மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: மீண்டும் தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா.. தலைவர்கள் பிறந்தநாளில் இனிப்பு பொங்கல்.. இன்றைய ஹெட்லைன்ஸ்!
Morning Headlines: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளைத் தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- மாநிலங்களை ஆலோசிக்காமல் 2 புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்தக் கூடாது. சட்டங்களை நிறுத்திவைக்க உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
- மே மாத ரேஷன் பொருட்களை ஜூன் மாத இறுதிவரை பெற்றுக்கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு. அனைத்து பொருட்களும் நியாய விலைக் கடைகளுக்கு அனுப்பி வைப்பு
- சென்னை பெசண்ட் நகரில் ஆந்திர எம்.பி. மகள் ஓட்டி சென்ற கார் ஏறி பிளாட்பாரத்தில் தூங்கிய வாலிபர் உயிரிழப்பு
- தொழில் முறையாக அரசு பேருந்தில் பயணம் செய்யும் நாட்டுப்புற கலைஞர்களுக்கு 50% கட்டண சலுகை: கட்டணம் ஏதுமில்லாமல் இசைக்கருவிகளையும் எடுத்துச்செல்ல அனுமதி
- பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே வன்முறையை தவிர்க்க ஜாதி ரீதியிலான பள்ளிகளை கல்வித்துறை கீழ் கொண்டு வர வேண்டும்; முதலமைச்சரிடம் அறிக்கை சமர்ப்பித்தது ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழு
- கொந்தகை, வெம்பக்கோட்டை உட்பட 8 இடங்களில் தொல்லியல் அகழாய்வு பணிகள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
- மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் கனவு திட்டமான குடிசையில்லா தமிழ்நாடு என்ற இலக்கினை அடையும் வகையில் கலைஞர் கனவு இல்லம் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
- பள்ளி மாணவர்களுக்கு முக்கிய தலைவர்கள் பிறந்தநாளில் இனிப்பு பொங்கல்- தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
- வெளி மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட ஆம்னி பஸ்களுக்கு தடை அமலானது; மீறி ஓட்டினால் பறிமுதல் செய்யப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரிக்கை
இந்தியா:
- டெல்லி, மும்பை உள்ளிட்ட இடங்களில் உள்ள எல்.ஐ.சியின் சொத்துகளி விற்று ரூ. 60,000 கோடி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதால் தகவல்
- நீட் தேர்வில் சிறு தவறு நடந்தாலும் கடும் நடவடிக்கை - உச்சநீதிமன்றம் அதிரடி
- தொழிற்சாலைகள், ஐடி துறை, ஆடை உற்பத்தி துறை, பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்க கர்நாடக காங்கிரஸ் அரசு திட்டமிட்டு வருகிறது.
- மகாராஷ்டிராவில் பின்னோக்கி செலுத்தும்போது கட்டுப்பாட்டை இழந்த கார், 300 அடி ஆழ பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது.
- மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பயன்பாடு குறித்து தொடர் புகார்கள் எழுந்து வரும் நிலையில், வாக்குச்சீட்டு முறைக்கு திரும்ப வேண்டும் என ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி கோரிக்கை வைத்துள்ளார்.
- பாஜக ஆளும் மாநிலங்களில் திட்டமிட்டு நீட் தேர்வு முறைகேடு; 24 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியானபோதும் பிரதமர் மோடி மௌனம் காப்பதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு
- கங்கா தேவி தன்னை தத்தெடுத்துக் கொண்டதாகவும், 3வது முறையாக பிரதமர் ஆனதற்கு கங்கா தேவியின் ஆசியே காரணம் என்று பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு
உலகம்:
- கென்யாவில் வரி உயர்வு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் - 200 பேர் கைது.
- ரஷ்ய அதிபர் புதின் 24 ஆண்டுகளுக்கு பின் வடகொரியாவுக்கு பயணம்.
- தன்பாலின திருமணத்தை சட்டபூர்வமாக அங்கீகரித்தது தாய்லாந்து.
- டோங்கா நாட்டில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவு.
- ஈரான் நாட்டில் பயங்கர நிலநடுக்கம் - 4 பேர் உயிரிழப்பு
விளையாட்டு:
- பின்லாந்தில் நடைபெறும் பாவோ நுர்மி விளையாட்டுப் போட்டியில், ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று அசத்தல்
- பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் பிருத்விராஜ் தொண்டைமான் தகுதி பெற்றுள்ளதாக தேசிய துப்பாக்கிச்சுடுதல் சங்கம் அறிவித்துள்ளது.
- சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற பெருமையை நிக்கோலஸ் பூரன் பெற்றுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
இந்தியா
உலகம்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion