முதல் மாதவிடாய் வலி, பயம்.. சிறுமி தற்கொலை செய்துகொண்ட சோகம்! சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
சிறுமிக்கு முதல் மாதவிடாய் ஏற்பட்டதையடுத்து, தற்கொலை செய்து கொண்டதாக அவரது தாய் தெரிவித்துள்ளார்.
14 வயது கொண்ட சிறுமிக்கு முதல் மாதவிடாய் ஏற்பட்ட நிலையில் வலியின் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக, அவரது தாய் தெரிவித்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை
மார்ச் 26 அன்று, மும்பை மலாடில் என்கிற பகுதியில் வசித்த வந்த சிறுமி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. சிறுமிக்கு 14 வயது என கூறப்படுகிறது.
இந்த சோகமான சம்பவம் குறித்து, சிறுமியின் தாய் தெரிவிக்கையில், சிறுமிக்கு முதல் மாதவிடாய் ஏற்பட்டது.
இந்த தருணத்தில், வீட்டில் சிறுமி தனியாக இருக்கும் போது தற்கொலை செய்துகொண்டதாக கூற்ப்படுகிறது. இதையடுத்து, சிறுமியை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று உள்ளனர். சிறுமியை சோதனை செய்த மருத்துவர், ஏற்கனவே சிறுமி உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து சிறுமியின் தாயார் தெரிவிக்கையில்"சில தினங்களுக்கு முன்பு முதல் மாதவிடாய் ஏற்பட்டது. அவள் மன அழுத்தத்தில் இருந்தாள். கடுமையான வலி இருந்தது என தெரிவித்தாள்; அவளுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. நான் அவளிடம் இது சாதாரணமானது என்று சொன்னேன். ஆனால் அவள் இவ்வளவு பயங்கரமான நடவடிக்கை எடுப்பாள் என்று நான் நினைக்கவில்லை, என்று தெரிவித்தார்.
அவளுக்கு அப்போது அவளுக்கு முதல் மாதவிடாய் வந்தது. இது "இயல்பானது" என்று அவளது தாயால் அவளுக்குத் தெரிவிக்கப்பட்டாலும், "அழுத்தம்" தாங்க முடியாமல் ஒரு நாள் கழித்து சிறுமி தற்கொலை செய்து கொண்டார் என்று குடும்பத்தினர் கூறுகின்றனர்.
விழிப்புணர்வு தேவை:
இச்சம்பவம் குறித்து, காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சிறுமியின் மரணம் மாதவிடாய் விழிப்புணர்வு குறித்த உரையாடலை மீண்டும் தூண்டியுள்ளது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கையில், பாலியல் கல்வி குறித்து ஒன்றாம் வகுப்பு முதலே குழந்தைகளுக்கு கற்பித்தலை ஆரம்பிக்க வேண்டும். குறிப்பாக பெண்களுக்கு குறிப்பிட்ட வயதில் மாதவிடாய் ஏற்படுவது குறித்து பள்ளிகளில் கற்பித்தலை கொண்டு வர வேண்டும். அவர்களுக்கு ஏற்படும் அச்சம் போன்றவற்றை போக்க வேண்டும். பெற்றோர்கள் கூடுதல் கவனம் செலுத்தி, பெண் குழந்தைகளுக்கு உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து பேசுதல் வேண்டும். உடலில் இயற்கையாக மாற்றங்கள் குறித்து பேசுவதை தயக்கம் காட்டுவது கூடாது என்றும், இதை மறைக்க வேண்டிய விசயம் இல்லை என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
Also Read: மாதவிடாய் தீட்டல்ல..! நெல்லையில் ஐந்தாயிரம் மாணவிகள் உலக சாதனை நிகழ்வு.!
Also Read: Meftal Drug: மாதவிடாய் வயிற்று வலிக்கு இந்த மருந்தை பயன்படுத்தறீங்களா? எச்சரிக்கை விடுத்த ஐபிசி