Mukhtar Abbas Naqvi Resigns : மத்திய அமைச்சரவையிலிருந்து விலகினார் முக்தர் அப்பாஸ் நக்வி.. துணைக் குடியரசு தலைவராகிறாரா?
துணைக் குடியரசுத்தலைவருக்கான வேட்பாளர் பட்டியலில் முக்தர் அப்பாஸ் நக்வி பெயர் அடிபட்ட நிலையில் அவர் எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மத்திய அமைச்சரவையிலிருந்து சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி ராஜினாமா செய்துள்ளார்.
இந்திய குடியரசுத்தலைவராக இருக்கும் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து நாட்டின் 15வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வததற்கான தேர்தல் ஜூலை 18 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜூன் 15 ஆம் தேதி தொடங்கி ஜூன் 29 ஆம் தேதி நிறைவடைந்தது .இதில் எதிர்க்கட்சிகளின் சார்பில் குடியரசுத்தலைவர் வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஜார்க்கண்டின் முன்னாள் ஆளுநராகப் பணியாற்றிய திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார். இதில் திரௌபதி முர்மு ஜூன் 24 ஆம் தேதியும் யஷ்வந்த் சின்ஹா, நேற்று முன்தினம் ஜூன் 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இருவரும் இந்தியாவில் உள்ள மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மாநில கட்சிகளின் ஆதரவை திரட்டினர். இதனிடையே துணைக்குடியரசு தலைவராக உள்ள வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி முடிவடைகிறது. இதனால் அடுத்த துணைக்குடியரசு தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஆகஸ்ட் 6 ஆம் தேதி நடக்கவுள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று (ஜூலை 5) தொடங்கிய நிலையில் ஜூலை 19 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
#JUSTIN | மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தனது பதவியை ராஜினாமா செய்தார் https://t.co/wupaoCQKa2 | #MukhtarAbbasNaqvi #BJP pic.twitter.com/fNOBybeAan
— ABP Nadu (@abpnadu) July 6, 2022
வேட்புமனு மீதான பரிசீலனை ஜூலை 20 ஆம் தேதி நடைபெறும் நிலையில், வேட்புமனுவை வாபஸ் பெற ஜூலை 22 ஆம் தேதி கடைசி நாளாகும். வெங்கையா நாயுடு மீண்டும் துணைக்குடியரசு தலைவராக தேர்வு செய்யப்பட மாட்டார் எனவும் தகவல் வெளியாகியுள்ள நிலையில், அப்பதவிக்கு பாஜக சார்பில் மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி அடிபடுகிறது. 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில் சிறுபான்மையினர் வாக்கைப் பெற இந்த யுக்தி கைக்கொடுக்கும் என பாஜக இந்த முடிவை கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் முக்தர் அப்பாஸ் நக்வியின் மாநிலங்களவை எம்.பி. பதவிகாலம் நாளை முடிவடையும் நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்