மேலும் அறிய

UPCM Yogi Adityanath: உ.பி.யில் குண்டர்கள், நில மாஃபியாக்கள் இல்லை - முதலீட்டாளர்களை ஈர்க்க முதல்வர் யோகி ஆதித்யநாத் பேச்சு.!

முதலீட்டாளர்களைக் கவர உத்திர பிரதேசத்தில் குண்டர்களோ நில மாஃபியாக்களோ இல்லை என மும்பையில் பேசியுள்ளார்.

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வியாழக்கிழமை தனது மாநிலத்தை பாதுகாப்பான முதலீட்டு இடமாக அறிவித்தார், மேலும் மும்பைக்குச் சென்ற போது  முக்கிய பிரமுகர்களுடனும் பாலிவுட் பிரமுகர்களுடனும்  உரையாடுகையில் இவ்வாறு கூறியுள்ளார். 

உத்திரபிரதேசத்தில் வலுவான சட்டம் ஒழுங்கு நிலைமை, அச்சம் இல்லாத, நில மாஃபியா இல்லை எனவும் தொழிலதிபர்களுக்கு உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உறுதியளித்தார். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை லக்னோவில் நடைபெறும் 3 நாள் 'உத்திர பிரதேச உலகளாவிய முதலீட்டாளர் உச்சி மாநாடு 2023'-ஐ விளம்பரப்படுத்தும் பணிகளில் இறங்கியுள்ள யோகி ஆதித்யநாத், அதன் ஒரு பகுதியாக மும்பையில் உள்ள தொழிலதிபர்களை சந்தித்தார்.  

மேலும் இது குறித்து அவர் கூறுகையில், ”2017க்கு முன், தினமும் கலவரம் நடந்து கொண்டிருந்ததை நீங்கள் பார்த்திருப்பீர்கள், இப்போது மாநிலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு மிகவும் வலுவாக உள்ளது. நாங்கள் நில மாஃபியா எதிர்ப்பு பணிக்குழுவை உருவாக்கி, 64,000 ஹெக்டேர் நிலத்தை அவர்களின் பிடியில் இருந்து விடுவித்து உரியவர்களிடம் அளித்துள்ளோம், மேலும் அரசு நிலங்களையும் மீட்டுள்ளோம்” என்று  கூறியுள்ளார்.

அதைத்தொடர்ந்து, ”உத்தரபிரதேசத்தில் எந்த தொழிலதிபரிடமோ அல்லது ஒப்பந்ததாரரிடமோ பணம் வசூலிக்கவோ அல்லது அவர்களை துன்புறுத்தவோ இன்று எந்த குண்டர்களும் இங்கு இல்லை என்றும், அரசியல் நன்கொடைகளை கூட வலுக்கட்டாயமாக எந்த கட்சியாலும் பெற முடியாது” எனவும் முதலீட்டாளர்களிடம் அவர் கூறியுள்ளார்.

"எங்கள் குழு ஏற்கனவே 16 நாடுகள் மற்றும் 21 நகரங்களுக்குச் சென்று, UP உலக முதலீட்டாளர் உச்சி மாநாடு 2023க்கு வருமாறு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. நாங்கள் ஏற்கனவே மாநிலத்திற்கு ₹ 7.12 லட்சம் கோடி முதலீட்டை ஈட்டியுள்ளோம்," என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், உத்தரப் பிரதேசம் சாலைகள், ரயில்வே மற்றும் விமானப் பாதைகள் மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது, இது உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளுடன் எளிதாக இணைப்பதில் முதலீட்டாளர்களுக்கு பயனளிக்கும். ஐந்து சர்வதேச விமான நிலையங்களைக் கொண்ட நாட்டிலேயே ஒரே மாநிலமாக இது மாறப் போகிறது. இப்போது  ஒன்பது விமான நிலையங்கள் உள்ளன.  நிலத்தால் சூழப்பட்ட மாநிலமாக இருந்தாலும், மாநிலத்திலிருந்து ஹால்டியா வரை நாட்டின் முதல் உள்நாட்டு நீர்வழி உருவாக்கப்பட்டுள்ளது" என்றார்.

இதைத்தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு நிகழ்வில் சினிமா பிரபலங்களுடன் கலந்துரையாடிய உத்திர பிரதேச முதல்வர், ”உங்கள் இரு திரையுலகைச் சேர்ந்தவர்களை நாங்கள் எம்.பி.க்களாக மாற்றியுள்ளோம். நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவற்றை சரி செய்ய என்ன செய்ய வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். சமூகத்தை ஒன்றிணைப்பதிலும், சமூகத்தைப் பாதுகாப்பதிலும் சினிமா முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், உத்தரப் பிரதேசம் திரைப்படங்களுக்கு உகந்த மாநிலமாக உருவெடுத்துள்ளதாகவும், தேசிய திரைப்பட விருதுகள் மற்றும் இந்திய சர்வதேச திரைப்பட விழா (IFFI) ஆகியவற்றில் இது அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும்  அவர் கூறினார்.

