் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டது.
”உறவு மேம்பட அமைதி அவசியம்”
இருநாடுகளும் சுயாட்சியை பின்பற்ற வேண்டும் என்றும் தங்கள் இடையேயான உறவை மூன்றாவது நாட்டின் பார்வையில் பார்கக்க்கூடாது என்றும், எல்லையில் அமைதி நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். இந்தியாவும் சீனாவும் நண்பர்களாகவும் நல்ல அண்டை நாடுகளாகவும்" தொடர்ந்து இருக்க வேண்டும் என்றும் சீன அதிபர்ஜீ ஜிங்பிங் வலியுறுத்தினார். இருவரும் உலகளாவிய தெற்கின் முக்கியமான உறுப்பினர்கள் என்றும், இரு நாடுகளின் குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்தும் பொறுப்பை இரு தரப்பும் ஏற்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். எல்லைப் பிரச்சினை நம்மிடையேயான ஒட்டுமொத்த உறவை வரையறுக்க இந்தியாவும் சீனாவும் அனுமதிக்கக்கூடாது என்றும், அமைதியை பராமரிக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். இரு நாடுகளும் தங்கள் உறவுகளை ஒரு மூலோபாய மற்றும் நீண்டகால கண்ணோட்டத்தில் கையாள வேண்டும் என்றும், நமது இருதரப்பு உறவுகளின் நிலையான, ஆரோக்கியமான வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும் என்றும்ஜி ஜிங்பிங்வலியுறுத்தினார்.
முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு:
அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைகளால் இந்தியாவின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சீன அதிபர் உடனான இந்த சந்திப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட இருநாடுகள் இடையேயான உறவு மேம்பட்டால், இருநாட்டிற்கும் நன்மை பயக்கும். சீன நிறுவனங்கள் இந்திய சந்தையில் முதலீட்டை பெருக்கி பலன பெற முடியும்,. அதேநேரம், அரிய வகை கனிமங்கள், உரங்கள் மற்றும் சுரங்கப் பணிகளுக்கான இயந்திரங்கள் ஆகியவற்றில் இந்தியாவிற்கு ஆதரவு அளிப்போம் என சீனா உறுதி அளித்துள்ளது.





















