LeT terrorist Adil Parray killed: காஷ்மீரில் கடந்த 24 மணிநேரத்தில் 5 பேர்.. 6 மாதத்தில் 100 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மற்றும் குல்காம் பகுதிகளில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக காவல்துறைக்கு கிடைத்த தகவலின்பேரில் பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
ஜம்மு காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மற்றும் குல்காம் பகுதிகளில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக காவல்துறைக்கு கிடைத்த தகவலின் பேரில் பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த ஜூனைத் ஜுனைத் ஷீர்கோஜ்ரி என்ற பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். கடந்த மாதம் ஜம்மு காஷ்மீரின் காவல் அதிகாரி ரியாஸ் அகமது கொல்லப்பட்ட வழக்கில் ஜூனைத் தேடப்பட்டு வந்தான்.
LeT #terrorist Adil Parray of #Ganderbal who was involved in #killing of 02 JKP personnel Gh Hassan Dar in Sangam & Saifulla Qadri in Anchar Soura and injuring a 9 year old girl, killed in a chance #encounter with a small team of Police: IGP Kashmir@JmuKmrPolice https://t.co/cLDVGUDlbJ
— Kashmir Zone Police (@KashmirPolice) June 12, 2022
இதேபோல் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போது இருதரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சூடு சண்டை நடைபெற்றது. இதில் நடத்தப்பட்ட என்கவுண்டரில் புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்த ஃபாசில் நசீர் பட் மற்றும் இர்பான் அஹ் மாலிக் இருவரும் கொல்லப்பட்டனர். இவர்களும் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என கண்டறியப்பட்டது. மேலும் ஏகே 47 ரக துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் போன்றவற்றை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.
100 terrorists (71 local & 29 foreign) killed in different encounters in 5 months & 12 days this year in 2022. 50 terrorists (49 local & 01 foreign) were killed last year in 2021 in the same duration. Maximum losses to LeT (63) and JeM (24) terror outfits: IGP Kashmir
— Kashmir Zone Police (@KashmirPolice) June 13, 2022
இதனைத் தொடர்ந்து ஸ்ரீநகரின் க்ரீஸ்பால் பால்போரா சங்கம் பகுதியில் நடைபெற்ற என்கவுண்டர் தாக்குதலில் அடில் பர்ரே என்ற பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார். அடில் சமீபத்தில் 2 போலீஸ் அதிகாரிகளை கொன்ற நிலையில், அதில் ஒருவரது மகளை காயப்படுத்திய வழக்கில் தேடப்பட்டான்.
இதன்மூலம் கடந்த 24 மணி நேரத்தில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த என்கவுண்டர்கள் மூலம் அங்கு இந்தாண்டு மட்டும் 71 உள்ளூர் மற்றும் 29 வெளிநாட்டு பயங்கரவாதிகள் உட்பட 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக காஷ்மீர் போலீசார் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. 2021 ஆம் ஆண்டில் 50 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.