நடிகர் பவன் கல்யாணுக்கு கொரோனா

ஜனசேனா கட்சித் தலைவரும், பிரபல தெலுங்கு நடிகருமான பவன் கல்யாணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US: 

ஆந்திரா மாநிலத்தின் திருப்பதி மக்களவை தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி போட்டியிடுகிறது. இந்த தொகுதியில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக, கடந்த 3-ந் தேதி பவன் கல்யாண் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது, அவர் கட்சி நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் என பலரையும் நேரில் சந்தித்தார். அவரைச் சந்தித்தவர்கள் சிலருக்கு கொரோனா தொற்று இருப்பது பின்னர் தெரிய வந்தது.நடிகர் பவன் கல்யாணுக்கு கொரோனா

இதையடுத்து, நடிகர் பவன் கல்யாணுக்கு மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா நெகட்டிவ் என்று முடிவு வந்தது. இருப்பினும், மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் பவன் கல்யான் தன்னை வீட்டிலே தனிமைப்படுத்திக் கொண்டார். இந்த நிலையில், பவன் கல்யாணுக்கு கடந்த சில தினங்களாக காய்ச்சல் மற்றும் உடல்வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவருக்கு கடந்த 2 தினங்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

நடிகர் பவன் கல்யாணுக்கு பிரபல மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த தகவல்கள் அனைத்தையும் அவரது ஜன சேனா கட்சி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. சமீபத்தில் அவர் நடித்த வக்கீல் சாப் திரைப்படம் ஆந்திராவில் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags: covid 19 bhavan kalyan jana sena vakkil shab

தொடர்புடைய செய்திகள்

கருப்புப்பூஞ்சை மருந்தில் பாகுபாடா? - நீதிமன்றத்தில் மத்திய அரசு மறுப்பு..!

கருப்புப்பூஞ்சை மருந்தில் பாகுபாடா? - நீதிமன்றத்தில் மத்திய அரசு மறுப்பு..!

’பிரதமரை சந்திக்கும் முதல்வர்’ முன் வைக்கப்போகும் கோரிக்கைகள் என்ன ?

’பிரதமரை சந்திக்கும் முதல்வர்’ முன் வைக்கப்போகும் கோரிக்கைகள் என்ன ?

புதுச்சேரியில் முதன் முறையாக சபாநாயகர் நாற்காலியில் இடம்பிடித்தது பாஜக..!

புதுச்சேரியில் முதன் முறையாக சபாநாயகர் நாற்காலியில் இடம்பிடித்தது பாஜக..!

Citizenship Amendment Act: போராட்டம் நடத்துவது தீவிரவாதச் செயல் அல்ல - டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி

Citizenship Amendment Act: போராட்டம் நடத்துவது  தீவிரவாதச் செயல் அல்ல - டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி

Morning News Wrap | காலை 7 மணி முக்கியத் தலைப்புச் செய்திகள்

Morning News Wrap | காலை 7 மணி முக்கியத் தலைப்புச் செய்திகள்

டாப் நியூஸ்

Petrol and diesel prices Today: மாற்றமில்லை நேற்றைய ஏற்றத்தோடு தொடரும் பெட்ரோல், டீசல்!

Petrol and diesel prices Today: மாற்றமில்லை நேற்றைய ஏற்றத்தோடு தொடரும் பெட்ரோல், டீசல்!

BREAKING: யூடியூப் சேனல் அட்மினாக செயல்பட்டதால் நடவடிக்கை : மதனின் மனைவி கிருத்திகா கைது..!

BREAKING: யூடியூப் சேனல் அட்மினாக செயல்பட்டதால் நடவடிக்கை : மதனின் மனைவி கிருத்திகா கைது..!

மதுரை : தாய்மாமாவுடன் திருமண நிச்சயம் : படிக்கும் கனவு பறிக்கப்பட்ட சிறுமி தற்கொலை..!

மதுரை : தாய்மாமாவுடன் திருமண நிச்சயம் : படிக்கும் கனவு பறிக்கப்பட்ட சிறுமி தற்கொலை..!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் செயலராக உமா மகேஸ்வரி ஐ.ஏ.எஸ்., நியமனம்!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் செயலராக உமா மகேஸ்வரி ஐ.ஏ.எஸ்., நியமனம்!