மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: உயரும் கள்ளச்சாராய உயிரிழப்பு.. இன்று தொடங்கும் சட்டப்பேரவை கூட்டம்: இன்றைய ஹெட்லைன்ஸ்!
Morning Headlines: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளைத் தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 29 பேர் உயிரிழப்பு - 50க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பதற்றம்
- கள்ளக்குறிச்சி சம்பவத்தில் மெத்தனால் கலந்த சாராயம் விற்றதே உயிரிழப்புக்கு காரணம் - தமிழ்நாடு அரசு அறிக்கை
- கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம், போதைப்பொருட்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக அத்தொகுதி அதிமுக எம்.எல்.ஏ., செந்தில்குமார் குற்றச்சாட்டு
- கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்றதாக ஒருவர் கைது - 200 லிட்டர் சாராயம் பறிமுதல்
- கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தமிழ்நாடு அரசுக்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் - உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் வழங்க வலியுறுத்தல்
- கள்ளக்குறிச்சி விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் இடமாற்றம், எஸ்.பி., மற்றும் மதுவிலக்குத்துறை போலீசார் கூண்டோடு சஸ்பெண்ட்
- கள்ளக்குறிச்சி சம்பவம் எதிரொலி - கள்ளச்சாராய குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
- விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக, பாமக வேட்பாளர்கள் மனுத்தாக்கல்
- அதிமுகவில் ஓபிஎஸ்க்கு இடமில்லை - பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்
- துறை ரீதியான மானிய கோரிக்கைகள் விவாதம் - தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது
- தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் துணைத்தலைவராக எம்.எல்.ஏ. முனிரத்னம் நியமனம்
- தமிழ்நாட்டில் ஜூன் 25 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
- விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - முன்னேற்பாடுகள் குறித்து சத்யபிரதா சாஹூ ஆய்வு
இந்தியா:
- முறைகேடு புகார் எதிரொலி - 9 லட்சம் பேர் எழுதிய உதவி பேராசியர்களுக்கான நெட் தேர்வு ரத்து
- நீட் தேர்வு முறைகேட்டை எதிர்த்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
- வட இந்தியாவில் வெப்ப அலை - மருத்துவமனைகள் தயாராக இருக்குமாறு சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா அறிவுறுத்தல்
- அமேசானில் ஆர்டர் செய்த பார்சலில் வந்த பாம்பால் பரபரப்பு - மன்னிப்பு கேட்ட நிறுவனம்
- டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு
- டெல்லியில் தண்ணீர் பிரச்சினையை தீர்க்காவிட்டால் காலவரையற்ற உண்ணாவிரதம் - அமைச்சர் அதிஷி அறிவிப்பு
- கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தி - சமூக வலைத்தளங்களில் குவிந்த வாழ்த்து
- ஆந்திர துணை முதலமைச்சராக பொறுப்பேற்றார் பவன் கல்யாண் - தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்
- அசாமில் தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு - 26 பேர் பலி
உலகம்:
- அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் இந்தியர்கள் உட்பட 50 பேர் உயிரிழப்பு - இழப்பீடு அறிவித்தது குவைத் அரசு
- சத் நாட்டில் ராணுவ வெடிமருந்து கிடங்கில் தீ விபத்து - 9 பேர் பலி, 46 பேர் படுகாயம்
- பாகிஸ்தானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவு
- மெக்காவில் வீசிய வெப்ப அலைக்கு ஹஜ் பயணிகள் 550 பேர் உயிரிழப்பு
விளையாட்டு:
- டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்று - 18 ரன்கள் வித்தியாசத்தில் அமெரிக்காவை வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா
- டி20 உலகக்கோப்பை - சூப்பர் 8 சுற்றில் இன்று நடக்கும் ஆட்டத்தில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதல்
- தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
- சர்வதேச ஒருநாள் போட்டியில் அதிக சதம் - மிதாலி ராஜ் சாதனையை சமன் செய்தார் ஸ்மிருதி மந்தனா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion