National Voters Day 2025 : ஒரு விரல் புரட்சியே! தலைவர்களை தேர்ந்தெடுக்கும் இளைஞர்கள்.. தேசிய வாக்களார் தினம் கொண்டாடப்படுவது ஏன்?
National Voters Day : 2025 ஆம் ஆண்டு தேசிய வாக்காளர் தினத்திற்கான தீம், 'வாக்களிப்பதைப் போல எதுவும் இல்லை, நான் உறுதியாக வாக்களிப்பேன்' என்பதாகும்.

இந்திய தேர்தல் ஆணையம் உருவாக்கப்பட்டதை நினைவு கூறும் விதமாக 2011 ஆம் ஆண்டு முதல் ஜனவரி 25 ஆம் தேதி தேசிய வாக்களார் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இது வாக்காளர் பங்கேற்பை ஊக்குவிப்பதையும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. வாக்களிப்பதன் முக்கியத்துவம் பற்றி. தேசத்தின் எதிர்காலத்தை தங்கள் வாக்குகள் மூலம் வடிவமைப்பதில் குடிமக்களின் பங்கை இது எடுத்துக்காட்டுகிறது.
தேசிய வாக்காளர் தினம் 2025: தீம்
2025 ஆம் ஆண்டு தேசிய வாக்காளர் தினத்திற்கான தீம், 'வாக்களிப்பதைப் போல எதுவும் இல்லை, நான் உறுதியாக வாக்களிப்பேன்' என்பதாகும். இந்த தீம் கடந்த ஆண்டிலிருந்து( 2024) தொடர்கிறது. நாம் வாக்களிப்பது என்பது நாட்டின் தலைமையை தேர்ந்தெடுப்பதற்கான ஒரு முக்கிய கருவியாக இருக்கின்றது.
வரலாறு:
இளைஞர்கள் வாக்காளர்களாகப் பதிவு செய்வதை ஊக்குவிக்கும் வகையில் 2011ஆம் ஆண்டு தேசிய வாக்காளர் தினம் அறிமுகப்படுத்தப்பட்டது. பல தகுதியான இளைஞர்கள் வாக்களிக்க முன்வரவில்லை என்பதை கவனிக்கப்பட்டதை அடுத்து இந்த முயற்சி எடுக்கப்பட்டது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அப்போதைய அரசாங்கம், இளம் வாக்காளர்களைச் சேர்ப்பதற்கும் அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை (EPIC) வழங்குவதற்கும் கவனம் செலுத்த ஒரு சிறப்பு நாளை உருவாக்க முடிவு செய்தது.
அதன் படி 1950 ஆம் ஆண்டு இந்திய தேர்தல் ஆணையம் நிறுவப்பட்ட நாளான ஜனவரி 26 ஆம் தேதி தேசிய வாக்காளர் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: CM Stalin: வேங்கைவயலுக்கு ”நோ”.. நாளை அரிட்டாப்பட்டி விரைகிறார் முதலமைச்சர் ஸ்டாலின், காரணம் என்ன?
முக்கியத்துவம்:
தேசிய வாக்காளர் தினம் என்பது ஜனநாயகத்தில் வாக்களிப்பது ஒருவரின் உரிமை மற்றும் பொறுப்பு என்பதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் ஒரு முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. வாக்களிப்பதன் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை எடுத்துக்கூறுவதையும் , தேர்தல் செயல்பாட்டில் தீவிரமாக பங்கேற்க மக்களை ஊக்குவிப்பதே இந்த நாளின் நோக்கமாக உள்ளது. இந்த நாளில் முதல் முறையாக பதிவு செய்த வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டைகளை வழங்குவதன் மூலம் அவர்களுக்கு வாக்களிப்பதின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறுகிறது.
வாக்களிக்கும் செயல்முறை மற்றும் அவர்களின் வாக்கு ஏற்ப்படுத்து தாக்கம் குறித்து மக்களுக்கு கற்றுக்கொடுக்க பிரச்சாரங்களை ஏற்பாடு செய்வதன் மூலம் வாக்களிக்கும் சதவீகிதத்தை மேம்படுத்துவதில் தேசிய வாக்காளர் தினம் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த வாக்காளாற் தினமானது இந்திய தேர்தல் ஆணையம் சுதந்திரமான, நியாயமான மற்றும் வெளிப்படையான தேர்தலை உறுதி செய்வதில் அதன் முயற்சிகளை அங்கீகரிக்கும் தினமாக இருக்கிறது.
கொண்டாட்டங்கள்:
தேசிய வாக்காளர் தினம் 2025 பின்வரும் செயல்பாடுகளுடன் கொண்டாடப்படும்:
- புதிய வாக்காளர்கள் அவர்களின் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை (EPIC) பெறுவார்கள்.
- வாக்களிப்பது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பதிவை ஊக்குவிக்கவும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தப்படும்.
- வாக்களிப்பின் முக்கியத்துவத்தை ஊக்குவிக்க பொது பேரணிகள், விவாதங்கள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெறும்.
- வாக்காளர் விழிப்புணர்வுக்கு பங்களித்த தனிநபர்கள் மற்றும் அமைப்புகளை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கும்.

