Odisha Train accident: ஒடிஷா கோர ரயில் விபத்து.. 230-ஐ கடந்த உயிரிழப்பு எண்ணிக்கை.. பிரபலங்கள் இரங்கல்..
ஒடிஷா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு விளையாட்டு வீரர்கள், திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஒடிஷாவில் மூன்று ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளான நிலையில், உயிரிழப்புகளின் எண்ணிக்கை 230-ஐ கடந்து சென்று கொண்டிருக்கிறது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காயமடைந்து ரத்த தேவை உள்ளவர்களுக்கு ரத்தம் கொடுக்க மருத்துவமனைகளில் ஏராளமான பொதுமக்கள் குவிந்துள்ளனர்.
விளையாட்டு வீரர்கள், திரை பிரபலங்கள் பலரும் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் சல்மான்கான் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: ரயில் விபத்து செய்தியை கேட்க வருத்தமாக இருப்பதாகவும், இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களின் குடும்பத்திற்கு கடவுள் அதை தாங்கும் வலிமை அளிக்கட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.
Really saddened to hear abt the accident,May God rest the souls of the deceased in peace,Protect n give strength to the families n the injured from this unfortunate accident.
— Salman Khan (@BeingSalmanKhan) June 3, 2023
கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: ”ஒடிசா ரயில் விபத்து குறித்து கேள்விப்பட்டு மன வேதனை அடைந்தேன். தனது அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்காக நான் பிராத்திக்கிறேன். விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்” இவ்வாறு தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
Saddened to hear about the tragic train accident in Odisha. My thoughts and prayers go out to the families who lost their loved ones and wishing a speedy recovery to the injured.
— Virat Kohli (@imVkohli) June 3, 2023
நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கும் அவர்களின் அன்புக்குரியவர்களுக்கும் இதயபூர்வமான இரங்கல்கள். இந்த விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்னுடைய பிரார்த்தனைகள். இந்த கஷ்டமான நேரத்தில் அவர்களுக்கு வலிமையும் ஆறுதலும் கிடைக்கட்டும்” இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
நடிகை ப்ரியா ஆனந்த் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது: ”பேரழிவு, ஏற்றுக்கொள்ள முடியாத அலட்சியம் என்று பதிவிட்டுள்ளார்.
நடிகர் அக்ஷய் குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: “ ரயில் விபத்து காட்சிகளை பார்க்கும் போது மனம் நொருங்குகிறது. விபத்தில் காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இந்த கடினமான நேரத்தில் எனது பிரார்த்தனைகள்” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
நடிகர் சிரஞ்சிவி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது: ”ரயில் விபத்தில் ஏற்பட்ட பெரும் உயிரி இழப்புகள் அதிர்ச்சி அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்காக பிரார்த்திக்கிறேன். தற்போது விபத்தில் காயமடைந்து உயிருக்காக போராடி கொண்டிருப்பவர்களை கப்பாற்ற அதிக அளவில் தற்போது ரத்த தேவை இருக்கும். பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தம் கொடுத்து உதவ என்னுடைய ரசிகர்கள் மற்றும் அங்கு அருகில் இருக்கும் மக்களை வேண்டி கேட்டுக் கொள்கிறேன் “ இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
Utterly shocked at the tragic Coromandel express accident in Orissa and the huge loss of lives! My heart goes out to the bereaved families.
— Chiranjeevi Konidela (@KChiruTweets) June 3, 2023
I understand there is an urgent demand for blood units to save lives. Appeal to all our fans and good samaritans in the nearby areas to…
விவேக் அக்னிஹோத்ரி தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது: மூன்று ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதற்கு யார் பொறுப்பு? இந்த காலத்திலும் எப்படி இது நடந்தது. விபத்து துரதிஷ்டவசமானது, வெட்கக்கேடானது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பிரார்த்தனைகள்” இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
Tragic and very shameful. How can 3 trains be involved in this age and time? Who is answerable? Prayers for all the families. Om shanti. https://t.co/6qa5AYufOV
— Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri) June 3, 2023