Nepal Aircrash: நேபாளத்தில் விமான விபத்துக்கு இதுதான் காரணமா? நிபுணர்கள் கூறிய அதிர்ச்சி தகவல்..
நேபாளத்தின் பொக்காராவில் ஞாயிற்றுக்கிழமை நடந்த விமான விபத்தில் குறைந்தது 68 பேர் கொல்லப்பட்டதற்கு தொழில்நுட்ப கோளாறு அல்லது மனித தவறு காரணமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.
நேபாளத்தின் பொக்காராவில் ஞாயிற்றுக்கிழமை நடந்த விமான விபத்தில் குறைந்தது 68 பேர் கொல்லப்பட்டதற்கு தொழில்நுட்ப கோளாறு அல்லது மனித தவறு காரணமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.
A #planecrash has killed at least 68 people on Sunday when an aircraft went down near the city of Pokhara in central Nepal.
— The Nairobi Upbeat (@NairobiUpbeatHQ) January 16, 2023
Seventy-two people (4 crew members & 68 passengers) were on board the ATR 72 plane operated by Nepal's Yeti Airlines when it crashed.#NairobiUpbeat #News pic.twitter.com/vu5FVcWodp
68 பயணிகள் மற்றும் நான்கு பணியாளர்கள் அடங்கிய 72 பேருடன் எட்டி ஏர்லைன்ஸின் பயணிகள் விமானம் தரையிறங்குவதற்காக விமான நிலையத்தை நெருங்கும் போது பொக்காராவில் விபத்துக்குள்ளானது. இதுவரை 68 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. விபத்தின் போது பொக்காராவில் பாதகமான வானிலை எதுவும் இல்லை. விமானத்தின் இறுதித் தருணங்களைப் படம்பிடிக்கும் ஒரு வீடியோ தெளிவான வானிலையை சுட்டிக்காட்டியது. விமானம் தரையிறங்குவதற்காக விமான நிலையத்தை நெருங்கும் போது விமானம் ஒரு பக்கமாக சுழல்வதையும் வீடியோவில் இடம்பெற்றிருந்தது. மோசமான வானிலை இல்லாத நிலையில், விமானம் விபத்துக்குள்ளான காரணிகளில் தவறான கையாளுதல், விமான அமைப்பின் செயலிழப்பு அல்லது விமானி கவனக்குறைவு ஆகியவை இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.
Nepal plane crash:total 72 passengers died ' 4 Indians were going to Pokhara for paragliding #NepalPlaneCrash #Nepal pic.twitter.com/UepdeNdXBn
— A H M E D (@AhmedViews_) January 15, 2023
மேலும், விரிவான விசாரணைக்கு பிறகே விபத்துக்கான சரியான காரணங்கள் தெரியவரும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். நேபாளத்தின் முஸ்டாங் பகுதியில் தாரா ஏர் விபத்துக்குள்ளாகி 22 பேர் உயிரிழந்த ஒரு வருடத்திற்குள் சனிக்கிழமை பொக்காரா விபத்து ஏற்பட்டுள்ளது. ஒரு விமான விபத்து புலனாய்வாளர் PTI இடம், ஒரு வீடியோ கிளிப்பைப் பார்த்தால், விபத்து ஏற்படுவதற்கு முன்பு விமானத்தின் மூக்கு சற்று மேலே சென்று இறக்கைகள் இடது பக்கமாக சாய்ந்துள்ளது என தெரிவித்தார்.
விரிவான ஆய்வு முடிந்த பின்னரே விபத்துக்கான சரியான காரணிகள் தெரியவரும் என்றாலும், விமானியின் தவறான கையாளுதல் அல்லது விமானத்தில் ஏற்பட்ட தொழில்நிட்ப கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்தார். இந்தியாவின் மூத்த விமானி ஒருவர் கூறுகையில் இது போன்ற இடங்களுக்கு பயணிக்கும் போது விமானி ஒவ்வொரு நிமிடமும் விழிப்புடன் இருக்க வேண்டுமென்றும், நல்ல ஓய்வு தேவை எனவும் குறிப்பிட்டார்.
"சம்பந்தப்பட்ட விமானம், பதிவு எண் 9N-ANC மற்றும் வரிசை எண் 754 உடன் 15 ஆண்டுகள் பழமையான ஏடிஆர் 72-500 ஆகும். இந்த விமானத்தில் தரவுகளுடன் பழைய டிரான்ஸ்பாண்டர் பொருத்தப்பட்டிருந்தது. உயர் தெளிவுத்திறன் தரவைப் பதிவிறக்கி, தரவைச் சரிபார்க்கிறோம்," என விமானம் Flightradar24 என்ற கண்காணிப்பு இணையதளம் ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளது.