மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: பெயர் மாறிய கேரளா.. நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பா..? இன்றைய ஹெட்லைன்ஸ்..!
7 AM Headlines: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளைத் தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் மேலும் 6 பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை.
- மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
- தவறான தகவலை பரப்பும் எடப்பாடி பழனிசாமி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் - மா.சுப்பிரமணியன்.
- மத்திய அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி நடப்புக்கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
- கள்ளக்குறிச்சி சென்று பாதிக்கப்பட்ட மக்களை முதலமைச்சர் நிச்சயம் சந்திப்பார் என ஆர்.எஸ்.பாரதி தகவல்.
- மனிதாபிமான அடிப்படையில் செய்யப்படும் உதவிகளை கொச்சைப்படுத்தக் கூடாது - முத்தரசன்.
- சென்னை மருத்துவர் குகானந்தம் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்.
- மத்திய அரசு நடத்தும் தேர்வுகளில் நம்பகத்தன்மை பெரிய கேள்விக்குறியாகிவிட்டது - கனிமொழி எம்.பி.
- தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட 125% கூடுதலாக பெய்துள்ளது - வானிலை ஆய்வு மையம்.
இந்தியா:
- அயோத்தி கோயில் கருவறையில் ராமர் சிலை அருகே மழைநீர் கசிந்து தேக்கம் - பக்தர்கள் அதிர்ச்சி.
- மோடி எம்.பி.யாக உறுதி மொழியேற்கும்போது காங்கிரஸ் கூட்டணி எம்பிக்கள் அரசியல் சட்ட புத்தகத்தை காட்டி எதிர்ப்பு.
- நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம்.
- அரசியலமைப்பு மீதான தாக்குதலை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் - ராகுல் காந்தி உறுதி.
- மாநிலங்களவை முன்னவராக பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா தேர்வு.
- இனி பிரச்சனை அடிப்படையில் கூட பாஜகவுக்கு ஆதரவு இல்லை - பிஜூ ஜனதா தளம் திட்டவட்டம்.
- கேரளா என்ற பெயரை கேரளம் என மாற்றுவதற்கு அம்மாநில பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்.
- நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே ஆதரவு.
உலகம்:
- ரஷ்யாவில் தேவாலயங்கள் மீது தாக்குதல் - பாதிரியார், போலீஸ் உள்பட 22 பேர் உயிரிழப்பு.
- சவூதி அரேபியா: மெக்காவில் வெப்ப அலை தாக்குதலுக்கு இதுவரை 1301 பேர் உயிரிழந்தனர்.
- வனுவாட்டு தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு.
- தென்கொரியாவில் லித்தியம் பேட்டரி தொழிற்சாலையில் தீ விபத்து - 8 பேர் உயிரிழப்பு.
- ஆப்கானிஸ்தானில் நிலச்சரிவில் பல வீடுகள் இடிந்து விழுந்ததில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு.
- துபாய்; செங்கடலில் மேலும் ஒரு கப்பல் மீது ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்.
- கனடாவில் தீவிரவாதத்தை கவுரவிக்கும் செயல்கள் துரதிருஷ்டவசமானது - இந்தியா.
- பிரேட்ஸ் ஆப் தி கரிபியல் படத்தில் நடித்த ஹாலிவுட் நடிகர் கடலில் சுறா கடித்து உயிரிழப்பு.
- காஸா மீதான தாக்குதல் இறுதி நிலையை அடைந்துள்ளது என இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு தகவல்.
- அமெரிக்கா பால்டிமோரில் பாலத்தில் மோதி நின்ற டாலி கப்பல் 3 மாதங்களுக்கு பின் புறப்பட்டது.
விளையாட்டு:
- டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியாவை 24 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்.
- ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக இளம் வீரர் சுப்மன் கில் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
- 2024 டி20 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்கா அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது.
- வரும் 27ம் தேதி நடக்க உள்ள டி20 உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
உலகம்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion