மேலும் அறிய

No Confidence: மோடி அரசுக்கு நெருக்கடியா? நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்ற மக்களவை சபாநாயகர்.. அடுத்து என்ன?

அனைத்துத் தரப்பினருடனும் கலந்தாலோசித்த பிறகு நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த விவாதத்திற்கான தேதி மற்றும் நேரம்  நிர்ணயிக்கப்படும் என்றும் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.

மணிப்பூர் விவகாரம் நாடாளுமன்றத்தில் தொடர் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. பழங்குடி பெண்களுக்கு நேர்ந்த கொடூரம் முதல் மனதை உலுக்கும் வகையில் மணிப்பூர் தொடர்பாக நாளுக்கு நாள் வெளியாகும் செய்திகள் வரை, அனைத்துமே மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

முடங்கி போன நாடாளுமன்றம்:

கடந்த வியாழக்கிழமை தொடங்கிய நாடாளுமன்றம், இதன் காரணமாக முடங்கி போயுள்ளது. மணிப்பூர் பிரச்னை தொடர்பாக இரு அவைகளிலும் பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக நீண்ட விவாதம் நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், குறுகிய கால விவாதத்திற்கு மட்டுமே ஆளுங்கட்சி சம்மதித்துள்ளது.

இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள், ஆளுங்கட்சிக்கிடையே ஒரு மித்த கருத்து ஏற்படாததால் பிரதமர் மோடிக்கு எதிராக இந்தியா (எதிர்க்கட்சிகள் கூட்டணி) கூட்டணி சார்பில் காங்கிரஸ் இன்று மதியம் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தது. விதிகளின் படி நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்ய 50 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

மோடி தலைமையிலான அரசுக்கு நெருக்கடியா?

அதன்படி, காங்கிரஸ் எம்பி கவுரவ் கோகோய் தாக்கல் செய்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி, தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா உள்ளிட்ட 50 எம்பிக்கள் ஆதரவு தெரிவித்ததையடுத்து, தீர்மானம் ஏற்கப்பட்டதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.

அனைத்துத் தரப்பினருடனும் கலந்தாலோசித்த பிறகு நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த விவாதத்திற்கான தேதி மற்றும் நேரம்  நிர்ணயிக்கப்படும் என்றும் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.

மக்களவையில் பெரும்பான்மை இல்லாத போதிலும், மோடி தலைமையிலான அரசுக்கு நெருக்கடி தரும் வகையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

அடுத்து என்ன?

நாடாளுமன்றத்தில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதில் அளிப்பார் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும், நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்ததன் மூலம் மணிப்பூர் குறித்து பதில் அளிக்கும் நிலைக்கு பிரதமர் மோடி தள்ளப்படுவார் என எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.

இதுகுறித்து மக்களவை காங்கிரஸ் கொறடா மாணிக்கம் தாகூர் கூறுகையில், "இந்தியா கூட்டணி ஒன்றாக உள்ளது. நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவது குறித்து இந்தியா கூட்டணி நேற்று முடிவு செய்தது. மோடியின் ஆணவத்தை உடைக்க நினைத்தோம். அவர் திமிர் பிடித்தவர் போல் நடந்து கொள்கிறார்.

நாடாளுமன்றத்திற்கு வந்து மணிப்பூர் பற்றி அளிக்க மறுக்கிறார். இந்த கடைசி ஆயுதத்தைப் பயன்படுத்துவது நமது கடமை என்று நாங்கள் உணர்கிறோம்" என்றார்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"பிரஷர் தாங்கல" மாணவர்களை பலி கேட்கும் நுழைவுத் தேர்வுகள்.. கோட்டாவில் மீண்டும் தற்கொலை!
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
Embed widget