Minister Nitin Gadkari:இருசக்கர வாகனத்தில் 3 பேரை அனுமதிக்க கோரிக்கை விடுத்த கேரள எம்.பி.... அமைச்சர் நிதின் கட்கரியின் பதில் என்ன தெரியுமா?
இரு சக்கர வாகனத்தில் 3 பயணிக்க அனுமதிக்க கோரிய கேரள எம்.பியின் கோரிக்கையை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நிராகரித்தார்.
இரு சக்கர வாகனங்களில் 10 வயதுக்குட்பட்ட ஒரு குழந்தையையும் சேர்த்து 3 பேர் பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை, அண்டை மாநிலமான கேரளாவில் ஏராளமான பொதுமக்களால் எழுப்பப்பட்டது. இது தொடர்பாக மோட்டார் வாகனச் சட்டத்தைத் திருத்தலாமா என்று கேரள அரசு எண்ணியது.
இது தொடர்பாக கடந்த மாதம் 1-ஆம் தேதி, மத்திய சாலைப்போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரிக்கு கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எம்.பி. இளமாறம் கரீம் கடிதம் கடிதம் ஒன்றை எழுதி இருந்தார்.
இருசக்கர வாகனத்தில் வாகன ஓட்டி உள்ளிட்ட 3 பேரும் ஹெல்மெட் அணிந்து பாதுகாப்பு அம்சங்களுடன், இரு சக்கர வாகனத்தில் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்து இருந்தார். குறிப்பாக, "நாட்டில் ஏராளமானவர்கள் தங்கள் அன்றாட பயணத்துக்கு இரு சக்கர வாகனங்களையே பயன்படுத்துகிறார்கள். அனைவராலும் கார் வாங்க முடியாது. எனவே இரு சக்கர வாகனங்களில் 3 பேர் செல்ல அனுமதிக்கலாம்" என இளமாறம் கரீம் தனது கடிதத்தில் வலியுறுத்தி இருந்தார்.
மத்திய மந்திரி நிதின் கட்காரி இளமாறம் கரீமின் கோரிக்கையை திட்டவட்டமாக நிராகரித்து விட்டார். இது தொடர்பாக அவர் இளமாறம் கரீமுக்கு எழுதி உள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது: “மத்திய மோட்டார் வாகனச் சட்டம் 1998-ன் கீழ், இரு சக்கர வாகனம் ஓட்டுகிறவர், தனது வாகனத்தில் மேலும் ஒரு நபருக்கு மேல் ஏற்றிச்செல்ல அனுமதி இல்லை. எனவே வாகன ஓட்டியின் பாதுகாப்பு அம்சத்தின் அடிப்படையில், இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் செல்கிறவர், தனது வாகனத்தில் ஒருவருக்கும் மேலானவரை ஏற்றிச்செல்ல அனுமதிப்பது சரி அல்ல. உலகமெங்கும் இரு சக்கர வாகனங்கள் 2 பேர் மட்டுமே பயணிக்க ஏற்ற வகையில் வடிவமைத்து உருவாக்கப்படுகின்றன என நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க
TN School Reopening: குறையாத வெயில் தாக்கம்; பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்படுகிறதா? முழு விவரம்..