இந்நிகழ்வில் தயாரிப்பாளர் போனி கபூர், கோரக்பூர் லோக்சபா எம்.பி.யும், நடிகருமான ரவி கிஷன், போஜ்புரி நடிகர் தினேஷ் லால் நிருவா, பின்னணி பாடகர்கள் சோனு நிகம், கைலாஷ் கெர், நடிகர் சுனில் ஷெட்டி, திரைப்பட தயாரிப்பாளர்கள் சந்திரபிரகாஷ் திவேதி, மதுர் பண்டார்கர், ராஜ்குமார் சந்தோஷி உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தமிழகத்தில் கால் வைக்கும் முன் விஜய்க்கு கை கொடுத்த ராகுல் காந்தி.! ஷாக்காகி நிற்கும் திமுக
தமிழகத்தில் கால் வைக்கும் முன் விஜய்க்கு கை கொடுத்த ராகுல் காந்தி.! ஷாக்காகி நிற்கும் திமுக
PhD Scholarship: பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை! வெளியான அறிவிப்பு- உடனே விண்ணப்பிங்க!
PhD Scholarship: பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை! வெளியான அறிவிப்பு- உடனே விண்ணப்பிங்க!
India Germany Visa: அப்பாடா, இனி பிரச்னையே இல்ல.! இந்தியர்களுக்கு இனிப்பான அறிவிப்பை வெளியிட்ட ஜெர்மனி; அது என்ன.?
அப்பாடா, இனி பிரச்னையே இல்ல.! இந்தியர்களுக்கு இனிப்பான அறிவிப்பை வெளியிட்ட ஜெர்மனி; அது என்ன.?
Teachers Strike: நெருங்கும் பொங்கல்; வெளியாகுமா அறிவிப்பு? ஆசிரியர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படுமா? எதிர்பார்ப்பில் ஆசிரியர் கூட்டணி!
Teachers Strike: நெருங்கும் பொங்கல்; வெளியாகுமா அறிவிப்பு? ஆசிரியர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படுமா? எதிர்பார்ப்பில் ஆசிரியர் கூட்டணி!
ABP Premium

வீடியோ

ஆட்சியில் பங்கு பஞ்சாயத்து! தமிழ்நாடு வரும் ராகுல்! நிர்வாகிகளுடன் MEETING
Vijay in CBI Office | டெல்லி சென்ற விஜய் திக்திக் CBI விசாரணை உச்சக்கட்ட பரபரப்பில் தவெகவினர் | TVK | Karur Stampede
Annamalai 2026 election | அரவக்குறிச்சிக்கு NO! தொகுதி மாறும் அண்ணாமலை? பாஜகவின் கொங்கு கணக்கு
Mamata banerjee on Amitshah | ”சீண்டிப் பார்த்தா அவ்ளோதான்! என்கிட்ட PEN DRIVE இருக்கு” அமித்ஷாவை மிரட்டும் மம்தா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழகத்தில் கால் வைக்கும் முன் விஜய்க்கு கை கொடுத்த ராகுல் காந்தி.! ஷாக்காகி நிற்கும் திமுக
தமிழகத்தில் கால் வைக்கும் முன் விஜய்க்கு கை கொடுத்த ராகுல் காந்தி.! ஷாக்காகி நிற்கும் திமுக
PhD Scholarship: பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை! வெளியான அறிவிப்பு- உடனே விண்ணப்பிங்க!
PhD Scholarship: பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை! வெளியான அறிவிப்பு- உடனே விண்ணப்பிங்க!
India Germany Visa: அப்பாடா, இனி பிரச்னையே இல்ல.! இந்தியர்களுக்கு இனிப்பான அறிவிப்பை வெளியிட்ட ஜெர்மனி; அது என்ன.?
அப்பாடா, இனி பிரச்னையே இல்ல.! இந்தியர்களுக்கு இனிப்பான அறிவிப்பை வெளியிட்ட ஜெர்மனி; அது என்ன.?
Teachers Strike: நெருங்கும் பொங்கல்; வெளியாகுமா அறிவிப்பு? ஆசிரியர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படுமா? எதிர்பார்ப்பில் ஆசிரியர் கூட்டணி!
Teachers Strike: நெருங்கும் பொங்கல்; வெளியாகுமா அறிவிப்பு? ஆசிரியர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படுமா? எதிர்பார்ப்பில் ஆசிரியர் கூட்டணி!
Teachers Protest: போராடும் ஆசிரியர்கள் மீது கஞ்சா வழக்கு; மிரட்டிய போலீஸ்- வைரலாகும் ஆடியோ! அராஜகத்தின் உச்சம்!
Teachers Protest: போராடும் ஆசிரியர்கள் மீது கஞ்சா வழக்கு; மிரட்டிய போலீஸ்- வைரலாகும் ஆடியோ! அராஜகத்தின் உச்சம்!
Tata Punch Facelift: சுட்டிப்பையன் அப்க்ரேடாகி வந்துட்டான்..! பஞ்ச் விலையில் ஆஃபர் - புது பவர்ட்ரெயின் ஆப்ஷன்
Tata Punch Facelift: சுட்டிப்பையன் அப்க்ரேடாகி வந்துட்டான்..! பஞ்ச் விலையில் ஆஃபர் - புது பவர்ட்ரெயின் ஆப்ஷன்
Tata Punch Facelift: அப்டேட்டில் அமர்க்களம்.. தாறுமாறான பாதுகாப்பு அம்சங்கள், பஞ்ச் புதுசு Vs பழசு, எப்படி இருக்கு?
Tata Punch Facelift: அப்டேட்டில் அமர்க்களம்.. தாறுமாறான பாதுகாப்பு அம்சங்கள், பஞ்ச் புதுசு Vs பழசு, எப்படி இருக்கு?
லாஸ்ட் சான்ஸ்.! பொங்கலுக்கு மதுரை, நெல்லை, தென்காசி செல்ல சிறப்பு ரயில் அறிவிப்பு- முன்பதிவு எப்போது.?
லாஸ்ட் சான்ஸ்.! பொங்கலுக்கு மதுரை, நெல்லை, தென்காசி செல்ல சிறப்பு ரயில் அறிவிப்பு- முன்பதிவு எப்போது.?
Embed widget