Namibian Cheetah Died: நமீபியாவில் இருந்து இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்ட சிவிங்கி புலி உயிரிழப்பு... என்ன ஆச்சு?
நமிபியாவில் இருந்து கொண்டுவரப்பட்டு இந்தியாவில் விடப்பட்ட பெண் சிவிங்கிப்புலி ஒன்று உயிரிழந்தது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நமிபியாவில் இருந்து கொண்டுவரப்பட்டு மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் விடப்பட்ட பெண் சிவிங்கிப்புலி ஒன்று, இன்று உயிரிழந்தது.
இந்தியா வந்த சிவிங்கிப் புலிகள்:
இந்தியாவில் சிவிங்கிப் புலிகள் இனம் அழிந்து 70 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் நிலையில், அதன் எண்ணிக்கையை அதிகரிக்க செய்யும் நோக்கில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நமிபியாவில் இருந்து மத்தியப் பிரதேசத்தின் குனோ-பால்பூர் தேசிய பூங்காவிற்கு முதல் கட்டமாக, 8 சிவிங்கிப் புலிகள் விமானம் மூலம் கொண்டுவரப்பட்டு, மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் விடப்பட்டது.
கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தனது பிறந்தநாளன்று ஐந்து பெண் மற்றும் மூன்று ஆண் சிவிங்கிப் புலிகளை வனப்பகுதிக்குள் விடுவித்தார்.
8 சிவிங்கி புலிகளுள் ஒன்றான பெண் சிவிங்கிப் புலி 'ஷாஷா' இன்று இறந்தது. அந்த சிவிங்கி புலிக்கு சிறுநீரகம் தொடர்பான பிரச்னை காரணமாக இறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
A female Cheetah 'Shasha' brought from Namibia to MP's Kuno National Park on December 22, has died. It was found that cheetah Shasha was suffering from a kidney infection before she was brought to India. pic.twitter.com/2VtAvchrNL
— ANI (@ANI) March 27, 2023
சில மாதங்களுக்கு முன்பு, குனோவிற்கு கொண்டு வரப்பட்ட எட்டு ஆப்பிரிக்க சிறுத்தைகளில் ஒன்று உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக செய்திகள் வெளியாகின. அதையடுத்து, குனோவில் உள்ள மற்ற சிறுத்தைகளிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டு தொடர்ச்சியான கண்காணிப்பில் வைக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று பல நாட்களாக தொடர் கண்காணிப்பில் இருந்த சிவிங்கி புலி இன்று உயிரிழந்தது.
நிலப்பரப்பில் அதி வேகம் ஓடக் கூடிய திறன் பெற்ற சிவிங்கிப் புலிகள் (cheetah) ஏற்கனவே இந்தியாவில் இருந்துள்ளது. ஒரு காலத்தில் இதன் எண்ணிக்கை இந்தியாவில் அதிகமாக இருந்தது. ஆங்கிலேயர் வருகையால் வேட்டையாடப்பட்டது உள்ளிட்ட பல காரணங்களால் இந்தியாவில் சிவிங்கிப் புலிகளின் இனத்தின் எண்ணிக்கை குறைந்துபோனது. பின்பு, இந்தியாவில் சிவிங்கிப் புலி இல்லாமலே போனது.
சிவிங்கிப் புலி இனம் அழிந்துவிட்டது:
1952 ஆம் ஆண்டு சிவிங்கிப் புலி இனம் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. சிவிங்கிப் புலி வாழும் இடமாக இந்தியா இருக்க வேண்டுமென்றும், நாட்டில் சிவிங்கிப் புலியை அறிமுகம் செய்வதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன் அடிப்படையில், தென் ஆப்பிரிக்காவில் வாழும் சிவிங்கிப் புலிகளை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்தது. அதோடு மட்டுமல்லாமல், ‘ சிவிங்கிப் புலி திட்டத்தை செயல்படுத்த தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு (National Tiger Conservation Authority (NTCA)) வழிகாட்டும் நோக்கில் 3 பேர் கொண்ட குழுவையும் உச்சநீதிமன்றம் அமைத்தது.
மீண்டும் சிவிங்கி புலிகள்:
இந்த மூன்று பேர் கொண்ட குழு இந்தியாவில் எந்தப் பகுதி அவை வாழ்வதற்கு ஏற்றதாக இருக்கும் என்ற ஆய்வை மேற்கொண்டது. அதன்படி, இந்திய வனஉயிரிகள் மையத்தின் (டபிள்யூ.ஐ.ஐ.) ஆய்வின் முடிவில், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் சிவிங்கிப் புலி வாழ்வதற்கான சூழல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து, நமீபியாவில் இருந்து சிவிங்கிப் புலிகள் இந்தியா கொண்டு வரப்பட்டது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நமிபியாவில் இருந்து கொண்டுவரப்பட்டு மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் விடப்பட்ட பெண் சிவிங்கிப்புலி ஒன்று, இன்று உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.