மேலும் அறிய

Pahalgam Attack: திருமணமான 6-வது நாள்.. மனைவி கண் எதிரே கொல்லப்பட்ட நேவி அதிகாரி.. நெஞ்சை உலுக்கும் புகைப்படம்...

பஹல்காமில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில், திருமணமான 6 நாட்களில், தன்னுடைய கணவரை இழந்துள்ளார் ஒரு இளம் பெண். அவர் கணவரின் உடல் அருகே அமர்ந்துள்ள புகைப்படம் பார்ப்போரை சோகத்தில் ஆழ்த்தி வருகிறது.

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நேற்று தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியதில், சுமார் 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதில், திருமணமாகி 6 நாட்களே ஆன நிலையில், ஹனிமூன் வந்த இளம் ஜோடியில், மனைவியின கண் முன்னே கணவர் கொல்லப்பட்ட கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதல்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், சுற்றுலாப் பயணிகள் மீது நேற்று தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. காஷ்மீரின் தெற்கு பகுதியில் உள்ள பஹல்காமை அடுத்த பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் இயங்கும் ரிசார்ட் ஒன்றில், சுற்றுலாப் பயணிகள் கேளிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் சுட்டதில், சுமார் 26 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் ஆண்களை மட்டுமே குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக, சம்பவ இடத்தில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இஸ்லாமியர் அல்லாதவர்களை அவர்கள் சுட்டுக்கொன்றதாக தெரிவிக்கப்படுகிறது.

திருமணமான 6 நாட்களில் கணவரை இழந்த இளம் பெண்

இந்த துப்பாக்கிச் சூட்டில், தனது கணவரை இழந்துள்ளார் ஒரு இளம் பெண். துப்பாக்கிச் சூட்டிற்குப்பின் பேசியுள்ள அவர், தன்னுடைய கணவருடன் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்ததாகவும், அப்போது அங்கு வந்த தீவிரவாதி ஒருவர், தன் கணவரிடம் பெயர் உள்ளிட்ட விவரங்களை கேட்டதாகவும், பின்னர் நீ இஸ்லாமியர் அல்ல எனக் கூறி, கண்ணிமைக்கும் நேரத்தில் அவரை சுட்டுக்கொன்றதாகவும் தெரிவித்துள்ளார். இறந்தவர் கடற்படை அதிகாரி என தெரிகிறது.

இந்த தம்பதிக்கு, திருமணமாகி 6 நாட்கள் தான் ஆவதாக தெரிகிறது. தேனிலவுக்கு வந்த இடத்தில், அவர்களுக்கு இத்தகைய கொடூரம் அரங்கேறியுள்ளது. தனது கணவரின் உடல் அருகே அமர்ந்து அந்த பெண் அழும் காட்சி, தற்போது சமூக ஊடகங்களில் பரவி, பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதோடு, இந்த தீவிரவாத தாக்குதலின் கொடூரத்தையும் படம்பிடித்து காட்டியுள்ளத.

துப்பாக்கிச் சூடு நடத்திய தீவிரவாதிகள், ஒவ்வொரு ஆணிடமும் பெயரை கேட்டு, அவர் இந்துவா, இஸ்லாமியரா என்பதை உறுதி செய்து கொன்றதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். சிலர் இஸ்லாமியர் என்று கூறியும், அதை நம்பாமல், பேன்ட்டை கழற்றச் சொல்லி, பின்னர் சுட்டுக்கொன்றதாக சிலர் கூறியுள்ளனர்.

 

