மேலும் அறிய

Sabarimala : பங்குனி உத்திர திருவிழா...பம்பையில் ஐயப்பனுக்கு இன்று ஆராட்டு...யாருக்கெல்லாம் அனுமதி...?

கேரளா சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திரம் ஆராட்டு விழா கடந்த 27-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Sabarimala : கேரளா சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திரம் ஆராட்டு விழா கடந்த 27-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

சபரிமலை ஐயப்பன் கோயில்:

கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் அமைந்துள்ளது சபரிமலை. உலகப்புகழ்பெற்ற சபரிமலை கோயிலில் ஐயப்பனை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். நடப்பாண்டிற்கான மகரஜோதியை தரிசிப்பதற்காக கடந்த 14-ஆம் தேதி லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

இதேபோன்று,  ஒவ்வொரு தமிழ் மாத தொடக்கத்திலும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும். அதன்படி பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் கடந்த மாதம் 26ஆம் தேதி திறக்கப்பட்டது.  இதையடுத்து, 27ஆம் தேதி கொடியேற்றதுடன் தொடங்கி 10 நாட்கள் பங்குனி உத்திர திருவிழா நடைபெற உள்ளது. பத்து நாள் நடைபெற உள்ள விழாவுக்கான கொடியை  கடந்த 27ஆம் தேதி தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார். 

இன்று ஆராட்டு விழா

இந்நிலையில், திருவிழாவில் இறுதி நாளான இன்று பகல் 11.30 மணிக்கு பம்பையில் ஆராட்டு விழா நடைபெறுகிறது. இதற்காக அலகரிக்கப்பட்ட யானை மீது ஐயப்பனை அமர வைத்து மேளதாளம் முழங்க காலை 8 மணிக்கு சன்னிதானத்தில் இருந்து ஊர்வலம் புறப்படுகிறது. பம்பை ஆற்றில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் ஐயப்ப சாமிக்கு ஆராட்டு நடைபெறுகிறது.

அதனைத் தொடர்ந்து பகல் 1 மணிக்கு பம்பை கணபதி கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு பின் சாமி ஊர்வலமாக சென்று மாலை 5 மணிக்கு சன்னிதானத்தை வந்தடைகிறது. அங்கு கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு தீபாரதனை நடைபெற்று, கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா இன்றுடன் நிறைவு பெறுகிறது.

பங்குனி உத்திரம் சிறப்பு ஏன்?

பங்குனி மாதத்தில் சபரிமலை ஐயப்பனுக்கு பம்பா நதிக்கரையில் நடைபெறும் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழாவில் பாரபட்சமில்லாமல், அனைத்து வயதுடைய பெண்களும் கலந்துகொண்டு சபரிமலை ஐயப்பனை கண் குளிர தரிசிக்கலாம். ஐயப்பனை பெண்களும் தரிசிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் ஆராட்டு திருவிழா நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. 

இதனிடையே, ஆன்லைனில் முன்பதிவு செய்யாத பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கும் வகையில், நிலக்கல் மற்றும் பம்பையில் உடனடி முன்பதிவு செய்யும் வசதியும் செய்யப்பட்டுள்ளது என தேவசம்போர்டு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் https://sabarimalaonline.org/#/login எனும் இணையதள முகவரியில் தரிசனத்திற்கான முன்பதிவை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

மேட்டூர் அணையின் நீர்வரத்து 1,561 கன அடியில் இருந்து 1,572 கன அடியாக அதிகரிப்பு.

CM Stalin: சிங்காரச் சென்னை என்பது நான் மேயராக முன்வைத்த முழக்கம் - வீடியோ வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Dhanush :  நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய்.. தனுஷ் அதிரடி..
Dhanush : நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய்.. தனுஷ் அதிரடி..
Lok Sabha Election 2024 LIVE: ஆந்திராவில் மதியம் 3 மணி வரை 55 சதவீத வாக்குப்பதிவு..!
Lok Sabha Election 2024 LIVE: ஆந்திராவில் மதியம் 3 மணி வரை 55 சதவீத வாக்குப்பதிவு..!
Savukku Sankar: சவுக்கு சங்கரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
சவுக்கு சங்கரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
CBSE Class 10th Result: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளும் வெளியீடு; 93.6% தேர்ச்சி- காண்பது எப்படி?
CBSE Class 10th Result: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளும் வெளியீடு; 93.6% தேர்ச்சி- காண்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Ramdoss : மோடியின் சர்ச்சை பேச்சு எஸ்கேப்பான ராமதாஸ் முஸ்லீம் குறித்து பேசியது சரியா?Pondichery : பாண்டிச்சேரியில் 1 நாள்...150 ரூபாய் PACKAGE இத்தனை இடங்களா?Felix Gerald Arrest :  கணவரை தேடிய மனைவி போலீஸ் வேனில் Felix திடீர் திருப்பம்KPY Bala :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Dhanush :  நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய்.. தனுஷ் அதிரடி..
Dhanush : நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய்.. தனுஷ் அதிரடி..
Lok Sabha Election 2024 LIVE: ஆந்திராவில் மதியம் 3 மணி வரை 55 சதவீத வாக்குப்பதிவு..!
Lok Sabha Election 2024 LIVE: ஆந்திராவில் மதியம் 3 மணி வரை 55 சதவீத வாக்குப்பதிவு..!
Savukku Sankar: சவுக்கு சங்கரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
சவுக்கு சங்கரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
CBSE Class 10th Result: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளும் வெளியீடு; 93.6% தேர்ச்சி- காண்பது எப்படி?
CBSE Class 10th Result: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளும் வெளியீடு; 93.6% தேர்ச்சி- காண்பது எப்படி?
Box Office Prediction : இந்த ஆண்டு ரூ.100 கோடி வசூலை எடுக்கப்போகும் முதல் தமிழ் படம் எது?
இந்த ஆண்டு ரூ.100 கோடி வசூலை எடுக்கப்போகும் முதல் தமிழ் படம் எது?
Andhra Assembly Election: பளார்! வரிசையில் நிற்காத எம்.எல்.ஏ.வுக்கு கன்னத்திலே அறை விட்ட வாக்காளர் - நீங்களே பாருங்க
Andhra Assembly Election: பளார்! வரிசையில் நிற்காத எம்.எல்.ஏ.வுக்கு கன்னத்திலே அறை விட்ட வாக்காளர் - நீங்களே பாருங்க
North Korea Rules: ரெட் லிப்ஸ்டிக், நீல கலர் ஜீன்ஸ் போட்டால் வழக்கு - வடகொரியாவில் எதற்கெல்லாம் தடை தெரியுமா?
ரெட் லிப்ஸ்டிக், நீல கலர் ஜீன்ஸ் போட்டால் வழக்கு - வடகொரியாவில் எதற்கெல்லாம் தடை தெரியுமா?
போலீஸ் வீட்டிலேயே கொள்ளை... பொதுமக்களுக்கு எங்கே பாதுகாப்பு இருக்கும்? - ஆர்.பி.உதயகுமார் கேள்வி
போலீஸ் வீட்டிலேயே கொள்ளை... பொதுமக்களுக்கு எங்கே பாதுகாப்பு இருக்கும்? - ஆர்.பி.உதயகுமார் கேள்வி
Embed widget