Crime : ஓடும் ரயிலில் வன்கொடுமை முயற்சி.. தப்பிக்க முயற்சித்த பெண்ணை தூக்கி வீசிய கொடூரம்..
மத்தியப் பிரதேச மாநிலத்தில் தனது தனிப்பட்ட வேலைக்காக சென்றுவிட்டு வந்த இளம்பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்து ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் ஓடும் ரயிலில் இளம்பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்து ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தில் உள்ள பண்டாவை பூர்வீகமாகக் கொண்ட சரிதா, கஜுராஹோ மத நிகழ்வில் பங்கேற்பதற்காக பாகேஷ்வர் தாமுக்கு வந்துவிட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, 30 வயதான மதிக்கத்தக்க நபர் ஒருவர் அதே ரயிலில் பயணம் செய்து வந்துள்ளார்.
அப்பொழுது, அந்த நபர் சரிதா தனியாக இருந்தபோது முதலில் பேச்சு கொடுத்துள்ளார். தொடர்ந்து, அந்த பெண் பேச மறுக்கவே, அந்த நபர் அத்துமீறி, தவறாக நடந்து கொள்ளத் தொடங்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் பதிலுக்கு அந்த நபரை அறைந்துள்ளார். இதனால் கோபமடைந்த அந்த நபர் பெண்ணை ரயிலில் இருந்து தூக்கி வீசியுள்ளார். இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை அதிகாலை நடந்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக, "உத்தரப் பிரதேசத்தின் பந்தா மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயது இளம் பெண் ஒருவர் மத்தியப் பிரதேச மாநிலம் கஜ்ராஹோவில் இருந்து உத்தரப் பிரதேச மாநிலம் மஹோபா வரை செல்லும் பயணிகள் ரயிலில் கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி பயணம் செய்துள்ளார்.
இவர் மத்தியப் பிரதேச மாநிலத்தில் சத்தார்பூருக்கு தனது தனிப்பட்ட வேலைக்காக சென்றுவிட்டு தனது சொந்த ஊரான பந்தாவுக்கு திரும்பியுள்ளார். அப்பொழுது, அதே காம்பார்ட்மென்ட்டில் இருந்த 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் இவரை பாலியில் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார். அந்த நேரத்தில் இளம்பெண் அவரை தடுக்க முயன்றாலும், அவர் வீடாமல் தொடர்ந்து துன்புறுத்தியபோது, பெண் இவரை தாக்கியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த நபர், ஓடும் ரயிலில் இருந்து அந்த பெண்ணை வீசியுள்ளார். இவர் கஜ்ரஹோ அருகே உள்ள ராஜ்நகர் என்ற பகுதியில் விழுந்துள்ள நிலையில், அப்பகுதி மக்கள் இவரை மீட்டு மருத்துமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது அந்த பெண் சத்தார்பூர் மாவட்ட மருத்துமனையில் சிகிச்சை பெற்று, உடல்நிலை தேறி வருகிறார்” என காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் குற்றவாளியை கண்டறிந்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்