தலைப்பு செய்திகள்

Musk on India Birth Rate: இந்தியாவின் பிறப்பு விகிதம் குறைவு.! 10 ஆண்டுகளில் வரலாறு காணாத சரிவு; எலான் மஸ்க் கவலை
இந்தியாவின் பிறப்பு விகிதம் குறைவு.! 10 ஆண்டுகளில் வரலாறு காணாத சரிவு; எலான் மஸ்க் கவலை
Top 10 News Headlines: மின்வெட்டு உண்மை தான், குக்கரில் வெந்த கஞ்சா, பிசிசிஐ அனுமதி - 11 மணி வரை இன்று
மின்வெட்டு உண்மை தான், குக்கரில் வெந்த கஞ்சா, பிசிசிஐ அனுமதி - 11 மணி வரை இன்று
Cooking Oil: சமையல் எண்ணெய்க்கு கட்டுப்பாடு..! இனிமே இப்படி தான் விற்பனை செய்யனும் - மத்திய அரசு உத்தரவு
சமையல் எண்ணெய்க்கு கட்டுப்பாடு..! இனிமே இப்படி தான் விற்பனை செய்யனும் - மத்திய அரசு உத்தரவு
Cooking Gas Price Hike : காலையிலேயே ஷாக்.! அதிரடியாக உயர்ந்தது வீட்டு சமையல் சிலிண்டர் விலை- எவ்வளவு தெரியுமா.?
காலையிலேயே ஷாக்.! அதிரடியாக உயர்ந்தது வீட்டு சமையல் சிலிண்டர் விலை- எவ்வளவு தெரியுமா.?

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
VCK: இடைத்தேர்தலில் களமிறங்கும் விசிக? தவெக-விடம் எந்த தொகுதியை கேட்கிறார்கள் தெரியுமா?
VCK: இடைத்தேர்தலில் களமிறங்கும் விசிக? தவெக-விடம் எந்த தொகுதியை கேட்கிறார்கள் தெரியுமா?
DMK: பதவி உயர்வு விவகாரம்; 118 உதவி செயற்பொறியாளர்கள் தகுதியற்றவர்களா? திமுக கேள்வி
DMK: பதவி உயர்வு விவகாரம்; 118 உதவி செயற்பொறியாளர்கள் தகுதியற்றவர்களா? திமுக கேள்வி
Musk on India Birth Rate: இந்தியாவின் பிறப்பு விகிதம் குறைவு.! 10 ஆண்டுகளில் வரலாறு காணாத சரிவு; எலான் மஸ்க் கவலை
இந்தியாவின் பிறப்பு விகிதம் குறைவு.! 10 ஆண்டுகளில் வரலாறு காணாத சரிவு; எலான் மஸ்க் கவலை
Trump Mojtaba Meet: “ட்ரம்ப்பையெல்லாம் மொஜ்தபா கமேனி சந்திக்க மாட்டார்“; கட் அண்ட் ரைட்டாக கூறிய ஈரான்
“ட்ரம்ப்பையெல்லாம் மொஜ்தபா கமேனி சந்திக்க மாட்டார்“; கட் அண்ட் ரைட்டாக கூறிய ஈரான்
Netanyahu Vs Trump Vs Iran: ட்ரம்ப்புக்கு தலைவலி.! திட்டியும் அடங்காத நெதன்யாகு.! லெபனான் மீது தாக்குதல்; என்ன செய்யும் ஈரான்.?
ட்ரம்ப்புக்கு தலைவலி.! திட்டியும் அடங்காத நெதன்யாகு.! லெபனான் மீது தாக்குதல்; என்ன செய்யும் ஈரான்.?
CM Vijay: இனிமே லஞ்சம் வாங்குவீங்களா? நகராட்சித்துறையில் லஞ்ச அதிகாரிகள் லிஸ்ட் எடுக்கும் முதலமைச்சர் விஜய்!
CM Vijay: இனிமே லஞ்சம் வாங்குவீங்களா? நகராட்சித்துறையில் லஞ்ச அதிகாரிகள் லிஸ்ட் எடுக்கும் முதலமைச்சர் விஜய்!
Maruti Jimny New Variants: இப்பவாவது விக்குமா.? ஜிம்னியின் இரண்டு புதிய மேம்படுத்தப்பட்ட மாடல்களை அறிமுகம் செய்த மாருதி
இப்பவாவது விக்குமா.? ஜிம்னியின் இரண்டு புதிய மேம்படுத்தப்பட்ட மாடல்களை அறிமுகம் செய்த மாருதி
NEET UG Exam City Slip: நீட் மறுதேர்வு மைய விவரம் வெளியீடு; உடனே காண்பது எப்படி? ஹால் டிக்கெட் எப்போது?
NEET UG Exam City Slip: நீட் மறுதேர்வு மைய விவரம் வெளியீடு; உடனே காண்பது எப்படி? ஹால் டிக்கெட் எப்போது?
Embed widget