மேலும் அறிய

மைக்ரோசாப்ட் முடக்கம் எதிரொலி.. 100க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து.. விஸ்வரூபம் எடுக்கும் பிரச்னை

மைக்ரோசாப்ட் முடக்கம் காரணமாக 192 விமானங்களை இண்டிகோ நிறுவனம் ரத்து செய்துள்ளது. விமானங்களை புக் செய்ய முடியாமலும், ரத்து செய்யப்பட்ட விமானங்களுக்கு ரீபண்ட் பெற முடியாமலும் பயணிகள் தவிக்கின்றனர்.

உலகம் முழுவதும் மைக்ரோசாப்ட் கணினிகள் முடங்கியுள்ள நிலையில், விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முக்கியமான மென்பொருள்களில் ஒன்று கிளவுட். சாப்ட்வேர் மற்றும் விமான சேவை துறைகளில் கிளவுடின் பங்களிப்பு தவிர்க்க முடியாதது.

இந்த சூழலில், கிரவுட் ஸ்ட்ரைக் (CrowdStrike) காரணமாக மைக்ரோசாப்ட் கணினி முடங்கியுள்ளது. கிரவுட் ஸ்ட்ரைக் என்பது இணைய பாதுகாப்பு நிறுவனமாகும். விண்டோஸ் நிறுவனத்துடன் இணைந்து மேம்பட்ட பாதுகாப்பை வழங்குகிறது.

எப்போது எல்லாம் பிரச்னைகள் ஏற்படுகிறதோ அப்போது எல்லாம் ஏஐ (செயற்கை நுண்ணறிவு) மற்றும் மெஷின் லேர்னிங் மூலம் உடனடியாக அதற்கு தீர்வு காண்கிறது கிரவுட் ஸ்ட்ரைக். இப்படியிருக்க, கிரவுட் ஸ்ட்ரைக் அப்டேட் காரணமாக மைக்ரோசாப்ட் கணினி முடங்கியுள்ளது

இதன் தாக்கம் உலகம் முழுவதும் பல நாடுகளில் எதிரொலித்து வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் கணினி முடக்கம் காரணமாக 192 விமானங்களை இண்டிகோ நிறுவனம் ரத்து செய்துள்ளது. அதோடு, விமானங்களை புக் செய்ய முடியாமலும், ரத்து செய்யப்பட்ட விமானங்களுக்கு ரீபண்ட் பெற முடியாமலும் பயணிகள் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து இண்டிகோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உலகளாவில் விமான பயண அமைப்பு செயலிழந்துள்ளது. அதன் விளைவாக விமானங்கள் ரத்து செய்யப்படுகின்றன. ரீபுக்/ரீபண்ட் பெறுவதற்கான ஆப்ஷனும் தற்காலிகமாக முடங்கியுள்ளது.

மைக்ரோசாப்ட் அஸூரில் ஏற்பட்டுள்ள நெட்வொர்க் பிரச்னை காரணமாக விமான சேவை தாமதமாகியுள்ளது. விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளை பதிவு செய்வது மெதுவாகியுள்ளது. அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இதை விரைவாகத் தீர்க்க எங்கள் டிஜிட்டல் குழு மைக்ரோசாப்ட் உடன் இணைந்து செயல்படுகிறது. உதவிக்கு, எங்கள் விமான குழுவைத் தொடர்பு கொள்ளவும்" என தெரிவித்துள்ளது.

இதுகுறித்து விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு கூறுகையில், "பயணிகளிடம் கருணையுடன் நடந்து கொள்ள வேண்டும், விமான சேவை தாமதத்தால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு கூடுதல் இருக்கை, தண்ணீர் மற்றும் உணவு வழங்க வேண்டும் என விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

