திருமணமான அடுத்த நாளே இப்படியா? மனைவியை கொடூரமாக தாக்கிய பிரபல யூடியூபர் - நடந்தது என்ன?
பிரபல யூடியூபர் விவேக் பிந்திரா, திருமணமான அடுத்த நாளே தனது மனைவியை கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Crime: பிரபல யூடியூபர் விவேக் பிந்திரா, திருமணமான அடுத்த நாளே தனது மனைவியை கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மனைவியை கொடூரமாக தாக்கிய கணவன்:
உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் வசிப்பர் பிரபல யூடியூபர் விவேக் பிந்திரா (41). இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த யானிகா என்ற பெண்ணுடன் டிசம்பர் 6ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், திருமணத்திற்கு அடுத்த நாளான டிசம்பர் 7ஆம் தேதி விவேக் பிந்திராவுக்கும் அவருடைய தாயார் பிரபாவிற்கும் இடையே கருத்து வேறுபாட்டால் சண்டை நடந்துள்ளது.
இந்த சண்டையில் கடும் கோபமடைந்த விவேக் பிந்திரா தனது தாய் பிரபாவை கடுமையாக தாக்கி உள்ளார். அப்போது, இதனை தடுக்க யானிகா முயன்றுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த விவேக் பிந்திரா, யானிகாவை தனி அறைக்கு அழைத்து சென்று சரமாரியாக தாக்கி உள்ளார். அவரது தலைமுடியை பிடித்து கடுமையாக தாக்கி இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக யாருக்கும் யானிகா தெரிவிக்கக் கூடாது என்பதற்காக, அவரது செல்போனை உடைத்திருக்கிறார். இந்த சம்பவத்தை அடுத்து, யானிகாவின் சகோதரர் வைபவ் குவாத்ரா டிசம்பர் 14ஆம் தேதி நொய்டா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், விவேக் பிந்திரா மீது எட்டு பிரிவுகளின் கீழ் நொய்டா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
யார் இந்த விவேக் பிந்திரா?
புகாரில், விவேக் பிந்திரா, அவரது தாயை தாக்கியதால், இதனை தடுக்க முயற்சித்த யானிகாவை அவர் சரமாரியாக அடித்துள்ளார். அதோடு இல்லாமல், அவரது செல்போனையும் உடைத்திருப்பதாக புகாரில் தெரிவித்துள்ளார். யானிகாவின் சகோதரர் அளித்த புகாரை அடுத்து, விவேக் பிந்திராவை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையில், காயடைந்த யானிகாவை மீட்டு டெல்லி உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அப்போது, விவேக் பிந்திரா தாக்கியதல், மனைவி யானிகாவின் உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டதாகவும், ஒரு காது கேட்காமல் போனது என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். திருமணமான அடுத்த நாளே, பெண் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
விவேக் பிந்திரா படா பிசினஸ் பிரைவேட் லிமிடெட்டின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார். இவர் எழுத்தாளரும், தலைசிறந்த தன்னபிக்கை பேச்சளாராகவும், வணிக பயிற்சியாளராகவும் உள்ளார். இவர் சிறந்த பேச்சாளராக ஆசிய அளவில் விருது பெற்றவர். மேலும், 9 கின்னஸ் சாதனைகள் உட்பட 11 உலக சாதனைகளை படைத்தவர். இவர், மில்லியன் பார்வையாளர்களை கொண்டு ஒரு யூடியூப் சேனலையும் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.