Kochi Metro: இன்று ஒரு நாள் மட்டும் 5 ரூபாயில் பயணம் செய்யலாம் - கொச்சி மெட்ரோ ரயில் அறிவிப்பு: காரணம் என்ன?
Kochi Metro: கொச்சி மெட்ரோ இரயிலில் இன்று ஒரு நாள் மட்டும் 5 ரூபாயில் பயணிக்கலாம். ஏன்னு தெரிஞ்சிக்கோங்க.
கேரள மாநிலம் கொச்சி முழுவதும் இன்று ஒருநாள் மட்டும் மெட்ரோ ரயிலில் 5 ரூபாய் கட்டணம் செலுத்தில் பயணிக்கலாம் என்று கொச்சி மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கொச்சி மெட்ரோ சேவை தொடங்கப்பட்டு ஐந்தாண்டுகள் நிறைவடைந்திருக்கிறது. இதைக் கொண்டாடும் வகையில், முதன் முதலில் இச்சேவை தொடங்கப்பட்ட தினத்தில் மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் பயணிக்க ஏற்பாடு செய்திருக்கிறது. கடந்த 2017 ஆம் ஆண்டில் கொச்சி மெட்ரோ இதே நாளில் (17 ஜூன்) தன் முதல் பயணத்தை தொடங்கியது. ஐந்தாண்டுகள் கடந்தும் மக்களும் பெரும் பயண நேரத்தை குறைக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது.
KMRL celebrating the 5th anniversary on 17th June 2022 & on 17th June, a fare of ₹5 will be charged for the travel of any distance using QR ticket & Kochi1 card. For trip pass commuters, trip will be deducted for each journey & will get the difference amount through cash back. pic.twitter.com/frPOrH9vFF
— Kochi Metro Rail (@MetroRailKochi) June 14, 2022
கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கொச்சியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து நகரின் எந்த பகுதிக்கும், எவ்வளவு தூரம் என்றாலும் ரூ.5 கட்டணத்தில் பயணிக்கலாம என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், எந்த பகுதிக்கு மெட்ரோ ரயிலை பயன்படுத்தினாலும், கட்டணமாக ஐந்து ரூபாய் கொடுத்து மெட்ரோ பயணச் சீட்டை வாங்க்கிக்கொள்ளலாம். மெட்ரோ டிராவல் கார்டு, மெட்ரோ செயலியில் டிக்கெட் ரீஜார்ஜ் செய்வதவர்கள், ஆன்லைனில் டிக்கெட் ரீசார்ஜ் செய்தவர்கள் ஆகியோருக்கும் இந்த சலுகை பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. QR ticket மற்றும் Kochi1 கார்டு உபயோகிப்பவர்களுக்கு ஐந்து ரூபாய் போக மீதமுள்ள தொகை கேஷ்பேக்காக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
அனைவரும் மெட்ரோ இரயிலில் பயணிக்கும் வாய்ப்பையும், அனுபவத்தையும் பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த முடிவை எடுத்திருப்பதாக தெரிவித்துள்ளது.
பயணிகள் இந்தச் சலுகையை பயன்படுத்தி கொள்ளுமாறு கொச்சி மெட்ரோ நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்