உங்கள் பிரச்னைகளை நாங்கள் புரிந்துகொள்கிறோம். உங்களின் பாதுகாப்பான மற்றும் விரைவான பயணத்தை உறுதிசெய்ய அயராது உழைத்து வருகிறோம். உங்கள் பொறுமையும் ஒத்துழைப்பும் மிகவும் பாராட்டத்தக்கது" என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகிறது? வந்தது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகிறது? வந்தது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
நடிகர் நிவின் பாலி மீது வழக்கு.. படத்தில் வாய்ப்பு தருவதாக பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக புகார்
நடிகர் நிவின் பாலி மீது வழக்கு.. படத்தில் வாய்ப்பு தருவதாக பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக புகார்
தாத்தா, அப்பா வழியில் ஆன்மீக தொண்டு ; அமைச்சர் பி.டி.ஆர் விரும்பிச் செல்லும் கோயில்கள் எது தெரியுமா?
தாத்தா, அப்பா வழியில் ஆன்மீக தொண்டு ; அமைச்சர் பி.டி.ஆர் விரும்பிச் செல்லும் கோயில்கள் எது தெரியுமா?
The GOAT: தி கோட் ரிலீஸின்போது கட்சிக்கொடியை பயன்படுத்தக்கூடாது.. ரசிகர்களுக்கு விஜய் அறிவுரை
The GOAT: தி கோட் ரிலீஸின்போது கட்சிக்கொடியை பயன்படுத்தக்கூடாது.. ரசிகர்களுக்கு விஜய் அறிவுரை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Karti chidambaram | கொளுத்திப் போட்ட கார்த்தி! கடுப்பான காங்கிரஸ்! திமுக கூட்டணிக்குள் சிக்கல்?Jagan Mohan Reddy Flood Inspection | ”எங்களை காப்பாத்துன குலசாமி”ஜெகனிடம் ஓடிவந்த மக்கள்!Lady DSP Attack | முடியை இழுத்து கொடூரம்பெண் DSP மீது தாக்குதல்உச்சகட்ட பரபரப்பு..!Seeman Vs Vijayalakshmi : ”சீமான்  நீ யோக்கியனா..”விஜயலட்சுமி விளாசல்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகிறது? வந்தது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகிறது? வந்தது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
நடிகர் நிவின் பாலி மீது வழக்கு.. படத்தில் வாய்ப்பு தருவதாக பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக புகார்
நடிகர் நிவின் பாலி மீது வழக்கு.. படத்தில் வாய்ப்பு தருவதாக பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக புகார்
தாத்தா, அப்பா வழியில் ஆன்மீக தொண்டு ; அமைச்சர் பி.டி.ஆர் விரும்பிச் செல்லும் கோயில்கள் எது தெரியுமா?
தாத்தா, அப்பா வழியில் ஆன்மீக தொண்டு ; அமைச்சர் பி.டி.ஆர் விரும்பிச் செல்லும் கோயில்கள் எது தெரியுமா?
The GOAT: தி கோட் ரிலீஸின்போது கட்சிக்கொடியை பயன்படுத்தக்கூடாது.. ரசிகர்களுக்கு விஜய் அறிவுரை
The GOAT: தி கோட் ரிலீஸின்போது கட்சிக்கொடியை பயன்படுத்தக்கூடாது.. ரசிகர்களுக்கு விஜய் அறிவுரை
Breaking News LIVE Sep 3:  மலையாள நடிகர் நிவின் பாலி மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கு
Breaking News LIVE Sep 3: மலையாள நடிகர் நிவின் பாலி மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கு
Rasimanal Dam: காவிரி நடுவே உருவாகும் புதிய அணை? - எங்கு தெரியுமா?
காவிரி நடுவே உருவாகும் புதிய அணை? - எங்கு தெரியுமா?
Deepavali Release : சிவகார்த்திகேயனின் 'அமரன்' முதல் கவினின் 'பிளடி பெக்கர்' வரை... தீபாவளி சரவெடிக்கு ரெடியான படங்கள்...
Deepavali Release : சிவகார்த்திகேயனின் 'அமரன்' முதல் கவினின் 'பிளடி பெக்கர்' வரை... தீபாவளி சரவெடிக்கு ரெடியான படங்கள்...
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களே... உங்களின் கவனத்திற்கு!!!
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களே... உங்களின் கவனத்திற்கு!!!
Embed widget