Maha Kumbh 2025 : தூய்மை பணியில் 15000 பேர் .. கும்பமேளாவில் புதிய உலக சாதனை?
Maha Kumbh Mela : கின்னஸ் உலக சாதனைகளில் இடம்பிடிக்கும் நோக்கில், தூய்மையைப் பராமரிக்க ஒரு மகத்தான முயற்சி தொடங்கப்பட்டுள்ளது

கின்னஸ் உலக சாதனை படைக்கும் முயற்சியில் கும்பமேளாவில் தூய்மை பணியில் 15,000 துப்புரவுப் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
கும்பப்மேளா நிகழ்வு:
உலகின் மிகப்பெரிய மத நிகழ்வுகளில் ஒன்றான மகா கும்பமேளாவில், 62 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் பிரயாக்ராஜிற்கு வந்து புனித நீராடியதாக தகவல் வெளியாகியுள்ளது, இது வரைக்கும் 62 கோடிக்கும் அதிகமானோர் நீராடியாதாக கூறப்படுகிறது. இவ்வளவு பெரிய நிகழ்வு நடைப்பெறும் போது அந்த சுத்தமாக வைத்திருப்பது என்பது மிக சவலான காரியமாகும். இதற்காக 15000 தூய்மை பணியாளர் தூய்மை பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
கின்னஸ் சாதனை நிகழ்வு:
கின்னஸ் உலக சாதனைகளில் இடம்பிடிக்கும் நோக்கில், தூய்மையைப் பராமரிக்க ஒரு மகத்தான முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. இந்த மிகப்பெரிய துப்புரவு நிகழ்வுக்காக கிட்டத்தட்ட 15,000 துப்புரவுப் பணியாளர்கள் குழு ஒன்று திரட்டப்பட்டுள்ளது, இது 2019 கும்பமேளாவின் உலக சாதனைக்கு 0,000 தொழிலாளர்களை விட அதிகமான எண்ணிக்கையாகும்
மேயர் மேற்பார்வையில் பணிகள்:
பிரயாக்ராஜ் மேயர் கணேஷ் கேசர்வானி மற்றும் மகா கும்பமேளா சிறப்பு நிர்வாக அதிகாரி அகன்க்ஷா ராணா ஆகியோரின் மேற்ப்பார்வையில், கின்னஸ் உலக சாதனை புத்தகத்தின் பிரதிநிதிகளுடன் இணைந்து, உலக சாதனைக்கான அளவுகோல்களை துப்புரவு பணி பூர்த்தி செய்வதை உறுதி செய்துள்ளனர். துப்புரவுப் பணியாளர்கள் தங்கள் மணிக்கட்டு பட்டையில் உள்ள குறியீட்டை ஸ்கேன் செய்து கணக்கெடுக்கப்பட்டனர்.
இந்த சாதனையின் முடிவுகள் மூன்று நாட்களுக்குள் அறிவிக்கப்படும் என்றும், இந்த மிகப்பெரிய முயற்சியில் ஈடுபட்டுள்ள நுணுக்கமான திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பை எடுத்துக்காட்டுவதாகவும் இதன் ஏற்ப்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க : களைகட்டும் தவெக 2ம் ஆண்டு விழா; பாஜக, திமுக-விற்கு எதிராக பேனர்கள்! என்ன பேசுவார் விஜய்?
உண்மையான ஹீரோக்கள்:
உத்தரபிரதேச நகர்ப்புற மேம்பாடு மற்றும் எரிசக்தி அமைச்சர் ஏ.கே. சர்மா கூறுகையில், மகா கும்பமேளா உலகின் மிகப்பெரிய மத, ஆன்மீக மற்றும் கலாச்சார நிகழ்வாக உருவெடுத்துள்ளது என்றும், அதை வெற்றிகரமாக்கிய துப்புரவுப் பணியாளர்கள்தான் உண்மையான ஹீரோக்கள் என்றும் கூறினார்.
"அவர்கள் கும்பமேளா பகுதியை சுத்தமாக வைத்திருக்க இரவும் பகலும் உழைத்தனர்," என்று அமைச்சர் கூறியதாக அந்த அறிக்கையில் மேற்கோள் காட்டி கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: காலியாகும் பூந்தமல்லி பேருந்து நிலையம்.. இனி எல்லாம் குத்தம்பாக்கம் தான்! வரப்போகும் மாற்றங்கள் என்னென்ன?
2019 ஆம் ஆண்டு பிரயாக்ராஜில் நடைபெற்ற கும்பமேளாவில், 10,000 துப்புரவுப் பணியாளர்கள் ஒருங்கிணைந்த தூய்மை இயக்கத்தில் பங்கேற்று கின்னஸ் உலக சாதனை படைத்தனர் என்று தெரிவித்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

