Monkeypox: பரவி வரும் குரங்கு அம்மை நோய் ! 21 நாட்கள் தனிமைப்படுத்த கர்நாடக அரசு உத்தரவு!
அந்தந்த எல்லைக்குட்பட்ட விமான நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் ஸ்கிரீனிங் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதை உறுதி செய்ய மண்டல சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குரங்கு அம்மை :
இந்தியாவில் குரங்கு அம்மை காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், கர்நாடக தலைநகர் பெங்களூரு விமான நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் சோதனையை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளது.ப்ருஹத் பெங்களூரு மகாநகர பலிகே (பிபிஎம்பி) வழங்கிய வழிகாட்டுதல்களிடன்படி குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறைந்தபட்சம் 21 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் அந்தந்த எல்லைக்குட்பட்ட விமான நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் ஸ்கிரீனிங் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதை உறுதி செய்ய மண்டல சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
India has four confirmed cases of monkeypox-three patients in Kerala with a history of international travel and one in New Delhi without any such history, concurring with Dr Scaria's analysis, other national experts said monkeypox has possibly been undetected in India for years. pic.twitter.com/cD9dht7wIO
— Priyam Kushwaha (@drpriy2m) July 31, 2022
பரிசோதனை :
கடந்த மாதம் எத்தியோப்பியாவில் இருந்து பெங்களூரு வந்த நபர் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய்க்கான அறிகுறிகள் இருப்பதாக கூறி அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று பரிசோதிக்கப்பட்டார். பரிசோதனை முடிவில் அவருக்கு வந்தது குரங்கு அம்மை நோய் அல்ல சாதாரண் சிக்கன் பாக்ஸ் என்பது கண்டறியப்பட்டது. இது குறித்த அறிவிப்பை கர்நாடக சுகாதார அமைச்சர் கே.சுதாகர் ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார்.
A middle aged Ethiopian citizen who had come to Bengaluru earlier this month was subjected to Monkeypox test after he was suspected to have Monkeypox symptoms. His report has now confirmed that it is a case of chickenpox.
— Dr Sudhakar K (@mla_sudhakar) July 31, 2022
1/2
அறிகுறிகள் :
குரங்கு அம்மை நோய்களுக்கான முதற்கட்ட அறிகுறிகளாக சொறி மற்றும் வீங்கிய நிணநீர் கட்டிகள் தென்படுதல் ,தொடர் காய்ச்சல் உள்ளிட்டவை கூறப்படுகிறது.இது பொதுவாக இரண்டு முதல் நான்கு வாரங்கள் வரை நீடிக்கும்.குரங்கம்மை நோயினை சர்வதேச சுகாதார எமர்ஜென்சியாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் தீவிரமாக குரங்கம்மை நோய் பரவி வரும் நிலையில் உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. குரங்கம்மை தொற்று நோய் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு அவ்வளவு எளிதில் பரவாது என்பதால், இதற்காக ஊரடங்கு குறுத்து எந்த அறிவிப்பும் அறிவிக்கப்படவில்லை. உலக சுகாதார அமைப்பின் தொற்று நோய்கள் தொடர்பான இரண்டாவது அவசர கூட்டம் இன்று ஜூலை 23-ஆம் தேதி நடைபெற்றது. அதன் முடிவில் சர்வதேச சுகாதார அவசரநிலை என்ற அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.