மேலும் அறிய

NEET: "நீட்டை ஒழிக்க வேண்டும்.. தேர்வுகளை மாநிலங்களே நடத்த வேண்டும்" திமுகவை பின்பற்றும் மம்தா!

நீட் தேர்வு தொடர்பாக தொடர் புகார் எழுந்து வரும் நிலையில், அதை ஒழிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.

இந்தியாவில் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த தேர்வானது மிகுந்த கட்டுப்பாடுகள் மற்றும் தீவிர சோதனைகளுக்குப் பிறகு தேசிய தேர்வு முகமையால் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

நீட் தேர்வு:

அவ்வப்போது வட மாநிலங்களில் நீட் தேர்வில் முறைகேடு நடைபெறுவதாகப் புகார் எழும். அந்த வகையில், இந்தாண்டும் பிரச்னை வெடித்துள்ளது. வழக்கத்துக்கு மாறாக 67 பேர் முதல் மதிப்பெண் பெற்றது, சில மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது, ஆள் மாறாட்டம், வினாத்தாள் கசிவு என நீட் இளநிலைத் தேர்வில் ஏகப்பட்ட சர்ச்சைகள் கிளம்பின.

பற்றி எரியும் நீட் விவகாரம்: முதலில் நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்ததை தேசியத் தேர்வுகள் முகமை மறுத்தது. ஆனால் இதுதொடர்பான விசாரணையில் பலர் கைது செய்யப்பட்டனர். பிகார், ஹரியானா ஆகிய மாநிலங்களில் கைது நடந்த நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நீட் தேர்வில் முறைகேடு நடந்ததை ஒப்புக்கொண்டார். இந்த விவகாரம் தற்போது சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் நீட் முறைகேட்டை கண்டித்து எதிர்க்கட்சிகளும் மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், நீட் தேர்வை ஒழிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.

அதில், "வினாத்தாள் கசிவு, தேர்வு நடத்தும் பணியில் ஈடுபட்டுள்ள குறிப்பிட்ட நபர்கள் மற்றும் அதிகாரிகள் லஞ்சம் வாங்கியது, குறிப்பிட்ட மாணவர்களுக்கு மட்டும் கருணை மதிப்பெண்கள் வழங்கியது போன்ற குற்றச்சாட்டுகளில் முழு கவனம் தேவைப்படுகிறது.

முழுமையான, வெளிப்படைத்தன்மை வாய்ந்த, பாரபட்சமற்ற விசாரணை தேவை. இத்தகைய நிகழ்வுகள், இந்த மருத்துவப் படிப்பு சேர்க்கையை எதிர்பார்க்கும் லட்சக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையையும், லட்சியங்களையும் பாதிக்கும்.

திமுகவை பின்பற்றும் மம்தா:

இத்தகைய நிகழ்வுகள் நாட்டின் மருத்துவக் கல்வியின் தரத்தை சமரசம் செய்வதோடு மட்டுமல்லாமல், நாட்டின் மருத்துவ வசதிகள்/சிகிச்சையின் தரத்தையும் மோசமாகப் பாதிக்கின்றன. 2017ஆம் ஆண்டுக்கு முன், மாநிலங்கள் தங்கள் சொந்த நுழைவுத் தேர்வுகளை நடத்த அனுமதிக்கப்பட்டதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

மேலும் மத்திய அரசும் மருத்துவப் படிப்புகளில் சேர்க்கைக்கு சொந்தமாகத் தேர்வுகளை நடத்தி வந்தது. இந்த அமைப்பு அதிக பிரச்சனைகள் இல்லாமல் சீராக இயங்கி வந்தது. எனவே, கூட்டு நுழைவுத் தேர்வு மூலம் மருத்துவ படிப்புக்கான மாணவர்களை தேர்வு செய்ய மாநில அரசுக்கு சுதந்திரம் வழங்க வேண்டும்.

எனவே, மாநில அரசுகள் இந்த தேர்வை நடத்தும் முந்தைய முறையை மீட்டெடுக்கவும், நீட் தேர்வை ரத்து செய்யவும் பரிசீலித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என கடிதத்தில் மம்தா குறிப்பிட்டுள்ளார்.

தொடக்கத்தில் இருந்தே நீட் தேர்வுக்கு திமுக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தற்போது அதே நிலைபாட்டை சமாஜ்வாதி, திரிணாமுல் போன்ற மற்ற எதிர்க்கட்சிகளும் எடுத்து வருகின்றன. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kongu Eswaran on Aadhav Arjuna : ’’ஜாக்கிரதை திருமா!ஆதவ்-ஆல் விசிக உடையும்’’எச்சரிக்கும்  ஈஸ்வரன்Ravichandran Ashwin on CSK : ’’வாழ்க்கை ஒரு வட்டம் மீண்டும் மஞ்சள் ஜெர்சி!’’உணர்ச்சிவசப்பட்ட அஸ்வின்IPL Auction 2025 | மீண்டும் இந்திரன் சந்திரன் Combo!CSK வில் RRR கேங்!தோனியின் மாஸ் ப்ளான் | AshwinIPL Auction 2025 | ராகுலின் STATS தெரியுமா?கோட்டைவிட்ட RCB - CSK..தட்டி தூக்கிய டெல்லி | KL Rahul

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
TNPSC: தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை- ’’இதையெல்லாம் செய்தால் விடைத்தாள் செல்லாதது ஆக்கப்படும்’’
TNPSC: தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை- ’’இதையெல்லாம் செய்தால் விடைத்தாள் செல்லாதது ஆக்கப்படும்’’
TRUST Exam: பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை: ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!
TRUST Exam: பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை: ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!
TVK Vijay: பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறி: அரசுக்கு ஐடியா கொடுக்கும் தவெக தலைவர் விஜய் 
TVK Vijay: பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறி: அரசுக்கு ஐடியா கொடுக்கும் தவெக தலைவர் விஜய் 
”நாடாளுமன்றத்திற்கு உள்ளே செல்லும் முன் மோடி செய்த சம்பவம்” அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள்..!
”நாடாளுமன்றத்திற்கு உள்ளே செல்லும் முன் மோடி செய்த சம்பவம்” அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள்..!
Embed widget