60 வயதிலும் தீராத ஆசை.. வீட்டுக்கே சென்று டார்ச்சர்.. முதிய பெண்மணி கொலை!
அந்த பெண் பற்றிய அடையாளம் காணவும், கொலை செய்யப்பட்ட நபரை அடையாளம் காணவும் 10 தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்றது. இதன் விசாரணையில் கொலை செய்யப்பட்ட பெண் ஜோஷினா என அடையாளம் காணப்பட்டார்.

உத்தரப்பிரதேசத்தில் திருமணம் செய்ய தொடர்ச்சியாக வற்புறுத்தி வந்த 60 வயது முதிய பெண்மணி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வயதான பெண் மர்ம மரணம்
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலின்படி, “உத்தரபிரதேச மாநிலத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள சந்த்பா பகுதியில் அமைந்திருக்கும் நாக்லா பூஸ் டிரிசெக்ஷன் ஏரியாவில் சாலையோரம் கடந்த நவம்பர் 14 ஆம் தேதி அடையாளம் தெரியாத ஒரு பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. சடலத்தைக் கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனை செய்ததில் அவர் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து அந்த பெண் பற்றிய அடையாளம் காணவும், கொலை செய்யப்பட்ட நபரை அடையாளம் காணவும் 10 தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்றது. இதன் விசாரணையில் கொலை செய்யப்பட்ட பெண் 60 வயதான ஜோஷினா என அடையாளம் காணப்பட்டார். இதனைத் தொடர்ந்து உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள 5 மாவட்டங்களில் சுமார் ஆயிரம் சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். இதன் முடிவில் ஆக்ராவில் உள்ள தாஜ்கஞ்சில் வசிக்கும் இம்ரானை என்ற 45 வயது நபரை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
சிசிடிவியில் சிக்கிய நபர்
அவர் ஹத்ராஸில் உள்ள ஹதிசா பாலம் அருகே கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து கொலை செய்யப்பட்ட ஜோஷினாவின் செல்போனானது, சிக்னலை வைத்து கைப்பற்றப்பட்டது. இந்த நிலையில் இம்ரானிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது ஜோஷினாவின் மகள் மும்தாஜூக்கும், ஆக்ராவைச் சேர்ந்த சத்தருக்கும் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதனை இம்ரான் தான் முன்னின்று செய்துள்ளார்.
ஏற்கனவே தனது மாமியார் வீட்டருகே வசித்து வந்ததால் ஜோஷினாவுக்கும், இம்ரானுக்கும் நல்ல பழக்கம் இருந்துள்ளது. இது நாளடைவில் தகாத உறவாகவும் மாறியுள்ளது. இந்த நிலையில் நவம்பர் 10ம் தேதி தனது பேத்தியின் திருமணத்திற்காக மேற்கு வங்கத்தில் வசித்து வந்த ஜோஷினா கொல்கத்தாவுக்கு வந்துள்ளார். தொடர்ந்து இம்ரான் வீட்டுக்கு சென்று தன்னை திருமணம் செய்ய அழுத்தம் கொடுத்துள்ளார்.
கழுத்தை நெறித்துக் கொலை
ஆனால் தனக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் இருந்ததால் ஜோஷினாவின் விருப்பத்தை அவர் நிராகரித்தார். இந்த நிலையில் தான் நவம்பர் 13ம் தேதி ஜோஷினாவை கொல்கத்தாவில் சென்று விட்டு வருவதாக இம்ரான் உடன் சென்றுள்ளார். அவர்கள் இருவரும் ஆக்ரா நோக்கி செல்லும் ஒரு பேருந்தில் ஏறி பின்னர் ஹத்ராஸில் உள்ள நாக்லா பூஸ் டிரிசெக்ஷனுக்கு சென்றுள்ளனர்.
முன்னதாக ஜோஷினா தனக்கு தொல்லை கொடுக்க தொடங்கியதால் அவரை தீர்த்து கட்ட நினைத்த இம்ரான் தனது திட்டப்படி அவரை கழுத்தை நெறித்துக் கொன்றார். மேலும் வேறு யாரோ அவரை கொலை செய்து விட்டதாக நினைக்கும்படி அவரது ஆடைகளை கிழித்து நாடகமாட முயற்சி செய்துள்ளார். ஆனால் சிசிடிவி காட்சிகளில் இம்ரானின் முகம் பதிவானதால் அவர் சிக்கிக் கொண்டார் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






















