Jagdeep Dhankhar : புதிய குடியரசு துணைத் தலைவராக இன்று பதவியேற்கிறார் ஜெகதீப் தன்கர்...!
குடியரசு தலைவராக திரவுபதி முர்மு தேர்வான நிலையில், நாட்டின் புதிய குடியரசு துணைத் தலைவராக இன்று ஜெகதீப் தன்கர் பதவியேற்கிறார்.
குடியரசு துணைத் தலைவராக பதிவி வகிக்கும் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் நேற்று 10ம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், நாட்டின் புதிய குடியரசு துணைத் தலைவராக இன்று ஜெகதீப் தன்கர் பதவியேற்கிறார். இவர் நாட்டின் 14 வது குடியரசு துணைத் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் குடியரசுத் தலைவர் பதவி மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான காலம் முடிவடைந்ததையடுத்து, புதிய குடியரசுத் தலைவர் மற்றும் புதிய குடியரசுத் துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்துவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
On behalf of @BJP4TamilNadu, congratulations to Shri Jagdeep Dhankar avargal for being elected as the Vice President of our country.
— K.Annamalai (@annamalai_k) August 6, 2022
His grasp of politics & our constitution will significantly benefit our Nation. pic.twitter.com/lcaofAhM5u
குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு தேர்வாகியிருந்த நிலையில், குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் கடந்த 6 ம் தேதி நடைபெற்றது. இதில், ஜெகதீப் தன்கர் 528 வாக்குகளும், மார்க்ரெட் ஆல்வாவும் 182 வாக்குகளும் பெற்றனர். 500க்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்று ஜெகதீப் தன்கர் அபார வெற்றி பெற்றார். மார்க்ரெட் ஆல்வா 25.1 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்றார். ஜெகதீப் தன்கர் 72.8 சதவீத வாக்குகள் பெற்றார். 15 வாக்குகள் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டது. அதாவது 2.1 சதவீத வாக்குகள் செல்லாதவை.
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட ஜெகதீப் தன்கருக்கு பா.ஜ.க. எம்.பி.க்கள் மட்டுமே வாக்களித்தால் போதும் என்ற நிலையில், அவர் 500க்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார். எதிர்க்கட்சி வேட்பாளரான மார்க்ரெட் ஆல்வாவிற்கு தி.மு.க. கூட்டணி கட்சிகள், தெலுங்கானா ராஷ்ட்ரா சமிதி, பகுஜன் சமாஜ் கட்சி. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் வாக்களித்தன. இந்த தேர்தலில், வாக்களிக்கத் தகுதியான 780 நபர்களில் 725 நபர்கள் வாக்களித்தனர். அதாவது, 92.94 சதவீத ஓட்டுக்கள் பதிவாகியிருந்தது.
Heartiest congratulations to Shri Jagdeep Dhankar Ji on being elected as the Vice President of India.
— Himanta Biswa Sarma (@himantabiswa) August 6, 2022
We look forward to your guidance and leadership. Your vast constitutional and legal knowledge will help us in shaping a progressive future for our nation.@jdhankhar1 pic.twitter.com/gI1hDQzbNE
இந்த நிலையில், நாட்டின் 14வது குடியரசுத் துணைத் தலைவராக ஜெகதீப் தன்கர் இன்று பதவியேற்கிறார். புதிதாக பதவியேற்கும் தன்கருக்கு, குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். புதியதாக குடியரசுத் துணைத் தலைவராக தேர்வாகியுள்ள ஜெகதீப் தன்கர் ராஜஸ்தான் மாநிலத்தில் பிறந்தவர். சட்டப்படிப்பு முடித்த இவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் பணியாற்றியவர். எம்.பி.யாக பணியாற்றிய இவர் மேற்கு வங்க ஆளுநராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்