Watch Video: ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட யானைக் குட்டி! போராடி காப்பாற்றிய தாய்! வைரல் வீடியோ!
ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட குட்டியை காப்பாற்றிய தாய் யானையின் பாசம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட யானைக் குட்டி:
யானைக் கூட்டம் ஒன்று ஆற்றைக் கடக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த காணொளியில், யானைக் கூட்டத்தில் இருந்த யானை குட்டி ஆற்று நீரில் சிறிது தூரம் அடித்து செல்லப்பட்டது. ஆனால் தாய் யானையானது, தனது உயிரையும் பொருட்படுத்தாது, ஆற்றின் நீரில் அடித்துச் செல்லப்பட்ட குட்டி அருகில் சென்றது.
குட்டி யானையை மீட்ட தாய்:
View this post on Instagram
பின் கரை பக்கம் செல்லுமாறு தாய் யானை குட்டிக்கு அறிவுறுத்தியது. பின்னர் சிறிது நேரம் போராட்டத்திற்கு பிறகு யானைக்குட்டியை, தாய் யானை பத்திரமாக கரையை மீட்டது. பின்னர் தாயும் குட்டியும் கூட்டத்தோடு சேர்ந்து கொண்டன. இந்த வீடியோவை இந்திய வன அதிகாரி பர்வீன் கஸ்வான், சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவானது மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள நக்ரகட்டா பகுதியில் எடுக்கப்பட்டிருக்கிறது.
பலரும் நெகிழ்ச்சி:
இந்த வீடியோவை, தற்போது பலரும், சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். மேலும் தாயின் பாசம் குறித்து பலரும் நெகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்