Watch: மேளதாளத்துடன் கல்யாணம்; ஆடல் பாடலுடன் ரிஷப்ஷன்: நாய்களுக்கு வாய்த்த வாய்ப்பு!
உத்திர பிரதேச மாநிலத்தில் நாய்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ள சம்பவம் அம்மாநிலத்தின் முதல் பக்க செய்தியாக மாறியுள்ளது.
உத்திர பிரதேச மாநிலத்தில் நாய்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ள சம்பவம் அம்மாநிலத்தின் முதல் பக்க செய்தியாக மாறியுள்ளது.
இந்தியாவில் பல செல்லப்பிராணி உரிமையாளர்கள் தங்கள் செல்லப்பிராணிகளுக்கு திருமணம் செய்யும் வினோதமான போக்கைத் தொடங்கியுள்ளனர். இதுபோன்ற ஒரு சமீபத்திய சம்பவம் உத்திர பிரதேச மாநிலம் சுராவலி கிராமத்தில் நடைபெற்றுள்ளது. இதில், ஏழு மாத பெண் நாய் ஜெல்லி மற்றும் டானிக்கு சனிக்கிழமையன்று உத்தரபிரதேசத்தின் அலிகாரில் இந்திய பாரம்பரிய திருமண சடங்குகளுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமண நிகழ்வு குறித்து, செய்தி நிறுவனமான ANI குறிப்பிட்டிருப்பது என்னவென்றால், டாமி, சுக்ராவலி கிராமத்தின் முன்னாள் தலைவர் தினேஷ் சவுத்ரியின் செல்ல நாய், ஜெல்லி அட்ராலியில் உள்ள திக்ரி ராய்பூரில் வசிக்கும் டாக்டர் ராம்பிரகாஷ் சிங் என்பவருக்கு சொந்தமானது என குறிப்பிட்டுள்ளது.
டாமி மற்றும் ஜெல்லியின் திருமணம் மகர சங்கராந்தி தினமான ஜனவரி 14 அன்று நிச்சயிக்கப்பட்டதாக அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மணமக்களுக்கு மேலதாளங்கள் அடித்தும் , மாலை அணிவித்தும் உள்ளிட்ட பிரமாண்டமான திருமண நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஜெல்லியின் குடும்பத்திலிருந்து வந்தவர்களும் டாமிக்கு ' திலகம்' பூசினர். அதன்பிறகு, டாமியின் 'ஆண்கள் குழுவினரும் ' , ஜெல்லியின்'பெண்கள் குழுவினரும்' மேலதாளங்கள் அடிக்க உற்சாக நடனம் ஆடி திருமணத்தினை கொண்டாடி மகிழ்ந்தனர்.
#WATCH | A male dog, Tommy and a female dog, Jaily were married off to each other in UP's Aligarh yesterday; attendees danced to the beats of dhol pic.twitter.com/9NXFkzrgpY
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) January 15, 2023
அதன் பின்னர் நடந்த ஊர்வலத்தினைத் தொடர்ந்து , மாலைகள் மாற்றப்பட்டு, அனைத்து சடங்குகளுடன் நாய்களுக்குத் திருமணம் நடைபெற்றது. திருமண ஊர்வலம் மற்றும் திருமண விழாவின் வீடியோவையும் ANI செய்தி நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
இந்த திருமண நிகழ்வு குறித்து மணமக்களின் உரிமையாளர்களில் ஒருவர், அதாவது நாய்களின் உரிமையாளர்கள், "மகர சங்கராந்தியை முன்னிட்டு, நாங்கள் திருமணத்தை ஏற்பாடு செய்தோம். அக்கம் பக்கத்து நாய்களுக்கு பாரம்பரிய நெய் உணவும் விநியோகிக்கப்பட்டது. அதற்காக சுமார் ரூ 40,000 முதல் 45,000 வரை செலவு செய்தோம்," என்று டாமியின் உரிமையாளர் தினேஷ் சவுத்ரி ANI இடம் தெரிவித்தார். மேலும், திருமணத்திற்காக 100 அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டதாக செல்லப்பிராணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
திருமணத்திற்குப் பின், 'வரவேற்பு விருந்து' விழாவும் நடத்தப்பட்டது. இந்த 'நாய்க் கல்யாணம்' மட்டும் தலைப்புச் செய்தி ஆகியுள்ளது. அதோடு கடந்த ஆண்டு நவம்பரில், குருகிராமில் இதேபோன்ற ஒரு நிகழ்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது, அதில் ஒரு தம்பதியினர் தங்கள் செல்ல நாய்க்கு அருகில் உள்ள நாய்க்கு திருமணம் செய்து வைத்தனர் . இந்த திருமண விழாவிலும் மேலதாளம் அடிக்கப்பட்டது மற்றும் நடனம் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.