Indian Railways Update: ரயில்வே துறை எப்போது தனியார் மயமாகும்?- நாடாளுமன்றத்தில் பதிலளித்த அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் !
ரயில்வே துறை தனியார் மயமாக்குவது தொடர்பாக மத்திய அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட் தொடர்பான விவாதம் தற்போது நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகின்றன். அதில் இன்று மாநிலங்களவையில் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பட்ஜெட் மற்றும் ரயில்வே அமைச்சகத்தின் செயல்பாடு தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது. இதில் எம்பிக்கள் பலரும் தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் இந்த விவாதத்தில் பேசிய மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “ரயில்வே தொடர்பாக பழைய அரசிற்கு திட்டம் மட்டுமே இருந்தது. ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான அரசு திட்டத்தை நிறைவேற்றி வருகிறது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு வட கிழக்கு மாநிலங்களில் சில திட்டங்களை செய்தது. ஆனால் அது எதுவும் அப்போது சரியாக இல்லை.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு வட கிழக்கு மாநிலங்களின் தேவைகளை சரியாக பூர்த்தி செய்து வருகிறது. எந்த மாநிலத்திற்கு எதிராக மத்திய அரசு செயல்படவில்லை. ரயில்வே துறையை பொறுத்தவரை மத்திய அரசுக்கு அனைத்து மாநிலங்களும் இணைந்து செயல்பட வேண்டும். ரயில்வே துறையை தற்போது தனியாரிடம் விற்கும் திட்டம் எதுவும் தற்போதைக்கு இல்லை. இது ஒரு சமூதாய கடமை கொண்டு முக்கியமான நிறுவனங்களில் ஒன்று” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்