ஓடிடி சேவைகளுக்கு நெறிமுறைகளை ஏற்படுத்த வேண்டும் - மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா
ட்ராய் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தொலைத்தொடர்பு ஒழுங்குமுறையாளர்களுக்கான சர்வதேச மாநாட்டை மத்திய தொலைத்தொடர்புத்துறை இணையமைச்சர் தொடங்கி வைத்தார்
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறையாளர்களுக்கான சர்வதேச மாநாட்டில், ஓடிடி சேவைகளுக்கான நெறிமுறைகளை வகுப்பது குறித்து விவாதிக்குமாறு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கேட்டுக் கொண்டுள்ளார்.
சர்வதேச மாநாடு:
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறையாளர்களுக்கான சர்வதேச மாநாட்டை மத்திய தொலைத்தொடர்புத்துறை இணையமைச்சர் திரு சந்திரசேகர் பெம்மசானி தொடங்கி வைத்தார். இந்த ஒரு நாள் மாநாட்டிற்கு சர்வதேச தொலைத்தொடர்பு சங்கத்தின் பொதுச் செயலாளர் டோரீன் போக்டான் – மார்ட்டின், ஜிஎஸ்எம்ஏ தலைமை இயக்குநர் மட்ஸ் கிரான்ரிட், ட்ராய் அமைப்பின் தலைவர் அனில் குமார் லஹோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
டிஜிட்டல் தொழில்நுட்பம்:
நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் பெம்மசானி, ” இந்தியாவில் தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பங்கள் அபார வளர்ச்சிப் பெற்றிருப்பதாக குறிப்பிட்டார். குறிப்பாக 5ஜி சேவையை மிக வேகமாக அறிமுகப் படுத்தியதை சுட்டிக்காட்டிய அவர், டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் நாட்டில் விரைவாகப் பின்பற்றப்படுவதாக கூறினார். டிஜிட்டல் பொருளாதாரத்தின் வளர்ச்சி பற்றிய தகவல்களையும் அவர் நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார்.
தொடக்க விழாவில் மத்தியத் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா அனுப்பிய செய்தியை ட்ராய் அமைப்பின் செயலாளர் அதுல் கே சவுத்ரி தெரிவித்ததாவது ” அதில், தொலைத் தொடர்பு ஒழுங்குமுறையாளர்கள் தங்களது எண்ணற்ற கடமைகளை மேற்கொள்ளும் அதே வேளையில், நுகர்வோரின் நலன்களைப் பாதுகாக்கும் புனிதமான பொறுப்பும் இருப்பதாக கூறியுள்ளார்.
As the Voice of the Global South, India will continue to advocate for technology that is inclusive and affordable for all. pic.twitter.com/OTPOtiZ715
— Jyotiraditya M. Scindia (@JM_Scindia) October 16, 2024
ஓடிடி:
தரை வழி அல்லாத கட்டமைப்பில் பரிணாம வளர்ச்சி, புதிய தொழில்நுட்ப வாய்ப்புகளுக்கு வழிவகுப்பதோடு, தொலைத்தொடர்பு தொழில்நுட்பங்களின் எல்லையை விரிவுபடுத்தி புதுமைப் பயன்பாடுகளை ஊக்குவிக்கவும் வழி வகுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஓடிடி சேவைகளுக்கான நெறிமுறைகளை வகுப்பது குறித்தும் மாநாட்டில் விவாதிக்குமாறு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கேட்டுக் கொண்டுள்ளார்.
Also Read; Amaran Audio launch: சிவகார்த்திகேயனின் அமரன் படத்தின் இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு