Mumbai Train Accident: ஓடும் ரயிலில் தவறி விழுந்து 6 பேர் பலி... மும்பையில் சோகம்.. மீட்பு பணி தீவிரம்
முதற்கட்ட தகவல்களின்படி, 10 முதல் 12 பயணிகள் ரயிலில் இருந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதுவரை 6 பேர் இதில் உயிரிழந்துள்ளனர்.

தானேவின் மும்ப்ரா ரயில் நிலையத்தில் சிஎஸ்எம்டி நோக்கி சென்ற விரைவு மின்சார ரயிலில் அதிக கூட்ட நெரிசல் காரணமாக கீழே தண்டவாளத்தில் விழுந்ததில் 6 பேர் பலி என்கிற தகவல் வெளியாகியுள்ளது
6 பேர் பலி:
மத்திய ரயில்வேயின் திவா மற்றும் கோபர் ரயில் நிலையங்களுக்கு இடையே புஷ்பக் எக்ஸ்பிரஸ் கசாராவுக்குச் சென்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததுள்ளது. கதவருகில் அதிகளவு பயணிகள் நின்று கொண்டிருந்த நிலையில் கீழே விழுந்துள்ளனர். இதில் சில பயணிகள் தூக்கிவீசப்பட்டு ரயில் பிளாட்பாரங்களிலும், தண்டவாளங்களிலும் வீசப்பட்டனர்
முதற்கட்ட தகவல்களின்படி, 10 முதல் 12 பயணிகள் ரயிலில் இருந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதுவரை 6 பேர் இதில் உயிரிழந்துள்ளனர். விபத்துக்கான காரணம் ரயிலில் அதிக கூட்டம் இருந்ததாக நம்பப்படுகிறது. பயணிகள் கதவுகளில் தொங்கியபடி பயணித்ததாகவும், அப்போது இந்த விபத்து நடந்ததாகவும் கூறப்படுகிறது.
Maharashtra | Some passengers travelling towards CSMT fell from the train at Thane's Mumbra railway station. The reason for the accident is believed to be excessive crowd in the train. The railway administration and police have reached the spot. The injured are being taken… pic.twitter.com/UMBq41jcvm
— ANI (@ANI) June 9, 2025
மீட்பு பணிகள் தீவிரம்:
ரயில்வே நிர்வாகமும் காவல்துறையும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள். விபத்து குறித்து விசாரணை தொடங்கியுள்ளது. இந்த சம்பவத்தால் உள்ளூர் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் கீழே விழுந்த பயணிகளில் பெரும்பாலோனொர் 30-35 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் சொல்லப்படுகிறது.
என்ன நடந்தது?
திவா மற்றும் மும்ப்ரா ரயில் நிலையங்களுக்கு இடையேயான எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து 6 பேர் கீழே விழுந்தனர். கீழே விழுந்ததில் ஆறு பயணிகளும் உயிரிழந்துள்ளனர். , பயணிகள் எப்படி விழுந்தார்கள் என்பது இன்னும் சரியாகத் தெரியவில்லை.இதற்கிடையில் காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மும்பை மற்றும் லக்னோ இடையே புஷ்பக் எக்ஸ்பிரஸ் ஓடுகிறது. புஷ்பக் எக்ஸ்பிரஸ் வழக்கம்போல இன்று காலை 8.25 மணிக்கு சிஎஸ்எம்டியிலிருந்து புறப்பட்டது. புஷ்பக் எக்ஸ்பிரஸின் அடுத்த நிறுத்தம் கல்யாண் ரயில் நிலையம் ஆகும். இந்த பாதையில் விரைவு மின்சார ரயில்கள் குறைவு என்பதால் அதிகளவில் பயணிகள் ஏறியுள்ளனர். இந்த நிலையில் தான் திவா மற்றும் மும்ப்ரா நிலையங்களுக்கு இடையில் வந்தபோது கூட்ட நெரிசல் காரணமாக பயணிகள் ரயிலில் இருந்து கீழே விழுந்துள்ளனர்.






















