புற்றுநோய் மருத்துவமனைக்காக நிதி குவிந்த நெகிழ்ச்சி.. பேராசிரியருக்கு ஆதரவாக நின்ற மாணவர்கள்..
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஷியாம் சுந்தர் அக்ரவாலா. இவர் ஒரு கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். இவரிடம் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முன்பு சுப்ரதோ பக்சி என்ற மாணவர் படித்துள்ளார்.
பொதுவாக ஆசிரியர்கள் தங்களிடம் பயின்ற மாணவர்கள் குறித்து பெருமையாக பேசுவது வழக்கம். அந்த வகையில் தற்போது ஒரு ஆசிரியருக்கு அவருடைய மாணவர்கள் தம்பதியாக வந்து உதவி அளித்து வியப்பில் ஆழ்த்தியுள்ளனர். யார் அந்த மாணவ தம்பதி ஆசிரியருக்கு எவ்வாறு உதவி செய்தனர்?
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஷியாம் சுந்தர் அக்ரவாலா. இவர் ஒரு கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். இவரிடம் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முன்பு சுப்ரதோ பக்சி என்ற மாணவர் படித்துள்ளார். இவர் படிக்கும்போதே சிறப்பான மாணவராக வலம் வந்து ஆசிரியர் ஷியாமை அசர வைத்துள்ளார். படிப்பு மட்டுமல்லாமல் விளையாட்டு, தலைமை பண்பு ஆகியவற்றில் சுப்ரதோ சிறந்து விளங்கியுள்ளார். தனது பட்டப்படிப்பிற்கு பின் அப்போது எல்லோரும் செல்வதுபோல் குடிமை பணிகள் தேர்விற்கு தயாராகாமல் வித்தியாசமான பாதையை சுப்ரதோ தேர்ந்தெடுத்துள்ளார். முதலில் ஒடிசாவில் தொழில் துறையில் ஒரு கிளர்க் வேலையில் சேர்ந்துள்ளார். பின்னர் அங்கு இருந்து படிப்படியாக உயர்ந்து ‘மைண்ட் ட்ரீ’ என்ற ஒரு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். அதன் பின்னர் வெற்றிகரமான தொழிலதிபராக மட்டுமல்லாமல் ஒரு நல்ல சமூக சேவகராகவும் வலம் வருகிறார்.
இவர் அண்மையில் தமது ஆசிரியர் ஷியாம் சுந்தர் ஒடிசாவில் ஒரு புற்றுநோய் மருத்துவமனை துவக்க திட்டமிட்டுள்ளதை அறிந்துள்ளார். அதன்பின்னர் உடனடியாக அவருக்கு 340 கோடி ரூபாய் நிதியை வழங்கியுள்ளார். அவரின் உதவியை பார்த்து வியந்துபோன ஷியாம் சுந்தர் தனது மாணவரை கண்டு மீண்டும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். மேலும் சுப்ரதோவின் மனைவி சுஷ்மாவும் ஷ்யாம் சுந்தரிடம் பயின்ற மாணவி என்பதால் அவருக்கு இரட்டிப்பு சந்தோஷம் ஏற்பட்டுள்ளது. ஒடிசா மாநிலத்தில் வசிக்கும் பழங்குடியின மக்கள் மற்றும் பிற மக்கள் அதிகளவில் புற்றுநோய் பாதிப்பு உள்ளாகி வருகின்றனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஒரு சில மருத்துவமனைகளை இருந்தாலும் அவை அனைத்தும் சற்று குறைவான வசதியுடனே இயங்கி வருகின்றன. இதனால் அங்கு நல்ல வசதியுடன் ஒரு புற்றுநோய் மருத்துவமனை கட்ட திட்டமிட்டப்பட்டது. இதற்கு தற்போது சுப்ரதோ பக்சி உதவி செய்துள்ளார்.
இவருடைய உதவியுடன் உருவாகும் புதிய மருத்துவமனை 250 பேருக்கு படுக்கை வசதியை கொண்டுள்ளதாக அமைக்கப்படுகிறது. இதில் 25 சதவிகிதம் படுக்கை வசதிகள் இலவச சிகிச்சைக்கும், மற்றொரு 25 சதவிகிதம் ஒடிசா அரசின் உதவியுடன் சிகிச்சை பெறவும் ஒதுக்கப்பட உள்ளது. மீதமுள்ள 50 சதவிகித படுக்கை வசதிகளுக்கு மட்டும் முழு கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுப்ரதோ பக்சி ஏற்கெனவே ஒடிசா அரசின் திறன் மேம்பாட்டு குழுவின் தலைவராக உள்ளார். அவருடைய மனைவி சுஷ்மிதா மாநிலத்தில் கல்வி தொடர்பாக செயல்பட்டு வரும் திட்டம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இந்த தம்பதியின் சேவை மனப்பான்மை ஆசிரியரை மட்டுமல்லாமல் ஒடிசா மக்களையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.