மேலும் அறிய
Advertisement
Headlines 27 May: இன்றைய காலை 7 மணி தலைப்புச்செய்திகள்..! உடனே இதெல்லாம் தெரிஞ்சிக்கோங்க
Headlines: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச்செய்திகளாக காணலாம்.
தமிழ்நாடு:
- நடப்பாண்டிற்கான கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை தமிழகத்தில் நடத்த மத்திய அரசு ஒப்புதல் - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி
- ஜப்பான் - இந்தியா நட்புறவு புதிய சகாப்தத்தை உருவாக்க வேண்டும் - முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
- தமிழ்நாட்டில் சென்னை ஸ்டான்லி உள்ளிட்ட 3 அரசு மருத்துவகல்லூரிகளில் மாணவர் சேர்கைக்கு தடை - விதிமுறைகளை பின்பற்றவில்லை என இளங்கலை மருத்துவ கல்வி வாரியம் நடவடிக்கை
- எவ்வளவு நிதிச்சுமை இருந்தாலும் போக்குவரத்து துறை ஊழியர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்றும் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி
- முதலமைச்சர் ஸ்டாலின் உலகம் சுற்றும் வாலிபன் எம்.ஜி.ஆர் போல விதவிதமாக கோட்-சூட் போட்டு கலக்குகிறார் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேச்சு
- புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் ஜொலிக்கப் போகும் செங்கோல் - நடிகர் ரஜினிகாந்த் பெருமிதம்
- தமிழ் வளர்ச்சிக்கு யார் காரணம்? - அண்ணாமலையோடு நேரடியாக விவாதிக்க தயார் - அமைச்சர் பொன்முடி சவால்
- தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு - சென்னையில் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு
- தேனி கம்பம் பகுதியில் ஊருக்குள் சுற்றி திரியும் அரிக்கொம்பன் யானையால் பொதுமக்கள் அச்சம் - யானையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரம்
இந்தியா:
- புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடி இன்று திறந்துவைக்கிறார்
- புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு விழாவை ஒட்டி பிரதமர் மோடியிடம் செங்கோலை ஒப்படைத்தார் திருவாவடுதுறை ஆதீனம்
- கைத்தடியாக வைக்கப்பட்டு இருந்த செங்கோல் தனக்கான அங்கீகாரத்தை பெற்றுள்ளது - செங்கோல் பெற்றுக்கொண்ட பிறகு பிரதமர் மோடி பேச்சு
- டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டம் - முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த 8 மாநில முதலமைச்சர்கள் புறக்கணிப்பு
- நீதிமன்றம் என்பது ஒழுக்கம், நெறிமுறைகள் குறித்து போதனை செய்யும் நிறுவனம் அல்ல - உச்சநீதிமன்றம் கருத்து
- மேற்குவங்கத்தில் சட்டவிரோதமாக செயல்பட்ட பட்டாசு ஆலையில் நடந்த விபத்தில் 12 பேர் பலியான விவகாரம் - பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டார் முதலமைச்சர் மம்தா பானர்ஜி
- ராஜஸ்தானின் சோகம் - கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 13 பேர் பலி
- நாட்டில் ஊழல் குறைந்த மாநிலமாக கேரளா திகழ்கிறது - முதலமைச்சர் பினராயி விஜயன் பெருமிதம்
உலகம்:
- நான்கு நாள் சுற்றுப்பயணமாக அடுத்த வாரம் இந்தியா வருகை தருகிறார் நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹல் பிரசந்தா
- தீபாவளிக்கு அரசு விடுமுறை அளிக்கும் மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் அறிமுகம்
- 21 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய 8 ஆயிரம் கோடி ரூபாய் செலவு - மெட்டா நிறுவனம் தகவல்
- வடக்கு பாகிஸ்தானில் பனிச்சரிவில் சிக்கி 10 பேர் பலி - 15 கால்நடைகள் உயிரிழப்பு
- நரமாமிசம் சாப்பிடுபவர்கள் என்பதால் பெற்றோர், உடன் பிறந்தோரை கொன்றேன் - அமெரிக்க இளைஞரின் அதிர்ச்சிகர வாக்குமூலம்
விளையாட்டு:
- ஐபிஎல் கோப்பையை வெல்லப்போவது யார்? - இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் சென்னை - குஜராத் அணிகள் பலப்பரீட்சை
- டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியின் போது ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியிடப்படும் - பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தகவல்
- பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் இன்று தொடக்கம் - அதிக கிராண்ட்ஸ்லாம் விருதுகளை வென்ற வீரர் என்ற சாதனையை படைப்பாரா ஜோகோவிச்?
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
மதுரை
தமிழ்நாடு
அரசியல்
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion