மேலும் அறிய

உச்சகட்ட பரபரப்பில் பிகார் அரசியல்... நிதிஷ் vs பாஜக... ஆட்சி கவிழ்ப்பா? அடுத்து என்ன?

கடந்த 2017ஆம் ஆண்டு, பாஜகவுடன் இணைந்து நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி அமைத்ததிலிருந்தே, இருவரும் பரஸ்பரம் விமரிசித்து கொள்வது வழக்கமாகிவிட்டது.

கடந்த 2017ஆம் ஆண்டு, பாஜகவுடன் இணைந்து நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி அமைத்ததிலிருந்தே, இருவரும் பரஸ்பரம் விமரிசித்து கொள்வது வழக்கமாகிவிட்டது. ஆனால், இது தற்போது உச்ச கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. இந்த கூட்டணி முறியும் தருவாயில் இருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

இதுகுறித்து தெரிந்து கொள்ள வேண்டியவற்றை கீழே காண்போம்

கட்சி மீது முதலமைச்சரின் பிடியைக் குறைக்க பாஜக முயற்சிப்பதாக நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் குற்றம் சாட்டியுள்ளது. பாஜகவால் கட்சி மாறுவதற்கு அணுகப்பட்டதாகக் கூறப்படும் எம்எல்ஏக்களை ஐக்கிய ஜனதா தள தலைமை நாளை நடைபெறவுள்ள அதன் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் முன்னிலைப்படுத்த உள்ளது.

துணை முதலமைச்சரும் பாஜகவைச் சேர்ந்தவருமான தர்கிஷோர் பிரசாத்துடன் இன்று நடைபெற்ற சந்திப்பின்போது, "​தலைப்புச் செய்தியில் இடம்பெறும் வகையில் பிரச்னை தீவிரமாக எதுவும் இல்லை" என்று கூறியதாகக் கூறப்படுகிறது.

ஆனால், கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் நிதிஷ்குமாருக்கு எதிராக செயல்பட்டதாகவும், கூட்டணி கட்சிகளை அவமரியாதை செய்வதாகவும் பாஜக மீது நிதிஷின் கட்சி கடுமையாக குற்றம்சாட்டி வருகிறது. "பாஜக மட்டுமே இருக்கும், பிராந்தியக் கட்சிகள் மறைந்துவிடும்" என்று சமீபத்தில் பாஜக தலைவர் ஜேபி நட்டா கூறிய கருத்தை நிதீஷ் குமாரின் ஆதரவாளர்கள் ஆதாரமாக மேற்கோள் காட்டி வருகின்றனர்.

முதலமைச்சருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகையில், அவர் சமாதானம் அடையும் மனநிலையில் இல்லை. நாளை, அவர் தனது எம்எல்ஏக்கள் அனைவரையும் சந்தித்து அடுத்து என்ன நடக்கும் என்பது குறித்து முடிவு செய்வார். எம்எல்ஏக்கள் இடைக்காலத் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராக இல்லை என்றும், அந்த வாய்ப்பை விட புதிய கூட்டணியை விரும்புவார்கள் என்றும் அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

நிதிஷ் குமார் பாஜகவை வீழ்த்தினால் அவருக்கு ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆதரவு அளிப்பார் என எதிர்க்கட்சிகள் இன்று தெரிவித்துள்ளன. சமீபத்தில் பிகாரில் லாலுவின் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம், நிதிஷின் ஐக்கிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை ஆட்சி அமைக்க போதுமானதாக உள்ளது.

டெல்லியில் அமர்ந்து கொண்டு பிகார் அரசை கட்டுப்படுத்த மத்திய அமைச்சர் அமித் ஷா முயற்சித்து வருவதாகவும் இதன் காரணமாகவே நிதிஷ் கோபம் அடைந்துள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. தனது எதிர்ப்பை பதிவு செய்ய, அமித் ஷா மற்றும் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்த பல முக்கிய கூட்டங்களை நிதிஷ் குமார் புறக்கணித்துள்ளார். 

நேற்று, தனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகக் கூறி, நிதி ஆயோக் கூட்டத்தில் நிதிஷ் கலந்து கொள்ளவில்லை. ஆனால் பாட்னாவில் இரண்டு அரசு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டார்.

இந்த அரசியல் நெருக்கடியில் முக்கிய பங்கு வகிக்கும் ஆர்.சி.பி. சிங், சனிக்கிழமை மாலை நிதிஷ் குமாரின் கட்சியை விட்டு வெளியேறினார். மாநிலங்களவை உறுப்பினராகவும் மத்திய அமைச்சராகவும் அவர் பொறுப்பு வகித்தார். ஆனால், அவரை அமித் ஷாவின் பினாமியாகவே நிதிஷ் குமார்  பார்த்து வந்தார். 

ஊழல் செய்ததாக சிங் மீது அவரது சொந்த கட்சியே விமர்சனம் மேற்கொண்டிருந்தது. சமீபத்தில்தான், அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை மீண்டும் வழங்க ஐக்கிய ஜனதா தளம் மறுத்திருந்தது. இதன் காரணமாக, மத்திய அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

‘பத்தா’ படத்திற்கு கேரளாவில் அமோக வரவேற்பு! விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பதிவு!
‘பத்தா’ படத்திற்கு கேரளாவில் அமோக வரவேற்பு! விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பதிவு!
Kerala Accident: 3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
Maharashtra: பிங்க் ரேபிடோவில் ஓட்டுநராக வந்த ஆண்.. ஷாக்கான இளம்பெண்.. கடைசியில் ட்விஸ்ட்!
Maharashtra: பிங்க் ரேபிடோவில் ஓட்டுநராக வந்த ஆண்.. ஷாக்கான இளம்பெண்.. கடைசியில் ட்விஸ்ட்!
அரசு ஊழியர்களின் சம்பளம் 3 மடங்கு உயருமா? 8ஆவது சம்பள கமிஷனில் புதிய பரிந்துரை!
அரசு ஊழியர்களின் சம்பளம் 3 மடங்கு உயருமா? 8ஆவது சம்பள கமிஷனில் புதிய பரிந்துரை!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
TN EB Tender: ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
TTV Dhinakaran: அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்.. நல்லா இருக்கு உங்க நியாயம்.. தவெகவை சாடிய டிடிவி தினகரன்!
TTV Dhinakaran: அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்.. நல்லா இருக்கு உங்க நியாயம்.. தவெகவை சாடிய டிடிவி தினகரன்!
யூனிட் ரூ.35க்கு வாங்கினால் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
யூனிட் ரூ.35க்கு வாங்கினால் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
CM Vijay: இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
GEM Veeramani: வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
Perambur Hospital: இடம் ரெடி..! பெரம்பூரில் 6 ஏக்கரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை - எங்கு அமைகிறது தெரியுமா?
இடம் ரெடி..! பெரம்பூரில் 6 ஏக்கரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை - எங்கு அமைகிறது தெரியுமா?
குழந்தையுடன் வந்த பல்லவி MLA.. அட்வைஸ் செய்த கார்த்தி சிதம்பரம்.. சண்டைக்கு சென்ற மோகன் ஜி!
குழந்தையுடன் வந்த பல்லவி MLA.. அட்வைஸ் செய்த கார்த்தி சிதம்பரம்.. சண்டைக்கு சென்ற மோகன் ஜி!
Embed widget