(Source: ECI/ABP News/ABP Majha)
என்ன ஆச்சு? அவுரங்கசீப்பின் புகைப்படத்துடன் நடனமாடும் வீடியோ வைரல்...8 பேர் மீது போலீசார் நடவடிக்கை...
மகாராஷ்டிராவில் அவுரங்கசீப்பின் புகைப்படத்துடன் நடனமாடிய 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் வாஷிம் மாவட்டத்தில் முகலாய ஆட்சியாளர் அவுரங்கசீப்பின் புகைப்படத்துடன் நடனமாடிய 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நடனத்தின் வீடியோ ஞாயிற்றுக்கிழமை இரவு இணையத்தில் வெளியாகி வைரலானதை அடுத்து, போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
Maha | Case registered against 8 people in Washim in connection with a viral video of people dancing with Mughal emperor Aurangzeb's photos
— ANI (@ANI) January 16, 2023
Mangrulpir Insp says, "Some youths carried Aurangzeb's photos during Dada Hayat Qalandar's urs on Jan 1 & raised slogans. Case registered." pic.twitter.com/iGv1DnpcQH
இதுகுறித்து போலீசார் கூறியதாவது, வாஷிம் மாவட்டத்தில் ஜனவர் 1ஆம் தேதி ஊர்வலம் ஒன்று நடந்தது. அதில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அந்த ஊர்வலத்தில் திப்பு சுல்தான் மற்றும் அவரங்கசீப்பின் இரண்டு பெரிய புகைப்படங்கள் அலைமோதின. அதில் அவுரங்கசீப்பின் புகைப்படங்களை தூக்கிக்கொண்டு கோஷமிட்டு பலரும் நடந்து சென்றனர். இந்த சம்பந்தமான வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து, போலீசார் 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் இதுவரை இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, வாஷிம் மாவட்டத்தில் பலரும் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனனர். அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நகரின் பல்வேறு இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
மங்ருல்பிர் இன்ஸ்பெக்டர் கூறுகையில், ஜனவரி 1 அன்று தாதா ஹயாத் கலந்தர் ஊர்வலத்தின் போது சில இளைஞர்கள் அவுரங்கசீப்பின் புகைப்படங்களை எடுத்துச் சென்று கோஷங்களை எழுப்பினர். இதனால் பல இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. இதனை அடுத்து 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.
மேலும் படிக்க
Watch: மேளதாளத்துடன் கல்யாணம்; ஆடல் பாடலுடன் ரிஷப்ஷன்: நாய்களுக்கு வாய்த்த வாய்ப்பு!
Nepal Aircrash: நேபாளத்தில் விமான விபத்துக்கு இதுதான் காரணமா? நிபுணர்கள் கூறிய அதிர்ச்சி தகவல்..