Watch Video: கர்னல் ஹர்ஜிந்தர் சிங் தகனம்.. இறுதி சடங்குகள் ஆற்றி உடலை எரியூட்டிய மகள்.. உருக்கிய காட்சிகள்
நீலகிரி மாவட்டத்தில் நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த லெப்டினண்ட் கர்னல் ஹர்ஜிந்தர் சிங்கின் உடலுக்கு இறுதி சடங்கு நிகழ்வு நடந்தது.
![Watch Video: கர்னல் ஹர்ஜிந்தர் சிங் தகனம்.. இறுதி சடங்குகள் ஆற்றி உடலை எரியூட்டிய மகள்.. உருக்கிய காட்சிகள் Lt Colonel Harjinder Singh, who died in Tamil Nadu chopper crash, last rites done at Brar Square Watch Video: கர்னல் ஹர்ஜிந்தர் சிங் தகனம்.. இறுதி சடங்குகள் ஆற்றி உடலை எரியூட்டிய மகள்.. உருக்கிய காட்சிகள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/12/4a6eb03fb23fa14f702ec14cee6aed00_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நீலகிரி மாவட்டம், குன்னூர் காட்டேரி பகுதியில் முப்படைகளின் ராணுவ தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பிபின் ராவத் உட்பட அவருடன் இருந்த 13 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். விமானத்தில் சென்ற 14 பேரில் 13 பேர் உயிரிழந்த நிலையில், ராணுவ வீரர் வருண் சிங் மட்டும் பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்த நிலையில் விபத்தில் உயிரிழந்த லெப்டினண்ட் கர்னல் ஹர்ஜிந்தர் சிங்கின் உடலுக்கு, டெல்லி ப்ரார் சதுக்கத்தில் இறுதி சடங்கு செய்யப்பட்டது.
இந்த இறுதி சடங்கை அவரது மகள் ப்ரீத் கவுர் செய்தார். இந்த சடங்கில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ராணுவ வீரர்கள் கலந்து கொண்டு மரியாதை செய்தனர். உத்திரபிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்தவர் ஹர்ஜிந்தர் சிங். பிபின் ராவத் பணியாற்றிய 11 கூர்க்கா ரைஃபிள்ஸ் படைப்பிரிவில் பணியாற்றிய இவர் சியாச்சின் பனிப்பாறை போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.
#WATCH | Daughter of Lt Colonel Harjinder Singh, who died in the Tamil Nadu chopper crash, performs his last rites at Brar Square in New Delhi pic.twitter.com/RDY58ZIDj7
— ANI (@ANI) December 12, 2021
மேலும் படிக்க..
Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..
இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..
Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?
முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!
Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..
மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ
மேலும் படிக்க..
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)