மூணாறு: தென்னகத்து காஷ்மீரில் பதுங்கும் பயங்கரவாதிகள்! சுற்றுலா தலத்தில் அதிர்ச்சி தரும் உண்மை!
கேரள மாநிலத்தில் உள்ள சுற்றுலா தல வரிசையில் மூணாறு தவிர்க்க முடியாத ஒரு சுற்றுலா தலமாக இருந்து வருகிறது,
கேரளாவின் அழகிய மலை வாசஸ்தலங்களில், மூணாறு ஒவ்வொரு பார்வையாளர்களின் பயணத் திட்டத்திலும் ஒரு சிறப்புக் குறிப்பைக் காண்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இந்த மலைகள் மிகவும் தேவையான சுத்தமான காற்றை வழங்குகின்றன. மூணாறில் ஒரு நாளில் பார்க்க வேண்டிய இடங்கள் பல உள்ளன. ஒரு காலத்தில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளின் உறைவிடமாக இருந்த மூணாறு, இன்று நகரின் இரைச்சல் மற்றும் மாசுபாட்டிலிருந்து மிகவும் விரும்பப்படும் இடமாக உள்ளது. பசுமையான தேயிலை தோட்டங்களாக இருந்தாலும் சரி, அருவிகளாக இருந்தாலும் சரி, பல்வேறு தாவரவியல் பூங்காக்களில் உள்ள மலர்களின் தெளிவான வண்ணங்களாக இருந்தாலும் சரி, இயற்கை அனுபவங்களுக்கு இங்கு பஞ்சமில்லை. கேரள மாநிலத்தில் உள்ள சுற்றுலா தல வரிசையில் மூணாறு தவிர்க்க முடியாத ஒரு சுற்றுலா தலமாக இருந்து வருகிறது,
குறிப்பாக மூணாறு தென்னகத்து காஷ்மீர் என வர்ணிக்கப்படுகிறது. அதற்கு ஏற்ப சுற்றுலாவில் உலக அளவில் புகழ் பெற்றுள்ள நிலையில், பயங்கரவாதிகள் பதுங்கும் இடமாகவும் மாறி வருகிறது. 'இந்தியன் முஜாகிதீன்' தீவிரவாத அமைப்பின் தளபதியாக செயல்பட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த வக்காஸ் 2013 இறுதியில் மூணாறு காலனியில் தனியார் விடுதியில் இரண்டு மாதங்கள் தங்கி இருந்தார். அவரை, அந்த அமைப்பின் தலைவர் தெக் ஷீன் அக்தர் அடிக்கடி சந்தித்து வந்தார். டில்லியில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் இருவரையும் கைது செய்த பிறகு மூணாறில் தங்கி இருந்தது தெரிந்தது.
2014 ஏப்.5ல் இருவரையும் என்.ஐ.ஏ., அதிகாரிகள் மூணாறுக்கு அழைத்து வந்து விசாரித்தனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஜார்க்கண்ட்டில் 2021 மார்ச்சில் மூன்று போலீசார் வெடி குண்டு வீசி கொலை செய்யப்பட்டனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய மாவோயிஸ்ட் ஷகன்டுட்டிதினாபூ 30, மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்கு சொந்தமான கூடாரவிளை எஸ்டேட் பாக்டரி டிவிஷனில் கடந்த ஒன்றரை ஆண்டாக பதுங்கி தேயிலை தோட்ட தொழிலாளியாக வேலை செய்தார். அவரை, அக்.13ல் இரவில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர்.
மூணாறில் கே.டி.எச்.பி. தேயிலை கம்பெனிக்கு அசாம், ஜார்க்கண்ட், பீஹார் உட்பட பல்வேறு வடமாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டு 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வேலை செய்து வருகின்றனர். அவர்களில் ஆதார் உட்பட ஆவணங்கள் முறையாக ஆய்வு செய்யப்படுவதில்லை என்பதால், பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்புடையவர்கள் இருக்கக்கூடும் என சந்தேகம் எழுந்துள்ளது. அதனால் மற்ற தொழிலாளர்கள் இடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
பதுங்கும் இடமானது மூணாறு மலைகள் சூழ்ந்த சுற்றுலா பகுதியாகும். இங்கு பல நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்வதால், போலீசார் எவ்வித சோதனை, கண்காணிப்பு நடத்துவதில்லை. அதனால் குற்றங்களில் ஈடுபடுவோர் பெரும்பாலானோர் பதுங்குவதற்கு மூணாறை தேர்வு செய்கின்றனர். எளிதில் கண்டுபிடிக்க முடியாது என்பதால் பயங்கரவாதிகள், நக்சல்கள், பல்வேறு வழக்குகளில் தொடர்புடையோர் பதுங்கும் இடமாக மாறி வருகிறது என புகார் எழுந்துள்ளது.





















