(Source: ECI/ABP News/ABP Majha)
No Toll Tax Within 60 km: மூன்றே மாதம்... 60 கி.மீட்டருக்கு ஒரு டோல்கேட் தான்... - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு
தேசிய நெடுஞ்சாலைகளில் 60 கி.மீட்டருக்கு ஒரு டோல்கேட் மட்டுமே இருப்பது அடுத்த மூன்று மாதங்களில் உறுதி செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது பட்ஜெட் மாணிய கோரிக்கை மீதான விவாதம் மக்களவையில் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் இன்று சாலை போக்குவரத்து துறை தொடர்பான மாணிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது.
இந்த மாணிய கோரிக்கை விவாதத்தின் போது மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி நாடாளுமன்றத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். மக்களவையில் பேசிய மத்தி அமைச்சர் நிதின் கட்கரி, ”அடுத்த மூன்று மாதங்களில் தேசிய நெடுஞ்சாலையில் 60 கி.மீ. தொலைவிற்கு ஒரு டோல்கேட் மட்டுமே இருப்பதை உறுதி செய்யப்படும். அப்படி 60 கிலோ மீட்டர்களுக்குள் இரண்டு டோல்கேட்கள் இருக்கும் பட்சத்தில் அவற்றில் ஒன்று அடுத்த மூன்று மாதங்களுக்குள் நிச்சயமாக மூடப்படும். அதேபோல் டோல்கேட் அருகே வசிக்கும் மக்கள் தங்களுடைய ஆதார் கார்டுகளை கொண்டு இலவச பாஸ் பெற்று கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஆகவே அவர்களுக்கு எந்தவித சிரமமும் இருக்காது. ஜம்மு-காஷ்மீர் பகுதியை பொறுத்தவரை தற்போது 7000 கோடி ரூபாய் மதிப்பிலான சாலை போக்குவரத்து திட்டங்கள் அங்கு நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
All toll collecting points which are within 60 km of each other on the National Highways will be closed in the next three months. : Union Minister Shri @nitin_gadkari ji pic.twitter.com/RSmMUaJFVE
— Office Of Nitin Gadkari (@OfficeOfNG) March 22, 2022
குறிப்பாக அங்கு உள்ள சோஜிலா டன்னல் பணியில் சுமார் 1000 பேர் -8 டிகிரி குளிரிலும் பணி செய்து வருகின்றனர். அந்த பணிகள் விரைவில் நிறைவு பெறும். மேலும் டெல்லி-அமிர்தசரஸ் மற்றும் கத்ரா பகுதிகளுக்கு இடையேயான சாலை பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டின் இறுதிக்குள் ஸ்ரீநகரிலிருந்து மும்பையை சாலை மூலம் 20 மணி நேரத்தில் அடையலாம். அதேபோல் டெல்லி-அமிர்தசரஸ் இடையேயான தூரத்தை சாலை மார்க்கமாக 4 மணி நேரத்தில் சென்று அடையலாம்” எனக் கூறியுள்ளார். டோல்கேட் தொடர்பான அவருடைய அறிவிப்புக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க:அவர் பெயர் நிதின் கட்கரி இல்லை.. ஸ்பைடர்மேன்..- எம்பியின் பேச்சால் சிரிப்பு மழையான மக்களவை !
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்