Coonoor Chopper Crash: குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து : முப்படை தலைமை தளபதியுடன் பயணித்த 13 பேரின் பட்டியல்..!
முப்படை தலைமைத்தளபதி பிபின் ராவத் உடன் பயணித்தவர்களின் பட்டியல் :
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் உள்ள ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளாகியது. ஹெலிகாப்டரில் இந்திய ராணுவத்தின் முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிக்கா ராவத் உள்ளிட்ட 14 பேர் பயணித்தனர். விபத்தில் சிக்கியவர்களில் 13 பேர் உயிரிழந்தனர். கேப்டன் வருண் சிங் சிகிச்சை பெற்று வருகிறார்
முப்படை தலைமைத்தளபதி பிபின் ராவத் உடன் பயணித்தவர்களின் பட்டியல் :
- மதுலிக்கா ராவத்
- பிரிகேடியர் எல்.எஸ்.லிட்டெர்
- லெப்டினன்ட் கர்னல் ஹர்ஜிந்தர் சிங்
- குருசேவக் சிங்
- ஜிதேந்திர குமார்
- விவேக் குமார்,
- சாய் தேஜா,
- ஹாவ் சத்பால்,
- பைலட் விங் கேட் சவுகான்
- ஸ்கூவாட்ரான் குல்திப்
- JWO பிரதீப்
- JWO தாஸ்
- கேப்டன் வருண் சிங்
#BREAKING | குன்னூர் - ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்கள் விவரம் https://t.co/wupaoCQKa2 | #HelicopterCrash | #Coonoor #Ooty #BipinRawat pic.twitter.com/ehCj9SSfeC
— ABP Nadu (@abpnadu) December 8, 2021
இந்த விபத்தில் சிக்கி முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், மதுலிக்கா ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டு மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிபின் ராவத் மரணத்துக்கு பல்வேறு தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
6 ஆண்டுகளுக்கு முன்பு ஹெலிகாப்டர் விபத்திலிருந்து தப்பித்தார் பிபின் ராவத்.. அன்று நடந்தது என்ன?
அந்த வகையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், “ஜெனரல் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகாவின் அகால மரணம் அறிந்து நான் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளேன். தேசம் தனது துணிச்சலான மகன்களில் ஒருவரை இழந்துவிட்டது. தாய்நாட்டிற்கான அவரது நான்கு தசாப்த கால தன்னலமற்ற சேவை வீரத்தால் குறிக்கப்பட்டது. அவரது குடும்பத்தினருக்கு எனது அனுதாபங்கள்” என பதிவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்