James Bond | ஜேம்ஸ் பாண்டையே தொட்ட ஸ்ட்ரிக்ட் போலீஸ்.. வைரல் வீடியோ..
ஜேம்ஸ் பாண்ட் தீம் மியூசிக் பாடலை இசைத்த மும்பை போலீஸின் வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது.
மக்களுக்கு எப்போதும் விழிப்புணர்வு ஏற்படுத்த பல முன்னெடுப்புகளை எடுப்பதில் மும்பை காவல்துறை தான் முதலிடம். அவர்களின் சமூக வலைதள பக்கங்களில் இதுபோன்ற விழிப்புணர்வு வீடியோக்களை அவர்கள் தொடர்ந்து பதிவேற்றி வருகின்றனர். அந்த வீடியோக்களுக்கு சமூக வலைதளங்களில் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அத்துடன் அது பலரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. தற்போது அவர்களுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு புதிய பதிவை செய்துள்ளனர். இம்முறை அது விழிப்புணர்வு வீடியோவாக இல்லாமல் அவர்களின் திறமையை பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளது.
அதில் மும்பை காவல்துறையை காவலர்களின் பேண்ட் வாத்திய இசைக்குழு இசையமைக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோவில் அவர்கள் பிரபல ஆங்கில திரைப்படமான ஜேம்ஸ் பாண்ட் படத்தின் தீம் மியூசிக்கை வாசிக்கின்றனர். இந்த இசையை மும்பை காவல்துறையை சேர்ந்த கான்ஸ்டெபிள் ஷமீர் ஷேக் ஒருங்கிணைக்கிறார். இந்த வீடியோவை பார்த்த பலரும் மும்பை காவல்துறையை வெகுவாக பாராட்டு வருகின்றனர். எப்போதும் அதிக பணிச்சுமையுடன் காணப்படும் காவல்துறையினர் இதுபோன்ற பணிகளில் ஈடுபடுவது அவர்களுக்கு ஒரு நல்ல உத்வேகமாக இருக்கும் என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Band, Mumbai Police's Band!
— Mumbai Police (@MumbaiPolice) August 23, 2021
Presenting to you, ‘Khaki Studio’ - A Tribute to Monty Norman’s ‘James Bond Theme’
Theme, arranged by Head Constable Zameer Shaikh. #KhakiStudio #MusicalMonday#MumbaiPoliceBand #JamesBond007 #JamesBondTheme https://t.co/hKThMhcxTP
முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக மும்பை காவல்துறையில் நைகான் பகுதியின் காவல்துறை தலைமையகத்தில் பணிபுரிந்து வரும் அன்மோல் யஷ்வந்த் காம்ப்ளேவின் வீடியோ மிகவும் வைரலானது. இவர் தன்னுடைய பணி நேரங்களுக்கு பிறகு ஓய்வு நேரங்களில் நடனம் ஆடி மகிழ்வதை தன்னுடைய வாடிக்கையான பொழுதுபோக்காக வைத்துள்ளார். அந்த வகையில் சமீபத்தில் அவர் ஒரு இளைஞருடன் தன்னுடைய பணி முடிந்து வீடு திரும்பிய பிறகு மும்பை காவல்துறை உடையுடன் ஒரு பாடலுக்கு நடனமாடி வந்துள்ளார். அதில் தமிழில் வெளியான அண்ணாத்த ஆடுறார்ர் என்ற பாடலின் இந்தி பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார்.
View this post on Instagram
அந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவை பலரும் பார்த்து ரசித்துள்ளனர். அத்துடன் 18 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் லைக் செய்துள்ளனர். காவலர் ஒருவர் தன்னுடைய பணி சுமையை குறைக்க நடனம் ஆடுவது பெரும் வரவேற்பையும் பெற்று இருந்தது. தற்போது அதற்குபின்பு மீண்டும் மும்பை காவல்துறையினர் சார்ந்த வீடியோ ஒன்று மிகவும் வைரலாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: இந்த கோவிலுக்குப் போங்க.. நூடுல்ஸ்தான் பிரசாதம்.. ட்ரிப் போகணுமா? இத படிங்க முதல்ல..