கேம் சேஞ்சர்! ஓடிடி ரிலீஸ் தேதி!

Published by: ஜான்சி ராணி

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர் ராம்சரண். இவர் முதன்முறையாக நேரடியாக தெலுங்கில் இயக்கிய திரைப்படம் கேம் சேஞ்சர்

ஆர்.ஆர்.ஆர். படம் தந்த பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு ராம்சரண் நடித்த படம் என்பதால் தென்னிந்தியா முழுவதும் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. 

பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான இந்த படம் கடந்த பொங்கல் வெளியீடாக ஜனவரி 10ம் தேதி ரிலீசானது. ஷங்கர் - ராம்சரண் என்ற பெரிய எதிர்பார்ப்புடன் உருவாகியது.

விவேல் வேல்முருகன் திரைக்கதையில் தில் ராஜு தயாரித்த இந்த படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்திருப்பார்.

இவர்களுடன் அஞ்சலி, ஸ்ரீகாந்த், ஜெயராம், சமுத்திரகனி ஆகியோர் நடித்திருப்பார்கள். இந்த படத்தில் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடித்திருப்பார். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

சுமார் 425 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகிய இந்த படம் வெறும் ரூபாய் 158 கோடி மட்டுமே வசூல் செய்ததாக கூறப்படுகிறது. திரையரங்கில் பெரும் வரவேற்பைப் பெறவில்லை.

இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கேம் சேஞ்சர் படம் காதலர் தின கொண்டாட்டமாக வரும் பிப்ரவரி 14ம் தேதி ரிலீசாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ரசிகர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக காத்திருக்கின்றனர்.